Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சீர்காழி நகராட்சிப் பகுதியில் அனுமதியற்ற வீட்டு மனைகளை வாங்க வேண்டாம்:ஆணையர்

Print PDF

தினமணி                   10.11.2010

சீர்காழி நகராட்சிப் பகுதியில் அனுமதியற்ற வீட்டு மனைகளை வாங்க வேண்டாம்:ஆணையர்

சீர்காழி, நவ 9: சீர்காழி நகராட்சிப் பகுதியில் அனுமதியற்ற வீட்டு மனைகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என நகராட்சி ஆணையர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது:

சீர்காழி நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நகராட்சிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாகிவரும் நகராட்சி, நகர ஊரமைப்பு துறை அனுமதியற்ற மனைப்பிரிவுகளான திட்டை ரோடு பகுதியில் உள்ள சன் சிட்டி நகர், பனங்காட்டாங்குடி சாலையில் உள்ள மதினா நகர், முத்து நகர், ஸ்ரீநகர் காலணி, ஸ்ரீ நகர் விஸ்தரிப்பு 1,2,3,4.திருக்கோலக்காவில் உள்ள யுனிவர்சல் நகர், புறவழிசாலையில் உள்ள ராஜீவ் நகர், கோவில்பத்து பகுதியில் உள்ள வி..பி நகர் மற்றும் ஜம்.ஜம் நகர், பனங்காட்டு தெரு சாலையில் உள்ள கதிர்வேல் நகர், நங்கநல தெருவில் உள்ள சீனிவாச நகர்,பெத்தடி தெரு அருகில் உள்ள தஸ்வினி நகர், விளந்திரசமுத்திரம் ஜெயின் நகர் அருகில் உள்ள தாய் நகர், தாடாளன் வடக்கு வீதியில் உள்ள தாய் நகர் ஆகிய மனைபிரிவுகளில் பொதுமக்கள் மனைகள் ஏதும் வாங்கி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ஏனெனில், மேற்படி நகராட்சி, நகர ஊரமைப்பு துறை அனுமதியற்ற மனைபிரிவுகளில் உள்ள மனைகளுக்கு நகராட்சியால் கட்டிட அனுமதி மறுக்கப்படுவதோடு, அடிப்படை வசதியான சாலை, குடிநீர், தெருவிளக்கு ஆகியன செய்யப்படமாட்டாது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி மனைப்பிரிவு உரிமையாளர்கள் மீது 1920-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பிரிவு 175,176,177 மற்றும் 313ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துகொள்வதோடு, பொதுமக்கள் அனுமதியற்ற மனைபிரிவுகளை புறக்கணித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.