Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியற்ற கட்டிடங்கள் நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும்

Print PDF

தினகரன்             22.11.2010

அனுமதியற்ற கட்டிடங்கள் நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும்

புதுடெல்லி, நவ. 22: அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதற்கு போலீஸ் ஒத்துழைக்க வேண்டும் என்று பணிக்குழு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லட்சுமி நகரில் உள்ள லலிதா பார்க்கில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 70 பேர் பலியானார்கள். இந்தக்கட்டிடத்தில் 2 மாடிகள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது அம்பலத்துக்கு வந்தது. அனுமதியின்றி கட்டிய தளங்களுக்காக மாதந்தோறும் மாநகராட்சி அதிகாரிகள், போலீசாருக்கு கட்டிட உரிமையாளர் அம்ரித்பால் சிங் லஞ்சம் கொடு த்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மாநகராட்சி மும்முரமாக உள்ளது. இதுபற்றி மாநகராட்சியின் பணிக்குழு தலைவர் ஜக்தீஷ் மேம்கெய்ன் கூறியதாவது:

அனுமதியற்ற கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் துணையின்றி செய்ய முடியாது என்பது பொதுமக்களிடையே பரவலாக இருக்கும் கருத்தாக உள்ளது. அதை பயன்படுத்தி பணம் வசூலிக்கிறார்கள் என்பதும் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. சில லஞ்ச அதிகாரிகளால் மாநகராட்சி மற்றும் போலீஸ் இரண்டின் மீதும் ஒட்டுமொத்தமாக கறை ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் செல்வதற்கு முன்பாகவே, அதுபற்றிய தகவலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு உள்ளூர் போலீசார் தெரிவித்து விடுகின்றனர். போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தால் அங்கு ஆக்கிரமிப்பு எதுவும் இருக்காது.

அனுமதியற்ற கட்டிடங்கள், அரசு நிலங்கள்&சாலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்றும் நடவடி க்கை தொடர்பான மாநகராட்சியின் நடவடிக் கைகளுக்கு போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கு போலீஸ் கமிஷனர் பிரிஜேஷ் குமார் குப்தா உறுதியளிக்க வேண்டும். அனுமதியற்ற கட்டிடங்களின் உரிமையாளர்கள், ஆக்கிரமிப்ப £ளர் களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது கமிஷனர் நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்புகிறோம். சட்டவிரோதமாக கட்டப்பட்டு ள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளில் போலீசாருக்கு உள்ள தொடர்பு பற்றி உரிய விசாரணைக்கு கமிஷனர் உத்தரவிட வேண்டும் என்றார்.