Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நரேலா துணை நகரம் டெல்லி மேம்பாட்டு ஆணைய திட்டத்துக்கு அனுமதி நிறுத்தம்

Print PDF

தினகரன் 23.11.2010

நரேலா துணை நகரம் டெல்லி மேம்பாட்டு ஆணைய திட்டத்துக்கு அனுமதி நிறுத்தம்

புதுடெல்லி, நவ. 23: நரேலா துணை நகரத்தில் குடியிருப்பு பகுதியை கொண்டு வருவது உள்ளிட்ட டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி.டி..) 6 திட்டத்துக்கு மாநில நிபுணர்கள் மதிப்பீட்டு குழு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது.

டி.டி.. சார்பில் நரேலா துணை நகரத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி, செக்டர் ஜி2 மற்றும் ஜி6, ஜி7 மற்றும் ஜி8 திட்டம், நரேலா மேம்பாட்டு பகுதி 12, நரேலா மேம்பாட்டு பகுதி 12ல் ஒருங்கிணைந்த கட்டண காம்பளக்ஸ், செக்டர் ஜி3, ஜி4 ஆகியவற்றில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக மாநில நிபுணர்கள் மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், டி.டி.. தன்னுடைய திட்டங்களில் மண்டல மேம்பாட்டு திட்டங்களை பற்றி குறிப்பிடப்படவில்லை என்று கூறி, இதற்கு அனுமதி வழங்குவதை குழு நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து குழுவின் அதிகாரிகள் கூறுகையில், "திட்டத்தை தயாரிப்பவர்கள் முதலில் மண்டல மேம்பாட்டு திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதியை பெற வேண்டும். அதை தொடர்ந்து ஒவ்வொரு துறை வாரியாக அனுமதி பெற வேண்டும். இறுதியாகத்தான் நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழுவுக்கு வரவேண்டும்" என்றார்.