Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமுறைகளை மீறிய கட்டடங்களுக்கு நோட்டீஸ் ஊரமைப்பு இயக்குநர் உத்தரவு

Print PDF

தினகரன்            24.11.2010

விதிமுறைகளை மீறிய கட்டடங்களுக்கு நோட்டீஸ் ஊரமைப்பு இயக்குநர் உத்தரவு

திருச்சி, நவ. 24: விதிமுறைகளை மீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸை ஒரு வாரத்துக்குள் அனுப்ப நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் உத்தரவிட்டுள்ளார். விதிமுறை மீறலை ஒரு மாதத்துக்குள் சரிசெய்யாவிட்டால் சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நகர் ஊரமைப்புத்துறை தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு மற்றும் உள்ளூர் திட்டக்குழுமம் தொடர்பாக தங்களின் குறைகளை பலர் நேற்று தெரிவித்தனர்.

திருச்சி எழில்நகர் குடியிருப்போர் வளர்ச்சி மன்றத்தினர் இயக்குனர¤டம் கூறுகையில், திருவெறும்பூர் தாலுக்கா கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் எழில்நகர் உள்ளது. மக்கள் பயன்பாட்டுக்காக அரசால் ஒதுக் கப்பட்ட பொது இடங்களை சிலர் விற்கின்றனர். மனை போட்டு விற்க கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சித் தலைவர் அனுமதி தந்துள்ளதாக தெரிகிறது. அதை ரத்து செய்ய வேண்டும். பொது இடம் மக்கள் பயன்பாட்டுக்கு பயன்பட வேண்டும் என்று தெரிவ¤த்தனர். இதுதொடர்பாக ஏராளமானோர் மனு தந்தனர். இதுதொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு இணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

அதேபோல் பூனாம்பாளையத்தில் மனை வரைப்பட அனுமதி பெறாமல் மனை விற்பனை செய்யப்படுவதாக புகார் தரப்பட்டதையும் விசாரிக¢குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத் தினார். அதன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: லே&அவுட்டில் குறிப்பிடப்பட்ட பொது இடத்தை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், பொது இடத்தை அப்பகுதி உள்ளாட்சி அமைப்பின் பெயரில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் லே&அவுட்டுக்கு அனுமதி தருகிறோம். பொது இடத்தை விற்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம். நகர் ஊரமைப்புத்துறை சட்டப்பிரிவு 56, 57ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

திருச்சியில் வணிகக் கட்டடங்கள் கட்ட வரைபட அனுமதி வழங்கும்போது வாகனங்கள் நிறுத்தும் இடம் குறிப்பிட்ட இடத்தில் கடைகள் தற்போது நடப்பதாக தெரிகிறது. அதேபோல் அனுமதி பெற்றதை விட கூடுதலாக தளங்கள் கட்டப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறியுள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப் பப்படும். ஒருவாரத்துக்குள் இந்த நோட்டீஸை திருச்சி நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அனுப்புவார். நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஒரு மாதத்துக்குள் விதிமீறலை சரிசெய்யவேண்டும். இல்லாவிட்டால் அந்நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

கூடுதல் அதிகாரம்:

உள்ளாட்சி அமைப்புகள் 4 ஆயிரம் சதுர அடி வரை வீடுகளுக்கும், 2000 .அடி வரை வணிக நிறுவனங்கள் கட்டடம் கட்ட அனுமதி தரலாம். நகர¢ ஊரமைப்புதுறையானது 15 ஆயிரம் ச.அடி வரை வீடுகளுக்கும், 12 ஆயிரம் சதுர அடி வரை வணிக நிறுவனங்கள் கட்டவும், 5 ஏக்கர் வரை லே&அவுட்டுக்கும் அனுமதி தர முடியும். இவற்றுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமிட்டு ஆராய்ந்து வருகிறோம்.

விரைவாக தருவோம்:

நகர் ஊரமைப்பு துறையில் அப்ரூவலை தாமதம் இல்லாமல் விரைந்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது விதிமுறை மீறலையும் கண்காணித்து நடவடிக்கை எடுக¢க உள்ளோம் என்று தெரிவித்தார்.