Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் 40 இடங்களில் புதிய மணிக்கூண்டு

Print PDF
தமிழ் முரசு                  29.04.2013

சென்னையில் 40 இடங்களில் புதிய மணிக்கூண்டு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: சென்னை நகரில் புதிதாக 40 இடங்களில் மணிக்கூண்டுகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.மன்னர்கள் காலத்தில் காலத்தை அறிய பறையறிவித்தல் முறை இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் பொதுவான இடத்தில் மணிக்கூண்டுகள் கட்டப்பட்டு பிரமாண்ட கடிகாரங்கள் வைக்கப்பட்டன. அதிலிருந்து எழும் மணி சத்தத்தை கேட்டு மக்கள் தங்கள் அன்றாட பணிகளை தொடங்கினர். காலப்போக்கில் மணிக்கூண்டில் மணி பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. மணிக்கூண்டுகளை பராமரிக்காததால் அதன் உபயோகமும் குறைந்தது. ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட முறை என்ற நிலையில் பாரம்பரியம் கருதியும், நகரின் லேண்ட் மார்க் என்ற நிலையிலும் மணிக்கூண்டுகள் இன்றளவும் பாதுகாக்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டு கடந்த 1913 ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதேபோல சென்ட்ரல் ரயில் நிலையம், மின்ட், ராயப்பேட்டை, தண்டையார்பேட்டை, டவுட்டன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணிக்கூண்டுகள் அப்போதே அமைக்கப்பட்டு இன்றளவும் பராமரிக்கப்படுகின்றன. பாரம்பரிய அடையாள சின்னமாக இவை விளங்குகின்றன.சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 40 இடங்களில் புதிதாக மணிக்கூண்டுகள் அமைய உள்ளன. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சென்னை நேப்பியர் பாலம், மே தின பூங்கா, நடேசன் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த மணிக்கூண்டுகள் அமைக்கப்பட உள்ளன.