Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் அனுமதியில்லாமல் கட்டிய 100 கட்டிடத்துக்கு "நோட்டீசு"

Print PDF

மாலை மலர் 24.11.2009

சென்னையில் அனுமதியில்லாமல் கட்டிய 100 கட்டிடத்துக்கு "நோட்டீசு"

சென்னை மாநகரத்தில் வீடுகள், வணிக நிறு வனங்கள், வியாபார கடைகள் கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம். டி..) விதிமுறைகளை வகுத் துள்ளது. அதன்படிதான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.

ஆனால் சிலர் விதிமுறை களுக்கு மீறி அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டுவதை சி.எம்.டி.. தக்க நடவடிக்கை எடுத்து முறைப்படுத்தி வருகிறது. கடந்த மாதம் தியாகராய நகரில் விதிமுறையை மீறி கட்டிய ஒரு நிறுவனத்துக்கு "சீல்" வைக்கப்பட்டது. தாம்பரம் அருகே விதி முறைகளை மீறி கட்டிய வீடுகளுக்கும் சி.எம்.டி.. சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது.

இது போல தினமும் பல கட்டிடங்களை கண்டறிந்து "சீல்" வைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது சென்னை நகரில் விதிமுறை மீறி அனுமதி பெறாமல் கட் டப்பட்ட வீடுகள், வணிகப் பகுதிகளை சி.எம்.டி.. கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சி.எம்.டி.. மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தற்போது 100-க்கும் மேற் பட்ட கட்டிடங்கள் விதி முறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் டில் வழக்கு உள்ளது. இதனால் இடிக்க முடியாத நிலை உள்ளதால் அதை பயன்படுத்த கூடாது என்பதற்காக பூட்டி சீல் வைத்து வருகிறோம். 100 கட்டிடங்களும் குடியிருப்பு மற்றும் வணிக பகுதியாகும். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Tuesday, 24 November 2009 11:25