Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

நிபந்தனையுடன் கட்டட அனுமதி: புதுவிதியால் பொதுமக்கள் அதிருப்தி

Print PDF

தினமலர்                19.11.2010

நிபந்தனையுடன் கட்டட அனுமதி: புதுவிதியால் பொதுமக்கள் அதிருப்தி

"ரத்து செய்யப்படலாம்' என்ற புதுவிதமான நிபந்தனையுடன் மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது; இதற்கு, மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. தமிழகத்தில் கட்டடங்களுக்கு அனுமதி வழங்க பெற அடுக்கு அதிகார அமைப்புகள் உள்ளன; சிறிய வகை கட்டடங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி வழங்கலாம். அதற்கு மேற்பட்ட பெரிய மற்றும் வணிக கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக்குழுமம், மலையிட பாதுகாப்புக் குழுமம் அல்லது நகர ஊரமைப்புத் துறை துணை இயக்குனர் அலுவலகங்கள் அனுமதி வழங்கலாம்.

அதற்கும் மேற்பட்ட பல அடுக்கு மாடி கட்டடங்களுக்கு சென்னை நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் மட்டுமே அனுமதி வழங்க முடியும். இவற்றில், உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி கோரும் விண்ணப் பங்களே அதிகம்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கட்டும் வீடுகள் அனைத்துக்கும் கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அமைப்புகளுக்கே உண்டு.இதுநாள் வரையிலும், அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது ஆகிய இரு பணிகளை மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் செய்து வந்தன. சமீபகாலமாக, "கட்டடம் கட்டப்படும் இடம், பொது ஒதுக்கீட்டு இடமாகவோ, வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட அரசுத்துறைகள் கையகப்படுத்திய நிலமாகவோ இல்லாதவரையிலுமே இந்த அனுமதி செல்லும்' என்ற புதுவித நிபந்தனையுடன் வரைபட அனுமதி வழங்கப்படுகிறது.அத்துடன், "அத்தகைய இடமாக இருந்தால், வரைபட அனுமதி ரத்து செய்யப்படும்' என்ற நிபந்தனையும் அதில் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிபந்தனை அனுமதி, பொது மக்களுக்கு பெரும் குழப்பத்தையும், பிரச்னைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டடம் கட்டப்படும் இடம், பொது ஒதுக்கீட்டு இடமா அல்லது அரசுத்துறை கையகப்படுத்திய நிலமா என்பதை உறுதி செய்ய வேண்டியது உள்ளாட்சி அமைப்புதான். நில உச்சவரம்புச் சட்டம், நில எடுப்புச் சட்டம், நிலச் சீர்திருத்தச் சட்டம் என பல்வேறு சட்டங்களின் அடிப்படையில், வகைப்படுத்தப்பட்ட நிலமா, இல்லையா என்பதை ஆய்வு செய்து, வருவாய்த்துறை சார்பில் தடையின்மைச் சான்று வழங்கிய பின்பே, லே-அவுட் அங்கீகாரம் கோரும் விண்ணப்பத்தை நகர ஊரமைப்புத்துறை ஏற்றுக்கொள்ளும்.

அதுமட்டுமின்றி ரோடு, பொது ஒதுக்கீட்டு இடம் ஆகியவற்றுக்கான இடங்களை சம்பந்தப்பட்ட உள் ளாட்சி அமைப்புக்கு தானப்பத்திரம் மூலமாக ஒப்படைத்த பின்பே, லே-அவுட்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். அரசுத்துறைக்கு கையகப்படுத்திய நிலம் இல்லை என்று தெரிந் தால் மட்டுமே, அந்த லே-அவுட்டுக்கான தொழில்நுட்ப அனுமதியை நகர ஊரமைப்புத்துறை வழங்கும்.ஆகமொத்தத்தில் பொது ஒதுக்கீட்டு இடம், அரசு கையகப்படுத்திய நிலம் போன்ற விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியதே உள்ளாட்சி அமைப்புகள்தான். ஆனால் அந்த அமைப்பை நிர்வகிக்கும் அதிகாரிகளே, இப்படியொரு நிபந்தனையுடன் கட்டட அனுமதி வழங்குவது, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை வெளிப்படுத்துகிறது.

"கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' செயலாளர் கதிர்மதியோன் கூறுகையில், ""சட்டத்தைப் பற்றியோ, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பற்றியோ எந்தக் கவலையுமே இல்லாமல் இப்படியொரு நிபந்தனையுடன் அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர். ""தவறுகளை தவிர்க்க வேண்டிய அதிகாரிகள், தவறுகளிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்கின்றனர். இது சட்ட விரோதம் என்பதோடு, மக்களை துன்புறுத்துவதாகும்,'' என்றார். கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக இடத்தை ஆய்வு செய்து, ஆவணங்களைச் சரி பார்த்து, முழு திருப்தியான பின் அனுமதி வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை; இத்தகைய அனுமதி வழங்குவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

மறைமுக ஆதரவு? : முறைப்படி உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற கட்டடங்களுக்கு மட்டுமே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளால் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது; ஆனால், இப்படிப்பட்ட நிபந்தனையுடன் அனுமதி வழங்கும் பட்சத்தில், வங்கி நிர்வாகங்கள் கடன் தருவதும் பெரும் சிக்கலாகும். "இந்த நிபந்தனை, பொதுஒதுக்கீட்டு இடங்களை வாங்கக்கூடாது' என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்குப் பதிலாக, இத்தகைய இடங்களை ஏமாற்றி விற்போருக்கு மறைமுகமாக துணை புரிவதைப்போல் உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

 

அனுமதியற்ற கட்டிடம் பற்றி தகவல் ஆணையர் புகார் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம்

Print PDF

தினகரன்                19.11.2010

அனுமதியற்ற கட்டிடம் பற்றி தகவல் ஆணையர் புகார் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம்

புதுடெல்லி, நவ. 19: லலிதா பார்க்கில் 5 மாடி கட்டிடம் இடிந்து 70 பேர் பலியானார்கள். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இந்த கோர சம்பவம் நடந்தது என்று தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், அதிர்ச்சி தகவலை தலைமை தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி வெளியிட்டுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் என்னிடம் விசாரணைக்காக வந்தபோது, டெல்லியில் ஏராளமான அனுமதியற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் & பில்டர்கள் இடையே ரகசிய தொடர்பு இருப்பது தெரிந்ததும் முதல்வர் ஷீலா தீட்சித், மாநகராட்சி கமிஷனர் மெஹ்ரா ஆகியோருக்கு கடந்த ஆண்டு நவம்பரில் கடிதம் எழுதினேன்.

முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ஷாதாரா தெற்கு மண்டலத்தில் மட்டும் 65 அனுமதியற்ற கட்டிடங்களின் பட்டியலை அனுப்பி வைத்தேன். மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறாமல் 4 மாடி வரையில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பில்டர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.

அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பான விவகாரத்தில் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து எந்த பலனும் விளையவில்லை. அனுமதியற்ற கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

அதனால் போலீசின் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் கடந்த ஆண்டு புகார் அளித்தேன். விசாரணை நடந்து கொண்டிருப்பதாக 2010 பிப்ரவரி 25ம் தேதியன்று உறுதிமொழியை லஞ்ச ஒழிப்புத்துறை அளித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

சைலேஷ் காந்தி புகார் அளித்துள்ளது பற்றி தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தாவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவி போலீஸ் கமிஷனர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கோர சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்.

 

அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள கோயில்கள் விவரம் சேகரிப்பு

Print PDF

தினகரன்                 16.11.2010

அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள கோயில்கள் விவரம் சேகரிப்பு

ஏழாயிரம்பண்ணை, நவ. 16: விருதுநகர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள் குறித்த விபரங்களை வருவாய் துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட் புறம்போக்கு நிலங்களில் உள்ள கோயில்களை கண்டறிந்து அவற்றை இடிக்க அல்லது முறைப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆக்கிரமிப்பு கோயில்கள குறித்து விபரங்கள் சேகரித்து கோர்ட்டுக்கு அறிக¢கை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி தம¤ழகத்தில் உள்ள ஆக¢கிரமிப்பு கோயில் கள் குறித்த விபரங்களை வருவாய் துறையினர் சேக ரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் 3800 கோயில்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதில் சிவகாசி தாலுகா பகுதியில் மட்டும் 600 கோயில்கள் உள்ளன. நீர்நிலை புறம்போக்கு, ஓடை புறம்போக்கு, பொது இடங்கள் அல்லது சாலையை ஆக்கிரமித்து இந்த கோயில்கள் கட்டப்பட்டுள்ளதா என வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள் வ¤பரம் சேகரித்து வருகின்றனர்.

இந்த விபரங்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக¢கு அனுப்ப வைக்கப்படவுள்ளது. கிராம பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கோயில்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டும், நகராட்சி பகுதி கோயில்களை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அகற்ற நடவடிக¢கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள கோயில்களை முறைப்படுத்த பட்டா வழங்க வேண்டும். அரசு சிறப்பு அனுமதி வழங்கினால் மட்டுமே புறம்போக்கில் உள்ள கோயில்களுக¢கு வருவாய் துறையினர் பட்டா வழங்க முடியும். எனவே ஆக்கிரமிப்பு அகற்றும்போது பிரச்னை ஏற்படும் கோயில்கள் குறித்த விபரங்களையும் வருவாய் துறையினர் சேகரித்து வருகின்றனர். இந்த தகவல்கள் அரசுக¢கு தெரிவிக்கப்பட்டு பிரச்னைக்குரிய கோயில்களுக்கு அரசின் அனுமதி பெற்று பட்டா வழங்கவும் வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக¢கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "புறம்போக்கு நிலங்களில் உள்ள கோயில்களை அகற்ற அல்லது பட்டா வழங்கி முறைப்படுத்த அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆக¢கிரமிப்பு கோயில்கள் குறித்த விபரங்கள் சேகரிக¢கும் பணி தற்போது நடைபெறுகிறது. இதில் பிரச்னைக்குரிய கோயில்களுக்கு பட்டா வழங்கவும், மற்ற ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்றவும் அரசுக¢கு பரிந்துரை செய்யப்படவுள்ளது என்றார்.

 


Page 35 of 96