Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு தடை: பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுரை

Print PDF

தினமலர்                     08.11.2010

அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு தடை: பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுரை

விருதுநகர்: மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளின் பதிவை தடை செய்ய பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளை நிலங்களை வீட்டுமனையாக பிரித்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கிராமப்புறங்களில் அங்கீகாரம் பெறாமல் விளை நிலங்களை வீட்டு மனைகளாக்கி விற்பதால் இவற்றை வாங்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக நகராட்சியை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகளில் இதுபோன்ற வீட்டுமனைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. 4,000 சதுர அடிக்குள் வீடுகள் கட்டினால் நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்திலும், அதற்கு மேல் இருந்தால் மதுரையில் உள்ள உள்ளூர் திட்ட குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். ஐந்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள நகர், ஊரமைப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிடம் மனைப்பிரிவுக்கு அனுமதி பெறும் பட்சத்தில் பூங்கா, ரோடு, வாறுகால் போன்ற வசதிகளுக்காக 10 சதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தானமாக வழங்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் பல இடங்களில் மீறி, வீட்டு மனைகள் விற்கப்படுகின்றன. இதுபோன்ற வீட்டு மனைகளுக்கு வருவாய்த்துறையினரும், பத்திரப்பதிவு அலுவலர்களும் கண்காணித்து பத்திரப்பதிவு செய்வதை தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டு மனை வாங்குபவர்களும், அரசு அங்கீகாரம் பெற்ற மனைகளை வாங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் கட்டிட அனுமதி வழங்கப்படாது நகராட்சி ஆணையர் தகவல்

Print PDF

தினகரன்                    08.11.2010

அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் கட்டிட அனுமதி வழங்கப்படாது நகராட்சி ஆணையர் தகவல்

பெரம்பலூர், நவ. 8: அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் எவ்வித மனை ஒப்புதல், கட்டிட அனுமதி வழங்கப்படாது என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

பெரம்பலூரில் கட்டு மான பொறியாளர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங் கேற்ற ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நடந்தது. நகரமைப்பு ஆய்வர் மருதுபாண்டியன், நிலஅளவையர் ஜெய ராமன் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா தலைமை வகித்து பேசியதாவது:

பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குள் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு விண் ணப்பிக்கும்போது காலி மனை ரசீது, நடப்பாண்டு வீட்டுவரி ரசீது, பத்திரநகல், பட்டா நகல், சர்வே வரை படம், சர்வே பதிவேடு நகல், புள்ளியியல் படிவம், 13 வருடம் வில்லங்க சான்றிதழ், வரைபடங்கள் 5, தமிழ்நாடு கட்டிட தொழிலா ளர் நல நிதிக்கான டிமாண்டு டிராப்ட் ஆகிய ஆவணங் கள் இணைக்க வேண்டும். மனுதாரர் அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவுகளில் அடங்கும் மனைகள், பழைய பஸ்ஸ்டாண்டு மற்றும் அணுகுசாலை உள்ள இடங்களில் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் எவ்வித மனை ஒப்புதல், கட்டிட அனுமதி வழங்கப்படாது. 4,000 சதுர அடிக்கு மிகாமல் தரை மற்றும் 2 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 2,000 சதுர அடியில் கட்டப்படும் தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட வணிக வளாகத்துக்கு மனுதாரர் விண்ணப்பித்தால் கட்டிட விதிகளுக்குட்பட்டிருந்தால் கட்டிட அனுமதி வழங்கப்படும் என்றார்.

நகராட்சி வளர்ச்சிப்பணி, சுகாதாரப்பணி, நகர் புனரமைப்பு, நகராட்சி எல்லைக்குட்பட்ட மனைகளின் வரன்முறை படுத்துதல், புதிய கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதித்து ஆலோசனை செய்யப்பட் டது. பெரம்பலூர் கட்டு மான பொறியாளர் சங்கத்தலைவர் கலைநாதன், செய லாளர் ஜோதிவேல், பொரு ளாளர் விஜயபாபு கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 08 November 2010 07:33
 

நகராட்சி பகுதியில் கட்டிடம் கட்ட 10 ஆவணம் சமர்பிக்க வேண்டும்

Print PDF

தினமலர்                  06.11.2010

நகராட்சி பகுதியில் கட்டிடம் கட்ட 10 ஆவணம் சமர்பிக்க வேண்டும்

பெரம்பலூர்: "பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குள் கட்டிடம் கட்ட அனுமதி பெற 10 ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்' என நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கு மக்கள் விண்ணப்பிக்கும் போது, காலிமனை வரி ரசீது, நடப்பாண்டு வீட்டு வரி ரசீது, பத்திர நகல், பட்டா நகல், சர்வே வரைப்படம், சர்வே ஏ பதிவேடு நகல், புள்ளியில் படிவம், 13 ஆண்டு வில்லங்க சான்றிதழ், வரைப்படங்கள்-5, கட்டிடத்தொழிலாளர் நல நிதிக்காக டிமாண்ட் டிராப்ட் ஆகிய 10 ஆவணங்களை நகராட்சியில் அளிக்கவேண்டும். மனுதாரர் அங்கீகரிப்பட்ட மனைப்பிரிவுகளில் அடங்கும் மனைகள், பழைய டவுன் மற்றும் அனுகு சாலை உள்ள இடங்களில்கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டிட அனுமதியோ வழங்க இயலாது. 4,000 சதுர அடிக்கு மிகாமல் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மற்றும் 2,000 சதுர அடியில் கட்டப்படும் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டிடம் ஆகியவைகளுக்கு மனுதாரர் விண்ணப்பித்தால் கட்டிட விதிகளுக்குட்பட்டிருந்தால் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


Page 37 of 96