Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

பெங்களூரில் சட்ட விதிகளை மீறும் தனியார் கட்டிடங்கள்

Print PDF

தினகரன்                         04.11.2010

பெங்களூரில் சட்ட விதிகளை மீறும் தனியார் கட்டிடங்கள்

பெங்களூர், நவ. 4: தனியார் வணிக வளாகத்திற்கு முறைகேடாக மாநகராட்சி அனுமதியளித்துள்ளது என மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் நாகராஜ் குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பாக பணியாற்ற 85 வாகனங்களும், அவர்களுக்கு 1225 செல்போனும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் முறையாக பணி செய்யாமல் முறைகேட்டிற்கு துணை போகின்றனர். குறிப்பாக மல்லேஸ்வரம் சம்பிகே சாலையில் உள்ள தனியார் வணிக வளாகமான மந்திரிமால் 100% சட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக தலைமை பொறியாளர் ரமேஷ் அறிக்கை அளித்துள்ளார்.

இது மட்டுமல்லாது மந்திரிமால் துவக்க விழாவில் முதல்வரும் கலந்து கொண்டார். துவக்க விழாவிற்கு செல்லும் முன் முதல்வர் அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் பெங்களூரில் 27 மெட்ரோ ரயில் நிலைய ங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் சம்பிகே சாலையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை மட்டும் மந்திரிமாலுடன் இணைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது குறித்து மேயர் நடவடி க்கை எடுக்கவில்லை என் றால் நாங்கள் மந்திரிமால் மற்றும் மாநகராட்சி முன் போராட்டம் நடத்துவோம் என்றார்.

 

செங்கோட்டை அருகே கட்டப்படும் பார்க்கிங் கட்டிடம் இடிந்ததில் யார் மீதும் குற்றம் இல்லை

Print PDF

தினகரன்                  02.11.2010

செங்கோட்டை அருகே கட்டப்படும் பார்க்கிங் கட்டிடம் இடிந்ததில் யார் மீதும் குற்றம் இல்லை

புதுடெல்லி, நவ. 2: "செங்கோட்டை அருகே சுபாஷ் மைதானத்தில் கட்டப்பட்டு வந்த பார்க்கிங் கட்டுமானம் இடிந்து விழுந்ததில் யார் மீதும் குற்றம் இல்லை. கட்டுமானப் பகுதியில் அடித்தளத்தில் செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் தண்ணீர் கசிந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது" என்று மாநகராட்சி பத்திரிகை மற்றும் தகவல் இயக்குநர் தீப் மாத்தூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

செங்கோட்டை அருகே சுபாஷ் மைதானத்தில் மூன்றடுக்கு வாகன நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வாகன ங்களை நிறுத்த கடும் இடப்பற்றாக்குறை நிலவுவதால், இந்த வாகன நிறுத்த கட்டுமானத்தை மாநகராட்சி கட்டி வருகிறது. இதில் 800 வாகனங்களை நிறுத்த முடியும். இந்த வாகன நிறுத்த கட்டுமானப்பகுதியில் கடந்த சில நாட்களாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் யார் மீதும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் முதல்கட்ட விசாரணையில், கட்டுமானம் நடைபெற்று கொண்டிருக்கும் பகுதியில் கீழ் பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் தண்ணீர் கசிந்து இந்த விபத்து நடந்துள்ளது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. 12 பேர் மட்டும் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இயற்கையாக நடந்த இச்சம்பவத்தில் யார் மீதும் குற்றம்சாட்டவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார். குடிநீர் குழாய் உடைந்ததால், கட்டுமானம் இடிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் வாகன நிறுத்த பகுதியை பார்வையிட்டு நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

நோட்டீஸ்:

இதற்கிடையே, செங்கோட்டை அருகே கட்டப்பட்டு வரும் இந்த வாகன நிறுத்த கட்டுமானத்துக்கு எதிராக விளக்கம் கேட்டு தேசிய அகழ்வாராய்ச்சித் துறை மாநகரா ட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டப்படி, நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து 200 முதல் 300 மீட்டருக்கு எந்த கட்டுமான பணியையோ, புணரமைப்பு பணியையோ, இடிக்கும் பணிகளையோ செய்யக்கூடாது. ஆனால், 300 மீட்டருக்குள் இந்த வாகன நிறுத்த கட்டுமானம் கட்டப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

கோவை மாநகராட்சியில் கட்டட அனுமதி பெற புதிய வசதி அறிமுகம்

Print PDF

தினமணி                      01.11.2010

கோவை மாநகராட்சியில் கட்டட அனுமதி பெற புதிய வசதி அறிமுகம்

கோவை, அக். 31: கோவை மாநகராட்சியில் கட்டட அனுமதிக்கான வரைபடங்களை நவீன மென்பொருள் உதவியுடன் பிடிஎப் வடிவிற்கு மாற்றும் நவீன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவில் ஆட்டோ டி.சி.ஆர் என்ற மென்பொருள் பயன்படுத்தி கட்டட அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த 2009 நவம்பர் முதல் ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆன்லைன் சுயசரிபார்ப்பு வசதி மூலம் வரைபடங்கள் விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்கலாம்.

வரைபடம் மாநகராட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும் பட்சத்தில் அனைத்து ஆவணங்கள் மற்றும் கட்டணங்களை பெற்றுக் கொண்டு கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. அடுத்த முயற்சியாக ஆன்லைன் மூலம் பெறப்படும் கட்டட வரைபடங்கள் மாநகராட்சியின் ஆட்டோ டி.சி.ஆர் மென்பொருள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சரிபார்க்கப்பட்டு பிடிஎப் கோப்பாக ஆக மாற்றித் தரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மனுதாரர் வரைபடத்தின் நகல், இதர இணைப்புகள் மற்றும் கட்டணங்களுடன் விண்ணப்பித்தால் சில தினங்களுக்குள் கட்டட அனுமதி வழங்கப்படும். இறுதி உத்தரவு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் மனுதாரர்கள் இடைத்தரகர்கள் இன்றி உடனடியாக கட்டட அனுமதி பெற முடியும்.

 


Page 38 of 96