Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

கட்டட அனுமதி பெற புதிய உத்தரவு கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தகவல்

Print PDF

தினகரன்               28.10.2010

கட்டட அனுமதி பெற புதிய உத்தரவு கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தகவல்

கோவை, அக். 28: மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் கட்டட வரைவு அனுமதி இனி வழங்கப்படமாட்டாது.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது;

கோவை மாநகராட்சி கட்டட வரைவு அனுமதி, லே அவுட் அனுமதி போன்றவை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறை பல் வேறு நிர்வாக காரணங்களி னால் மாற்றப்பட்டுள்ளது. இனி, வீடு, வணிக கட்டடங்கள் கட்டட வரைவு அனு மதி பெற மாநகராட்சியின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு மண்டல அலுவலகங்களுக்கு செல்லவேண்டியதில்லை. பிரதான அலுவலகத் தில் ஆன்லைனில்விண்ணப்பித்தால் போதும்.

ஆன்லைனில் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டும். ஆன்லைனில் பிரதான அலுவலகத்திற்கு கட்டட வரைவு பெற விண்ணப்பிக்கும் விவரங்களை சுற்றறிக்கை மூலம் நகரமைப்பு பிரிவு மற்றும் மாநகராட்சி உரிமம் பெற்ற சர்வேயர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரிரு நாளில், பிரதான அலுவலகத்தில் கட்டட வரைவு அனுமதிக்கான விண்ணப்பம் பெறும் திட்டம் துவக்கப்படும். விரைவாக கட்டட வரைவு அனுமதி வழங்க அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் வரி வசூல் வேகமாக நடக்கிறது. இதுவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வரி தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. வரி வசூலி க்க, 28 பில் கலெக்டர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். இது தவிர, 28 கையடக்க ரசீது வழங்கும் கருவி பெறப்படும். இந்த கருவிகளுடன் பில் கலெக்டர்கள் வரி வசூலிக்க வருவார்கள். பணம் பெற்று உடனடியாக ரசீது வழங்குவார்கள். எந்த பகுதியிலும் வரி வசூல் தாமதம் இருக்காது. 72 வார்டுகளுக்கும் ஒரு கைய டக்க ரசீது வழங்கும் கருவி வழ ங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சியில் வரி வசூல் வேகமாக நடக்கிறது. இதுவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வரி தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. வரி வசூலி க்க, 28 பில் கலெக்டர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். இது தவிர, 28 கையடக்க ரசீது வழங்கும் கருவி பெறப்படும். இந்த கருவிகளுடன் பில் கலெக்டர்கள் வரி வசூலிக்க வருவார்கள். பணம் பெற்று உடனடியாக ரசீது வழங்குவார்கள். எந்த பகுதியிலும் வரி வசூல் தாமதம் இருக்காது. 72 வார்டுகளுக்கும் ஒரு கைய டக்க ரசீது வழங்கும் கருவி வழ ங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

மாநகராட்சியின் புதிய நிபந்தனையால் புது வீடு கட்டுவதில் சிக்கல்

Print PDF

தினகரன்                   26.10.2010

மாநகராட்சியின் புதிய நிபந்தனையால் புது வீடு கட்டுவதில் சிக்கல்

நெல்லை, அக். 26: வீடு கட்ட பிளான் அனுமதி வேண்டு வோர் 18 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என நெல்லை மாநகராட்சி புதிய நிபந்தனைகளை பிறப்பித்துள்ளது. இதனால் வீடு கட்டுவோர் பிளான் அப்ரூ வல் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

மாநகராட்சி பகுதிகளில் வீடு கட்டுவோர் முன்பு வீட்டு பிளான்களுடன் ஓரிரு ஆவணங்களை சமர்ப்பித்து ஒரு வார காலத்திற்குள் அனு மதி பெற்று வந்தனர். கடந்த இரு வாரத்திற்கு முன்பு மாநகராட்சி வீடு கட்ட பிளான் அப்ரூவல் பெற 18 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் வீடு கட்டுவோர் அனுமதி பெறமுடியாமல் தவிக்கின்றனர்.

வீட்டு மனை விண்ணப்பத்தோடு நோட்டரி பப்ளிக் அத்தாட்சி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தர வால் வீடு கட்ட விரும்புவோ ரும், கான்ட்ராக்டர் களும் தற்போது வக்கீல் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதுள்ளது.

கிராம நிர்வாக அதி காரி மற்றும் நகர சர்வேயர் அத்தாட்சி செய்த வீட்டுமனையின் வரைபடம், வீட்டுமனையின் சிட்டா மற்றும் ரிஜிஸ்டர் பட்டா, 15 ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ், வீட்டு மனை உரிமையாளர் குறித்து அரசாங்க வக்கீலிடம் இருந்து அசல் சான்றிதழ், குடிநீர் வசதி குறித்து ரூ.20 அரசு முத்திரை தாளில் உறுதி மொழி என மாநகராட்சியின் புதிய நிபந்தனைகள் வீடு கட்டுவோரை தலைசுற்ற வைக்கின்றன.

இதில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டிய மனையாக இருந்தால், வீடு கட்டுவோர் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறைகளிடம் வீடு கட்ட தடை யில்லா சான்றிதழ் பெறவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒரு விதிமுறை யில் சூரிய அடுப்பு குறித்த வரைபடம் இருக்க வேண்டும் என கூறுகிறது. நெல்லை, பாளையில் 2 சென் டில் வீடு கட்டுவோர் சூரிய அடுப்புக் கான ஏற்பாடுகளை எவ்வாறு செய்வது என கேள்வி எழுப்பி வருகின்ற னர். மாநகராட்சியின் இத்திட்டத்திற்கு கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர்.

மண்டல தலைவர்கள் எதிர்ப்பு நிபந்தனை தளர்த்தப்படுமா?

இதுகுறித்து பாளை மண்டல தலைவர் சுப.சீதாராமன் விடுத்திருக்கும் அறிக்கையில்," மாநகராட்சி பகுதிகளில் வீட்டு பிளான்களுடன் பொதுமக்கள் வழங்க வேண்டிய ஆவணங்கள் பொதுமக்களை அதிகளவில் பாதிக்கும். மாமன்றத் தின் ஒப்புதல் இன்றியும், கவுன்சிலர்களுக்கு தெரியாமலும் இந்நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பழைய வீட்டை இடிக்க வேண்டுமானால் அதற்கு தனிக்கட்டணம் உள்ளிட்ட சில நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகளை கமிஷனர் விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை தளர்த்தி, மாநகராட்சி கட்டிட விதிமுறைகளில் உள்ள விதிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி விதித்திருக்கும் புதிய நிபந்தனைகளால், வீடு கட்டுவதை விட, வீடு வாங்குவதே மேல் என்ற எண்ணத்திற்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Last Updated on Tuesday, 26 October 2010 11:29
 

வீட்டு வரைபட அனுமதிக்கு புதிய நிபந்தனைகள்

Print PDF

தினமணி               26.10.2010

வீட்டு வரைபட அனுமதிக்கு புதிய நிபந்தனைகள்

திருநெல்வேலி, அக். 25: திருநெல்வேலி மாநகர் பகுதியில் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி பெற மாநகராட்சி பல புதிய நிபந்தனைகளை மாமன்றத்துக்கே தெரியாமல் கொண்டு வந்துள்ளதற்கு பாளையங்கோட்டை மண்டலத் தலைவர்

சுப. சீதாராமன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

வீட்டு வரைபடம் அனுமதி பெறுவதற்கு பல புதிய நிபந்தனைகளை மாநகராட்சி விதித்துள்ளது.

இந்த நிபந்தனைகள் மாமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலும், மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த புதிய நிபந்தனைகள் மக்களை குழப்பமடையச் செய்து, அதிர்ச்சியடை வைத்துள்ளது.

வீட்டுமனை விண்ணப்பத்தோடு நோட்டரி பப்ளிக், கிராம நிர்வாக அதிகாரி, நகர சர்வேயர் ஆகியோர் அத்தாட்சி செய்த வீட்டுமனையின் வரைபடம், 15 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையை ஒட்டிய வீட்டுமனையாக இருந்தால், அந்த துறைகளின் தடையில்லா சான்றிதழ், வீட்டுமனை உரிமையாளர் குறித்து அரசு வழக்கறிஞரிடமிருந்து அசல் சான்றிதழ் ஆகியவை பெற வேண்டும்.

மேலும் குடிநீர் வசதி குறித்து ரூ. 20 அரசு முத்திரைத்தாளில் உறுதிமொழி, வட்டாசியரிடமிருந்து வீடு கட்ட தடையில்லா சான்றிதழ், தீயணைப்புத் துறையிலிருந்து தடையில்லாச் சான்றிதழ், மழைநீர் சேகரிப்பு ஏற்பாடு, சூரிய அடுப்பு ஏற்பாடு குறித்த வரைப்படம் உள்ளிட்ட பல புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு நிபந்தனைகள் தேவையில்லாதது ஆகும். இந்த விசித்திர நிபந்தனைகளை மாநகராட்சி உடனே கைவிட்டு, மாநகராட்சி, நகராட்சி கட்டட விதிகளில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சீதாராமன்.

Last Updated on Tuesday, 26 October 2010 11:02
 


Page 40 of 96