Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

மழைநீரை சேமியுங்கள் குடிநீர் வாரியம் வேண்டுகோள்

Print PDF

தினகரன் 22.10.2010

மழைநீரை சேமியுங்கள் குடிநீர் வாரியம் வேண்டுகோள்

சென்னை, அக். 22: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் நிலத்தடி நீரின் அளவும் அதன் தரமும் உயர்ந்துள்ளது. கிணறுகளில் நீர் கணிசமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற பயனை தொடர்ந்து பெறுவதற்கு பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பாகவே பராமரித்து வைக்க வேண்டும்.

மணல், கூழாங்கற்கள், கருங்கற்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்தி, மீண்டும் அந்த தொட்டிகளில் நிரப்ப வேண்டும்.

மழைநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால், அவற்றை சரி செய்ய வேண்டும். மழைநீர் சேகரிப்பு குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால், வாரிய அதிகாரிகளை அணுகலாம்.

 

வணிக நிறுவனங்களில் நடவடிக்கை எடுக்க குறைதீர் நாளில் மனு பார்க்கிங்’ வசதி கட்டாயம்

Print PDF

தினகரன்    12.10.2010

வணிக நிறுவனங்களில் நடவடிக்கை எடுக்க குறைதீர் நாளில் மனு பார்க்கிங்வசதி கட்டாயம்

திருச்சி, அக். 12: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய வணிக நிறுவனங்களில் கட்டாயம் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகேசன் காசிராஜன் தலைமையில் நேற்று நடந்தது. அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அளித்த மனுவில், பண்டிகை காலங்களில் ஒரு மாதம் என்எஸ்பி ரோடு, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தரை கடை போட்டு வியாபாரம் செய்ய அனுமதிப்பது வழக்கம். இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு மிக குறைந்த நாட்களே உள்ளன. எனவே எங்களுக்கு இந்த ஆண்டு தரைக்கடை போட அனுமதி வழங்க வேண்டும். இதுபற்றி மாநகராட்சி, போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

மாமன்ற 4வது வார்டு கவுன்சிலர் விஜயலெட்சுமி (மதிமுக) அளித்த மனு:

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சவக்கிடங்கு இருந்தது. கட்டிடம் சேதமடைந்ததால் 2009 முதல் செயல்படவில்லை. இப்பகுதியில் தற்கொலை, விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் சிரமப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. மாணவர்களையும், பெற்றோரையும் வங்கி அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். இப்பிரச்னை தீர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த மற் றொரு மனுவில் கூறியுள்ளார்.

அல்லூரை சேர்ந்த நவநீதன் என்பவர் அளித்த மனு: அல்லூர் கீழத்தெருவில் 10 ஆண்டுக்கும் மேலாக திறந்த வெளியில் ஊராட்சி குடிநீர் மோட்டார் ஸ்விட்ச் போர்டு உள்ளது. அங்கு அடிக்கடி மின்கசிவு ஏற்படுவதால் மின் மோட்டார் அறை கட்ட வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் வட்டார வளர்ச்சி அலுவலர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து.

மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருச்சி காந்தி மார்க்கெட் 1936ம் ஆண்டு திருச்சியின் மக்கள் தொகை அடிப்படையில் 7 ஏக்கர் பரப்பில் துவக்கப்பட்டது. ஆனால் மக்கள் தொகை அதிக ரித்துவிட்ட நிலையிலும் அதை விரிவுபடுத்தவில்லை. ஏற்கனவே நெரிசல் மிகுந்த மார்க்கெட்டில் மாடுகள் அதிகமாக சுற்றி திரிவதால்விபத்து ஏற்படுகிறது. எனவே மார்க்கெட்டிற்குள் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொசுமருந்து அடிக்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அனுமதி மறுக்கப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை மாநகருக்குள் அனுமதிக்க கூடாது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முக்கிய வணிக நிறுவனங்களில் கட்டாயம் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. டிஆர்ஓ ராமன் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.

கோயில் இடம் ஆக்கிரமிக்க முயற்சி

திருச்சி டிவிஎஸ் டோல் கேட் உஸ்மான் அலி தெரு மக்கள் அளித்த மனுவில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள உஸ்மான் அலித்தெரு கடைசியில் பல லட்சம் செலவு செய்து ஸ்ரீசங்கிலிமுத்து மாரியம்மன் கோயிலை கட்டியுள்ளோம். 35 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது திருமலை என்பவர் கோயிலுக்கு அருகேயுள்ள பாதையும், கோயிலின் 25 சதவீத நிலமும் தனக்கு சொந்தமானது எனக்கூறி பிரச்னை செய்கிறார். கலெக்டர் இப்பிரச்னையில் சுமூக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

 

அங்கீகாரமற்ற லே-அவுட்டுக்கு எதிராக நடவடிக்கை : அமைக்கும்போதே தடுத்தது மாநகராட்சி

Print PDF

தினமலர் 09.10.2010

அங்கீகாரமற்ற லே-அவுட்டுக்கு எதிராக நடவடிக்கை : அமைக்கும்போதே தடுத்தது மாநகராட்சி

கோவை : விவசாய நிலத்தை அழித்து அங்கீகாரமற்ற லே-அவுட் அமைப்பதை, மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்; முறைப்படி அங்கீகாரம் பெற உறுதியளித்ததால் திரும்பிச் சென்றனர்.

கோவை நகரிலுள்ள அங்கீகாரமற்ற லே-அவுட்களில் இருந்த மனையிடங்கள், 2006ல் அரசு அறிவித்த திட்டத்தில் வரன் முறைப்படுத்தப்பட்டு விட்டன. இருப்பினும், ஆண்டுதோறும் நகரிலுள்ள விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றன. நில உபயோக மாற்றம், லே-அவுட் அங்கீகாரம் எதுவும் இல்லாமல் அமைக்கப்படுவதால், சாலைக்கான இடம், "ரிசர்வ் சைட்' எதுவுமே இருப்பதில்லை. இந்தப்பகுதியில் குடியேறுவோர், எதிர்காலத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு போராடும் நிலை ஏற்படும்.

கோவை உக்கடம் கழிவுநீர்ப் பண்ணைக்குப் பின்னால், இத்தகைய அங்கீகாரமற்ற லே-அவுட்கள் முளைத்தன.இவற்றைத் தடுப்பதில் மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குப் பின், விவசாய நிலத்தை அழித்து அங்கீகாரமற்ற லே-அவுட் அமைப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் வந்தது. கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் லட்சுமணன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜோதிலிங்கம், உதவிப் பொறியாளர் சுந்தர்ராஜன், அலுவலர்கள் அங்கு சென்றனர்.

அங்கு, விவசாய நிலங்கள் சமப்படுத்தப்பட்டு, மனையிடங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. புதிதாக ரோடு போடும் பணியும் நடந்து வந்தது. மனையிடங்களைப் பிரித்து, நடப்பட்டிருந்த கற்களை அகற்ற, மாநகராட்சி ஊழியர்கள் முயன்றபோது, இடத்தின் உரிமையாளர் மற்றும் பலர் அங்கு வந்து,வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து உக்கடம் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் முன்னிலையிலும், அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால், மாநகராட்சி ஊழியர்களால் எந்தப் பணியையும் செய்ய முடியவில்லை.

மாநகராட்சி அலுவலர்கள், "அங்கீகாரமற்ற லே-அவுட் அமைப்பதைத் தடுப்பது எங்கள் கடமை; அதைச் செய்ய விடுங்கள்' என, பதிலளித்தனர். நீண்ட நேர பேச்சுக்குப்பின், "ஆறு மாதத்தில் அங்கீகாரம் பெறுவோம்; அதுவரை எப்பணியையும் செய்ய மாட்டோம்' என்றனர். எழுத்துப்பூர்வமாக பெற்றுக் கொண்ட பின், மாநகராட்சி அலுவலர்கள் அங்கிருந்து திரும்பினர்.

இடத்தின் உரிமையாளர் இப்ராஹிம் கூறுகையில், ""இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எந்த லே-அவுட்டும் முறைப்படி அங்கீகாரம் பெற்றதில்லை; பல இடங்களில் அங்கீகாரமற்ற லே-அவுட் அமைக்கப்பட்டு, ஒரு சென்ட் 5 லட்சம், 6 லட்சம் என விற்கப்படுகிறது. இதைத் தடுக்காத அதிகாரிகள், 3.2 ஏக்கரில் அமைக்கப்படும் இந்த லே-அவுட்டை மட்டும் தடுக்க கவுன்சிலர் திருமுகம் தான் காரணம்,'' என்றார்.

கவுன்சிலர் திருமுகத்திடம் கேட்டபோது, ""அங்கீகாரமற்ற லே-அவுட் எங்கே அமைத்தாலும் நான் அதை எதிர்ப்பேன். அங்கு அங்கீகாரமற்ற லே-அவுட் அமைப்பதோடு, அனுமதியின்றி ரோடு அமைக்கின்றனர். அந்த இடத்தில் நில உபயோக மாற்றமும் செய்யவில்லை. ""அங்கீகாரமற்ற லே-அவுட் அதிகரிப்பதால், எதிர்காலத்தில் மாநகராட்சிக்குதான் பிரச்னை; அதனால்தான், மாநகராட்சி நிர்வாகம் அதைத் தடுக்கிறது,'' என்றார்.

அங்கீகாரமற்ற லே-அவுட்களைத் தடுப்பதில் வருவாய்த்துறை, உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் காட்டும் அக்கறையை மாவட்ட நிர்வாகம் காண்பிப்பதில்லை. அங்கீகாரமற்ற லே-அவுட் அமைவதைத் தடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பிலுள்ள உள்ளூர் திட் டக் குழுமத்துக்கு கலெக்டர்தான் தலைவராக உள்ளார்.

Last Updated on Monday, 11 October 2010 05:48
 


Page 41 of 96