Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த 1800 பேருக்கு நோட்டீஸ்

Print PDF

தினகரன் 08.10.2010

சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த 1800 பேருக்கு நோட்டீஸ்

புனே,அக்.8: சாலை கட்டுமான பணிக்கு நிலம் கையகப்படுத்த பிம்ப்ரி&சிஞ்ச்வாட் மாநகராட்சி நிர்வாகம் 1800 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

பிம்ப்ரி&சிஞ்ச்வாட் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட காலேவாடியில் உள்ள எம்.எம்.பள்ளியில் இருந்து பாவனா ஆறு வரை மாநகராட்சி நிர்வாகம் புதிய சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே நில உரிமையாளர்கள் 1800 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலம் உடனடிதேவையாக இருப்பதால் அவற்றை வரும் 20ம் தேதிக்குள் நிலம் கையகப்படுத்தும் துறை, தேவைப்படும் நிலத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள இருக்கிறது.

அதன் பிறகு நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்தும், சாலை கட்டுமானத்திட்டத்திற்கு தேவைப்படும் நிலம் எவ்வளவு என்பது குறித்தும் 27ம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்றும் நிலம் கையகப்படுத்துவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜி.நாலே தெரிவித்துள்ளார். புதிய அந்த சாலை அமையும் இடத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரை கிலோமீட்டருக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது

 

 

விதிகளுக்கு புறம்பான கட்டடங்கள் ஆய்வறிக்கை

Print PDF

தினமலர் 02.10.2010

விதிகளுக்கு புறம்பான கட்டடங்கள் ஆய்வறிக்கை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்கள், விடுதிகள் மற்றும் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் உள்ளூர் திட்டக்குழும அலுவலர்களுக்கு நகர ஊரமைப்பு இயக்குனர் பங்கஜ்குமார்பன்சால் உத்தரவிட்டுள்ளார்.


காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவில் சன்னிதி தெருவில் அமைந்துள்ள உள்ளூர் திட்டக் குழுமம் அலுவலகத்தில் தமிழக நகர்புற ஊரமைப்பு இயக்குனர் பங்கஜ்குமார்பன்சால் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் 2010-11ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளில், சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது 4 ஆயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகார ஒப்படைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்கள், 2,000 ஆயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிகக் கட்டடம் ஆகியவற்றுக்கு உள்ளாட்சிகள் அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.அனுமதியற்ற மனைப் பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ அனுமதிக்கக் கூடாது. அதிகார வரம்பு மற்றும் பரப்பிற்குள் அனுமதி வழங்கப்பட்டு அதே மனையில் கூடுதல் கட்டடம் கட்ட விண்ணப்பம் பெறப்படின் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகார பரப்பிற்குள் இருந்தாலும் உள்ளாட்சியில் அனுமதி வழங்க இயலாது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்திற்கு அல்லது மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாக்களில் ஏராளமான புதிய நகர்கள் உருவாகியுள்ளன. எனவே, இந்நகர்களுக்கு புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்க உள்ளோம். தமிழக நகர்புற ஊரமைப்பு துறை சார்பில் புதிதாக t.ஞ்ணிதி.டிணசஞீtஞிணீ என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில் ஆகியவற்றை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒன்பது மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடம் கட்டக்கூடாது.காஞ்சிபுரம் நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 48 கட்டடங்களுக்கும், ஆறு வீட்டுமனைப் பிரிவிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நகர ஊரமைப்பு சட்டப்பிரிவு 56 மற்றும் 57ன் கீழ் அங்கீகாரம் பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நகரில் அனுமதி பெறாமல் பல திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்காமல் திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள், ஓட்டல்கள் கட்டப்பட்டுள்ளன. இது குறித்து ஆய்வு செய்து, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி காஞ்சிபுரம் உள்ளூர் திட்டக்குழும அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.அதன்பின் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் விதிகளை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கட்டடங்கள் சீல் வைக்கப்படும். இவ்வாறு பங்கஜ்குமார்பன்சால் தெரிவித்தார்.

 

சாலை மேம்பாட்டுக்கு ரூ.ஆயிரம் கோடி நிதி நகர் ஊரமைப்பு துறை இயக்குநர் தகவல்

Print PDF

தினகரன் 30.09.2010

சாலை மேம்பாட்டுக்கு ரூ.ஆயிரம் கோடி நிதி நகர் ஊரமைப்பு துறை இயக்குநர் தகவல்

நெல்லை, செப். 30: நகரமைப்பு சாலை மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என நகர் ஊரமைப்பு துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் தெரிவித்தார்.

பாளையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முன்பெல்லாம் 3 முதல் 6 மாதங்களுக்குள் தான் உள்ளூர் திட்ட குழும கூட்டம் நடக்கும். தற்போது அதை மாதந்தோறும் கலெக்டர் நடத்துவதால் குறைபாடுகள் உடனுக்குடன் களையப்படுகின்றன. கட்டட அங்கீகாரத்துக்கு தமிழகத்தில் 1 மாதத்துக்கு 1000 மனுக்கள் வருகின்றன. 500 மனுக்களுக்கு தீர்வு காணப்படுகிறது. நெல்லையில் 32 மனுக்கள் முடிக்கப்படாமல் உள்ளன.

ஷ்ஷ்ஷ்.tஸீ.ரீஷீஸ்t.வீஸீ//பீtநீஜீ.

என்ற இணையதளத்தில் விண்ணப்ப விவரங்களை பார்க்கலாம். திங்கள்கிழமை தோறும் மனுக்கள் பற்றிய விவரங்கள் அந்த இணையதளத்திலும், கலெக்டரின் இணையதளத்திலும் வெளியிடப்படுகின்றன.

உள்ளாட்சி அமைப்புகள் 400 சதுர அடிவரை கட்டட அனுமதி அளிக்கலாம். கலெக்டர் பொதுவாக 15000 சதுர அடி வரையும், கல்லூரிகளுக்கு 25000 சதுர அடி வரையும் அனுமதிக்கலாம். பள்ளிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அடி வரையறை இல்லை. வீடுகள் நிலத்தின் 50 சதவீதம் வரை கட்டப்படவேண்டும் என்பதை மாற்றி 70 சதவீதம் வரை கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக கட்டடங்கள் இருக்கும் நிலத்தில் 65 சதவீதம் வரை கட்டப்படலாம். சாலையோரம் 50 சதுர மீட்டருக்கு ஒரு கார் நிறுத்துமிடத்துக்கும், குடியிருப்புகளில் 75 சதுர மீட்டருக்கு ஒரு கார் நிறுத்துமிடத்துக்கும் இடம் விடவேண்டும். விதிமுறை மீறல் இருந்தால் நகர் ஊரமைப்பு சட்டப்படி கட்டடத்தை சீல்செய்ய லாம். நகரமைப்பு சாலை மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடியை துணை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இதில் ரூ.350 கோடி உட்கட்டமைப்பு அடிப்படை வசதி கட்டணமாக எங்கள் துறை மூலம் வசூலானது அடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பேசிய கலெக்டர் ஜெய ராமன், ‘தச்சநல்லூர் & தென்காசி சாலையில் தச்சநல்லூரிலிருந்து பழைய பேட்டை வரை 2.7 கி.மீ. தூரம் இருவழிச்சாலையாக மாற்ற ரூ.4.5 கோடிக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் திட்டக்குழும நிதி உதவியுடன் இது செயல்படுத்தப்படும். முருகன்குறிச்சியில் இருந்து வண்ணார்பேட்டை வரை சாலை இருபுற விரிவாக்கத்துக்கு ரூ.5.2 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இவை ஜனவரி மாதத்துக்குள் செயல்படுத்தப்படும்என்றார்.

பேட்டியின் போது பயிற்சி கலெக்டர் கிரண் குரானா, நகர் ஊரமைப்பு உறுப்பினர் செயலர் சேகரன், மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் பாபு, மக்கள் தொடர்பு அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 30 September 2010 07:46
 


Page 42 of 96