Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

விரைவில் வருகிறது கோயம்பேடு மொத்த மளிகை மார்க்கெட்

Print PDF

தினமலர் 02.09.2010

விரைவில் வருகிறது கோயம்பேடு மொத்த மளிகை மார்க்கெட்

:கோயம்பேடு:கோயம்பேட்டில் பழம், காய்கறி, பூக்களின் மொத்த வியாபாரத்திற்கு மார்க்கெட் உள்ளது போன்று, அனைத்து மளிகை பொருட்களின் மொத்த வியாபாரத்திற்கான மார்க்கெட் விரைவில் அமைகிறது.பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் வசதிக்காக கோயம்பேடு பகுதியில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களுக்கான மொத்த வியாபாரம் செய்யும் நோக்கில் மார்க்கெட் கட்டப்பட்டது.இதே போன்று மிளகாய், மஞ்சள், சர்க்கரை, உளுந்து, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களின் மொத்த வியாபாரத்திற்கும் கடைகள் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வியாபாரிகள் எழுப்பி வந்தனர்.

அதனையொட்டி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி..,) சார்பில் அதற்கான திட்டம் தீட்டப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்ட, இத்திட்டத்தை கொண்டு மொத்த வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பிடம் சி.எம்.டி.., அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். கோயம்பேடு பகுதியில் ஒரே வளாகத்தில் 500 மொத்த மளிகை கடைகள் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டு, வியாபாரிகள் ஒவ்வொருவரிடம் 10 சதவீதம் முன்பணம் பெறப்பட்டது.இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தது. இதே பகுதியில் மெட்ரோ ரயில் பணி தொடங்கிய நிலையில்,

இத்திட்டத்தை செயல்படுத்துவதில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் தற்போது கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அங்காடி குழு (எம்.எம்.சி.,) கட்டடத்தின் அருகாமையில், 14 ஏக்கர் பரப்பளவில் கட்டடப் பணி துவங்கவுள்ளது.குறிப்பாக 18 முதல் 20 பிளாக்குகளாக கட்டப்படும் இந்த மார்க்கெட்டில், ஒவ்வொரு பிளாக்கிற்கும் 22 கடைகள் என கட்டப்படும். சில பிளாக்களில் பெரியளவிலான 12 கடைகள் எனவும் கடைகள் கட்டப்படும். கடைகளை பொறுத்தவரை தரை தளமாகவும், ஒரு சில கடைகள் தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்டதாகவும் அமையவுள்ளது.

பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு பிளாக்கிற்கும் இடையே 10 மீட்டர் இடைவெளி கொண்ட சாலைகள் அமைக்கப்படும். மொத்தத்தில் ஒரே வளாகத்தில் 500 மொத்த வியாபார மளிகைக் கடைகள் அமைப்பதற்கான கட்டடப் பணி, வரும் டிசம்பர் இறுதியில் துவங்கவுள்ளது.கட்டடப் பணியை ஒன்றரை வருடத்திற்கும் முடிக்கும் திட்டம் உள்ளதாகவும், பின் மார்க்கெட்டின் நிர்வாகத்தினை சென்னை மாநகராட்சி துறையினரிடம் ஒப்படைப்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக சி.எம்.டி.., அதிகாரிகள் தெரிவித்தனர

 

உள்ளகரத்தில் மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Print PDF

தினமலர் 02.09.2010

உள்ளகரத்தில் மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

உள்ளகரம்:உள்ளகரம் - புழுதிவாக்கத்தில் வரும் மழைக்காலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.உள்ளகரம் - புழுதிவாக்கத்தில் பெரும்பாலான பகுதிகள் மிகவும் தாழ்வானவை. ஒவ்வொரு மழைக்காலத்திலும் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் வீராங்கல் ஓடை முழுமையாக சீரமைக்காததுதான்.

இந்த ஆண்டு வீராங்கல் ஓடையை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பு சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. ஆனால், வரும் மழைக்காலத்திற்குள் இப்பணிகள் நிறைவடையாது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால்வாய் பராமரித்தல், மணல் மூட்டைகள் அடைப்பு எடுத்தல் வெள்ள நீரை வெளியேற்ற ஆயுள் இன்ஜின் வாடகைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள 2.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குவது என நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

பழநியில் வளர்ச்சித்திட்ட பணிகள் தேக்கம் ஒப்பந்ததாரர்கள் மெத்தனத்தால்

Print PDF

தினகரன் 02.09.2010

பழநியில் வளர்ச்சித்திட்ட பணிகள் தேக்கம் ஒப்பந்ததாரர்கள் மெத்தனத்தால்

பழநி, செப்.2: அதிகாரிகளின் அலட்சியத்தாலும், ஒப்பந்ததாரர்களின் மெத்தனத்தாலும் பழநி நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக புகார் எழுந்துள் ளது.

பழநி நகராட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி, பாராளுமன்ற உறுப்பினர் நிதி, பிற்படுத்தப்பட்டோர் நிதி, கல்வி நிதி, நபார்டு நிதி, குடிநீர் நிதி, நகராட்சி வருவாய் நிதி உள்ளிட்ட நிதிகளைப் பெற்று வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் குடிநீர், சாலை வசதி ஏற்படுத்துதல், சாக்கடை தூர்வாருதல், சிறுபாலங்கள் அமைத்தல், பள்ளிக்கட்டிடம் அமைத்தல், பூங்காக்கள் ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகள் அனைத்தும் வெளிப்படை ஏலத்தின் மூலம் ஒப்பந்ததாரர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணி வழங்கப்படுகிறது. காலதாமதத்திற்கு அபராதம், நிதி பிடித்தம் செய்வது, பிற பணிகளை எடுக்க தடை விதிப்பது துவங்கி பணிகளே எடுக்க முடியாத அளவிற்கு கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது வரை விதிமுறை உள்ளது. இதனை நகராட்சியின் பொறி யியல் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், விதிமுறைகள் பெரும்பாலும் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற காரணங்களால் பழநி நகராட்சியில் சுமார் ரூ.4.50 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் உரிய காலங்களில் முடிக்கப்படாமல் உள்ளன.

கடந்த நகர்மன்ற கூட்டத்தில் ரூ.1.10 கோடி மதிப்பிலான பணிகளை டெண்டர் எடுத்து முடிக்காதிருந்த ஒப்பந்ததாரர் ஒருவரை கறுப்பு பட்டியலில் சேர்க்க நகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு கவுன்சிலர்கள் சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஒப்பந்ததாரரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து நகர்மன்றத்தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், ‘‘பணிகள் தேக்கமடையாமல் இருக்க ஒப்பந்ததாரர்கள், நகராட்சி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’என்றார்.

 


Page 50 of 96