Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

குத்தகைக்கு அறநிலையத்துறை நிலம் தந்தால் புதிய பஸ்நிலையம் அமைக்கப்படும் நகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன் 25.08.2010

குத்தகைக்கு அறநிலையத்துறை நிலம் தந்தால் புதிய பஸ்நிலையம் அமைக்கப்படும் நகராட்சி அறிவிப்பு

மயிலாடுதுறை, ஆக. 25: மயிலாடுதுறையில் தென்னை மரச்சாலை இடத்தை நீண்டகால குத்தகைக்கு அளிக்க இந்து அறநிலையத்துறை முன்வந்தால் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று நகராட்சி தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம் குத்தாலம் தொகுதி முன் னாள் எம்எல்ஏ கல்யாணம் மயிலாடுதுறை நகரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது பற்றி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு மயிலாடுதுறை நகராட்சி (பொ) ஆணையர் வாசுதேவன் அளித்துள்ள விளக்கம்:

மயிலாடுதுறை தென்னை மரச்சாலையில் உள்ள பரிமள ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 3.91 ஏக்கர், தனியாருக்கு சொந்தமான 1.27 ஏக்கர், பொதுப்பணி துறைக்கு சொந்தமான 73 சென்ட் என 5.91 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தை ரூ.1.70 கோடிக்கு வாங்குவதற்கு நகராட்சியில் பணம் இல்லை. பாதி தொகையை கொடுத்துவிட்டு மீதியை வட்டியின்றி நீண்டகால தவணையில் செலுத்தவும், அந்த இடத்திற்கான முன் நுழைவு அனுமதி தரவும் செயல் அலுவலருக்கு கடந்த ஏப்ரல் 5ம் தேதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பதில் எதுவும் வரவில்லை.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் நகராட்சி நிதியை கருத்தில்கொண்டு இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 3.91 ஏக்கர் நிலத்தை ரூ.1 கோடி கிரயத்தின்பேரில் பெற்றுக்கொண்டு எஞ்சியுள்ள நிலத்தை 30 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தின்பேரில் பெற்று விரைவில் பஸ் நிலையம் அமைக்க நகராட்சியும், இந்து அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டது.

கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார் ஆகியோர் பார்வையிட்டு தகுதியான இடம் என்று சான்றளித்து இடத்தை கையகப்படுத்தி கொடுக்கவேண்டும். இதுவரை நிறைவேற்றப்பட்ட 18 தீர்மானங்களும் வெங்கடேஸ்வரன் என்பவரின் ரிட் மனுவால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். மேற்கண்ட நிபந்தனையின்பேரில் இடம் நகராட்சிக்கு கிடைத்தால் 2 ஆண்டில் பஸ்நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு நகராட்சி (பொ) ஆணையர் வாசுதேவன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை மயிலாடுதுறையில் நேற்று முன்னாள் எம்எல்ஏ கல்யாணம் நிருபர்களிடம் தெரிவித்தார்.

 

மாநகராட்சி எல்லை விரிவாக்கம் இறுதி வடிவமளிக்க ஆலோசனை ஆவணங்களை ஆணையாளர் சமர்ப்பித்தார்

Print PDF

தினகரன்      24.08.2010

மாநகராட்சி எல்லை விரிவாக்கம் இறுதி வடிவமளிக்க ஆலோசனை ஆவணங்களை ஆணையாளர் சமர்ப்பித்தார்

மதுரை, ஆக. 24: மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் இறுதி வடிவம் அளிக்க துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் ஆணையாளர் செபாஸ்டின் ஆவணங்களை சமர்ப்பித்தார்.

மதுரை மாநகராட்சி எல்லையை 200 .கி.மீ. அளவிற்கு விரிவாக்கம் செய்ய சென்னையில் நேற்று நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் அசோக்வரதன்ஷெட்டி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பங்கேற்றனர். உத்தேச விரிவாக்க எல்லை குறித்து ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை ஆணையாளர் சமர்பித்தார். இதில் இறுதி வடிவம் அளிக்க ஆலோசிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக மாநகராட்சி மன்றத்தின் ஒப்பதலுக்கு வைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படும்.

ஐகோர்ட்டு கிளை அமைந்துள்ள பகுதி, சர்வதேச விமான நிலையம் அமையும் பகுதிகளை மாநகராட்சி எல்லைக் குள் சேர்க்க அந்த துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே விரைவில் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விருகம்பாக்கத்தில் மேயர் ஆய்வு கால்வாய் சீரமைப்பு பணி முடிந்ததும் மழைநீர் தேங்காது

Print PDF

தினகரன் 24.08.2010

விருகம்பாக்கத்தில் மேயர் ஆய்வு கால்வாய் சீரமைப்பு பணி முடிந்ததும் மழைநீர் தேங்காது

சென்னை, ஆக. 24: மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் இணைந்து சென்னை நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய்கள் சீரமைக்கும் பணிகளையும், புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. விருகம்பாக்கத்தில் நடந்து வரும் கால்வாய் சீரமைப்பு பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மேயர் கூறியதாவது:

சென்னை நகர் முழுவதும் நில அளவை செய்யப்பட்டு, 4 நீர்த்தேக்கப் பகுதிகளாகவும், 12 நீர் பிடிப்பு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி வேளச்சேரி நீர் பிடிப்பு பகுதி, கொளத்தூர் நீர் பிடிப்பு பகுதி, வடக்கு பக்கிங்காம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதி, மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதி, மாம்பலம் மற்றும் நந்தனம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதி, தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதி, ராயபுரம் நீர் பிடிப்பு பகுதி, கூவம் நீர் பிடிப்பு பகுதி ஆகிய 8 இடங்களில் பணி நடந்து வருகிறது. விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய் 6.34 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ83.89 கோடி செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகள் முடிந்தபின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேக்கம் இல்லாத நிலை ஏற்படும். இவ்வாறு மேயர் சுப்பிரமணியன் கூறினார்.

Last Updated on Tuesday, 24 August 2010 07:47
 


Page 52 of 96