Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

கட்டட அனுமதி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம்

Print PDF

தினமலர் 02.08.2010

கட்டட அனுமதி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம்

பேரூர்:நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கான திட்ட அனுமதியை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக, தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடிக்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கும், 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கும் திட்ட அனுமதி, தொழில்நுட்ப அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்ளூர் திட்டக் குழுமங்கள் மற்றும் புதுநகர் வளர்ச்சி குழுமங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விதிகளுக்குட்பட்டு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்படாத, தமிழகத்திலுள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கும் கட்டட அனுமதி மற்றும் மனை ஒப்புதல் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் திட்ட அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதியானது, மனைஒப்புதலுடன் கீழ்க்காணும் நிபந்தனைகள் நிறைவு செய்த பிறகே வழங்கப்பட வேண்டுமென்றும் அரசு தெரிவித்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மாவட்ட நகராட்சி கட்டட விதி 1972, திருத்திய கட்டட விதி, முழுமைத்திட்ட நில உபயோகம், விரிவு அபிவிருத்தி திட்ட விதி, மனைப்பிரிவு நிபந்தனைகள், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும கட்டுப்பாட்டு விதிகள், ஊராட்சிகளுக்கு, தமிழ்நாடு மாவட்ட ஊராட்சி கட்டட விதி 1997, முழுமைத்திட்ட நில உபயோகம், விரிவு அபிவிருத்தி திட்ட விதி, மனைப்பிரிவு நிபந்தனைகள் மற்றும் அபிவிருத்திக்கட்டணம், உள்கட்டமைப்பு மற்றும் வசதிக் கட்டணம் உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவு செய்த பின்னரே திட்ட அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.நிபந்தனைகள் என்ன: தமிழ்நாடு மாவட்ட நகராட்சி கட்டட விதிகள் 1972, தமிழ்நாடு ஊராட்சி கட்டட விதிகள் 1997 மற்றும் கோவை உள்ளூர் திட்டக்குழும கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக கடைபிடித்திருந்தாலே திட்ட அனுமதி வழங்கப்பட வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. அனுமதியற்ற மனைப்பிரிவில், எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ வழங்ககூடாது; அனுமதி வழங்கப்பட்ட மனையில் கூடுதல் கட்டட விண்ணப்பம் பெறப்படின், உள்ளாட்சிக்கு வழங்கப்பட்ட அதிகார பகிர்வு பரப்பினுள் அமைந்திருப்பினும் உள்ளாட்சியால் அனுமதி வழங்க இயலாது; அது தொடர்பான மனுவை கோவை உள்ளூர் திட்டகுழுமத்துக்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும். மலையிட பகுதி, கடற்கரை கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும் உத்தரவு நடைமுறைகளை கலெக்டர், ஊரக வளர்ச்சி அலுவலர், மாவட்ட பேரூராட்சி அலுவலர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். இவற்றை பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரப் படுத்த வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

அம்பத்தூர் பகுதிகளில் ஸி1 கோடியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

Print PDF

தினகரன் 30.07.2010

அம்பத்தூர் பகுதிகளில் ஸி1 கோடியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆவடி, ஜூலை 30: அம்பத்தூர் நகராட்சியில் மழைநீர் கால்வாய்களை சீரமைக்க ஸி1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நகராட்சி தலைவர் கே.என்.சேகர் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டம், அதன் தலைவர் கே.என்.சேகர் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் ஆஷிஷ்குமார், பொறியாளர் ரவி, சுகாதார அதிகாரி மணிமாறன், நகரமைப்பு அதிகாரி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:

ஜான் (அதிமுக):

நகராட்சி சுடுகாடுகள் பராமரிக்கப்படாமல் கிடக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும்.

பாலகுமரன் (திமுக):

நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சுடுகாடுகளிலும் மின்விளக்கு, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.

மைக்கேல்ராஜ் (அதிமுக):

எஸ்வி நகர் விளையாட்டு திடலை பராமரித்து ஸ்டேடியம் அமைக்க வேண்டும்.

கோவிந்தராஜ் (பாமக):

கொரட்டூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சுறாகுப்பம் பகுதியில் விளையாட்டு திடல் மார்க்கெட் அமைக்க வேண்டும்.

தேவேந்திரகுமார் (அதிமுக):

கே.ஆர்.நகர் பூங்காவை சீரமைக்க வேண்டும். மழைகாலம் நெருங்கு வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வார வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இறுதியில், நகராட்சி தலைவர் கே.என்.சேகர் கூறியதாவது:

மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கால்வாய்களும் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது. இதற்காக ஸி1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி சுடுகாடுகள் அனைத்தையும் சீரமைத்து, மதில்சுவர் அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். நகராட்சி பகுதியில் தார்சாலை அமைக்க

ஸி46 லட்சம், சிறுபாலம் அமைக்க ஸி23 லட்சம், மழைநீர் கால்வாய் அமைக்க ஸி16 லட்சம், முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியில் உள்ள விளையாட்டு திடலை சீரமைக்க ஸி38 லட்சம், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க ஸி4 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

கட்டிட உரிமப்பத்திரம் வழங்கும் அதிகாரம் மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் யோசனை

Print PDF

தினகரன் 30.07.2010

கட்டிட உரிமப்பத்திரம் வழங்கும் அதிகாரம் மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் யோசனை

பெங்களூர், ஜூலை 30: பெங்களூர் மாநகரிலுள்ள கட்டிடங்களுக்கு உரிமப்பத்திரம் வழங்கும் உரிமை மீண்டும் மாநகராட்சி வழங்க வேண்டும் என்று பெங்களூர் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெங்களூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் எஸ்.கே.நடராஜ் தலைமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் எம்.நாகராஜ் எழுந்து பேசும்போது, மாநகரில் உள்ள கட்டிடங்களுக்கு உரிமை பத்திரம் வழங்கும் அதிகாரம் பெங்களூர் பெருநகர் வளர்ச்சி குழுமத்திடம் (பி.டி.) ஒப்படைக்கப்பட்டது. பி.டி..விடம் உள்ள அதிகாரத்தை மீண்டும் மாநகராட்சிக்கு கொண்டுவர வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பி.டி.ஏவிடம் அதிகாரம் வழங்கப்பட்ட சமயத்தில் 116 கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டியுள்ளதாக ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது. கட்டிடஉரிமப் பத்திரம் வழங்க ரூ.18.75 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டிட உரிமப்பத்திரம் வழங்கும் அதிகாரத்தை பி.டி..விடம் ஒப் படைத்து அரசு எடுத்து முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் சுப்ரமணியா அரசுக்கு 2009 ஏப்ரல் 1ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.ஆனால் ஆணை யரின் கடித்திற்கு அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கு கட்சி பேதமின்றி அனைவரும் குரல் கொடுத்தனர்.

அப்போது ஆணையர் சித்தையா குறுக்கிட்டு, பி.டி. .விடம் உள்ள அதிகாரம் தற்போது மாநகராட்சியிடம் வந்துள்ளது. இனி இதில் எந்த குழப்பமும் ஏற்படாது என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி த¬ லவர் நாகராஜ். பி.டி..விடம் இருந்து இன்னும் முழுமையாக அதிகாரம் வரவில்லை. மேலும் பி.டி.. வசூல் செய்துள்ள நிதியை நமது மாநகராட்சிக்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய மேயர் நடராஜ், உரிமை பத்திரம் வழங்கும் அதிகாரம் பி.டி.ஏவுக்கு வழங்கி அரசு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளதாக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உறுதியளித்துள்ளார்.

இதுவரை பி.டி.ஏ வசூ 1398041963 செய்துள்ள நிதியை மாநகராட்சிக்கு திரும்ப பெறுவது தொடர்பாக அரசுடன் பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்றார்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

 


Page 58 of 96