Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் வீடு கட்ட அனுமதி கிடையாது நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினகரன் 28.07.2010

அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் வீடு கட்ட அனுமதி கிடையாது நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூர், ஜூலை 28: அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கிடையாது என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் இளையராஜா தலைமையில் நடந்தது. துணை தலைவர் முகுந்தன், ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.

தமிழக அரசு அரசாணைப்படி பெரம்பலூர் நகராட்சியில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் வீடு கட்டுவதற்கு அனுமதி கிடையாது என்ற உத்தரவை அமல்படுத்துவது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு அனுமதி அளித்து வந்த நிலையில் 4,000 சதுர அடிவரை வீடு கட்ட அனுமதி அளிப்பது. 1000 சதுரஅடியில் அமைக்க அனுமதி கொண்ட வணிக வளாகங்கள் 2,000 சதுர அடியில் அமைத்து கொள்ள அனுமதி அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிராணிகள் பிறப்பு கட்டுப்பாடு திட்டத்திற்கு இந்திய அரசு விலங்குகள் நலவாழ்வு வாரியம் அங்கீகாரம் பெற்றுள்ள அரசுசாரா தொண்டு நிறுவனமான தஞ்சை யசோதா விலங்குகள் அறக்கட்டளை நிறுவனம் மூலம் பிராணிகள் பிறப்பு கட்டுப்பாடு, வெறிநாய்க்கடி தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிப்பது. நகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் தலைவர் மற்றும் தமிழ் அறிஞர்களின் பெயர்களில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு புதிய திட்ட மதிப்பீடு தயாரிப்பது. புது பஸ்ஸ்டான்ட் பகுதியில் மேற்கு மற்றும் கிழக்கு நுழைவு வாயில் பகுதிகளில் சாலை மற்றும் பாலத்தை ரூ.5.40 லட்சத்தில் அகலப்படுத்துவது. எஸ்பி அலுவலகம் அருகே ரூ.1.20 லட்சத்தில் சிறுபாலம் கட்டுவது. காமராஜர் வளைவு பகுதி எளம்பலூர் சாலையில் ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தள விரிவாக்கப்பணி மேற்கொள்வது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சியின் 21 வார்டு பகுதிகளிலும் கொசு புகைமருந்து தெளிப்பது. ஒருங்கிணைந்த குடியிருப்பு குடிசை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடந்து வரும் பணிகளின் குடியிருப்பு தாரர்களான 580 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சி கவுன்சிலர்கள் பாரி, கனகராஜ், சரவணன், ரஹமத்துல்லா, கருணாநிதி, ஜெயக்குமார், ரமேஷ்பாண்டியன், ஈஸ்வரி, புவனேஷ்வரி, பொற்கொடி, கண்ணகி, சுசீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

அண்ணாசாலையில் விதி மீறி கட்டிய வணிகவளாகத்துக்கு சீல்

Print PDF

தினகரன் 28.07.2010

அண்ணாசாலையில் விதி மீறி கட்டிய வணிகவளாகத்துக்கு சீல்

  

தேனாம்பேட்டை சிக்னல் அருகே விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள வணிக நிறுவன கட்டிடத்துக்கு நேற்று சி.எம்.டி.. அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை, ஜூலை 28: அண்ணாசாலையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 மாடி கட்டிடத்திற்கு சிஎம்டிஏ அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை கண்டறிந்து அவற்றுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்றுக்கு சிஎம்டிஏ அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்

இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரி கூறுகையில், ‘அண்ணாசாலையில் எண்.409ல் (பழைய எண்.286) தரைதளம் மற்றும் முதல் தளம் ஒரு பகுதியும், இரண்டாம் தளம் ஒரு பகுதியும் கட்டவும், இதில் தரைதளம் குடிசைத் தொழிலுக்கும், மற்ற இரண்டு தளங்களும் குடியிருப்புக்கும் பயன்படுத்தப்படும் என்று மாநகராட்சியில் அனுமதி பெறப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன்படி தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டு பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

இந்த கட்டிடம் வணிக பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு உபகரணங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. சிஎம்டிஏவின் விதிமுறைகளை இந்த கட்டிட உரிமையாளர் பின்பற்றவில்லை. எனவே இந்த கட்டிடம் சீல் வைக்கப்பட்டுள்ளதுஎன்றார்.

 

விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு சீல்: சி.எம்.டி.ஏ. நடவடிக்கை

Print PDF

தினமணி 28.07.2010

விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு சீல்: சி.எம்.டி.. நடவடிக்கை

சென்னை, ஜூலை 27: சென்னை தேனாம்பேட்டையில் குடியிருப்பு வளாகம் கட்ட வாங்கிய அனுமதியை பயன்படுத்தி விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட அடுக்குமாடி வணிக வளாகத்தை சி.எம்.டி.. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட, கட்டப்பட்டு வரும் பல்வேறு கட்டடங்களை பட்டியலிட்டு சீல் வைக்கும் நடவடிக்கைகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும சி.எம்.டி.. அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சில மாதங்களாக இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில், அண்ணா சாலை தேனாம்பேட்டை சர்வே எண்: 1433--3-ல் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தரை தளத்துடன் 2 தளங்கள் கொண்ட குடியிருப்பு வளாகம் கட்ட அந்த நிலத்தின் உரிமையாளர் சென்னை மாநகராட்சியில் 2007 நவம்பர் 22-ம் தேதி அனுமதி பெற்றார்.

ஆனால், இந்த அனுமதியைப் பயன்படுத்தி விதிகளுக்கு புறம்பாக தரைதளத்துடன் 4 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தை அவர் கட்டியுள்ளது சி.எம்.டி.. அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த கட்டடத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு விதிமீறல்கள் குறித்து விளக்கம் கேட்டு சி.எம்.டி.. தரப்பில் இருந்து அந்த நிலத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த நோட்டீஸ்களுக்கு கட்டடத்தின் உரிமையாளர் உரிய விளக்கம் அளிக்காததால், அந்த வளாகத்தை சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட கட்டட வளாகத்திற்கு சி.எம்.டி.. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலையில் சீல் வைத்தனர்.

Last Updated on Wednesday, 28 July 2010 07:57
 


Page 60 of 96