Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

ரூ.35 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமணி 28.07.2010

ரூ.35 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கம்

சிவகாசி, ஜூலை 27: சிவகாசி-நாரணாபுரம் சாலை, நகராட்சிப் பகுதியில் ரூ.35 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை துவங்கியது. சிவகாசி-விருந்துநகர் புறவழிச் சாலையிலிருந்து 250 மீட்டர் வரையில் நாரணாபுரத்திற்குச் சாலை செல்கிறது.

இந்தச் சாலையின் வடக்குப் பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. எனவே இப்பகுதியில் 30 அடி அகலத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நகராட்சி முடிவு செய்தது. இதற்கான நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முருகன், நகர்மன்றத் தலைவர் ராதிகாதேவி, துணைத் தலைவர் ஜி.அசோகன், சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மழை காலங்களில் தண்ணீர் தேங்காது: பக்கிங்ஹாம் உள்ளிட்ட பெரிய வடிகால்கள் மேம்படுத்தும் பணி 3 ஆண்டுகளில் முடியும்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

Print PDF

தினமணி 27.07.2010

மழை காலங்களில் தண்ணீர் தேங்காது: பக்கிங்ஹாம் உள்ளிட்ட பெரிய வடிகால்கள் மேம்படுத்தும் பணி 3 ஆண்டுகளில் முடியும்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜூலை 26: பொதுப் பணித்துறை சார்பில் சென்னை நகரில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பெரிய வடிகால்களை மேம்படுத்தும் பணிகள் 2013-ம் ஆண்டில் நிறைவு பெறும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

÷ரூ.633 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகள் நிறைவு பெறும்போது, பெரு மழை காலங்களில் சென்னை நகரில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை தவிர்க்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

÷இதுகுறித்து பொதுப்பணித் துறையின் கண்காணிப்பு பொறியாளர் கே.விஜய்குமார், செயற்பொறியாளர்கள் மகேஸ்வரன், காந்திமதி நாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

÷மழை காலங்களில் ஏற்படும் வெள்ளச் சேதங்களை தடுக்கும் வகையில் பொதுப்பணித் துறையின் கீழ் வரும் பெரிய வடிகால், நீர்வழித் தடங்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் சிறிய வடிகால்களை ஒருங்கிணைத்து சீர் செய்ய மாநகராட்சி திட்டமிட்டது.

÷இதனடிப்படையில் சென்னை முழுவதும் 12 வடி நிலங்களை வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய 4 பகுதிகளாகப் பிரித்து மழை நீர் வடிகால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

÷இந்த 4 திட்டங்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மூலம் மத்திய ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட ஆணையத்திடம் இருந்து ரூ.1447 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பொதுப் பணித்துறையின் சார்பில் ரூ.633 கோடியும், சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.814 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

÷பொதுப் பணித்துறை மூலம் சென்னை நகரில் வடக்கு பக்கிங்ஹாம், மத்திய பக்கிங்ஹாம், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயினை மேம்படுத்துதல், ரூ.25 கோடியில் விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாயினை மேம்படுத்துதல், ரூ.53 கோடியில் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயின் வெள்ள நீரினை ஒக்கியம் மடுவில் இருந்து கடலுக்குத் திருப்ப புதிதாக நேர்வெட்டுக் கால்வாய் அமைத்தல், ரூ.58 கோடியில் வேளச்சேரி ஏரி உபரி நீரினை பக்கிங்ஹாம் கால்வாய்க்கு திருப்ப புதிதாக இணைப்புக் கால்வாய் அமைத்தல் என 10 பணிகள் ரூ.633 கோடியில் நடந்து வருகின்றன.

÷இதில் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயினை ஒக்கியம் மடுவு முதல் முட்டுக்காடு வரை மேம்படுத்தும் பணி ரூ.78 கோடியில் நடந்து வருகிறது. சுமார் 13.5 கிலோ மீட்டர் தொலைவு வரையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

÷25 மீட்டர் அகலம் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயினை 100 மீட்டர் அகலத்தில் விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

கால்வாய் ஓரத்தில் சேவை வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகின்றன.

÷மழை காலங்களில் கால்வாய்களில் ஓடும் உபரி நீரை, பெரிய கால்வாய்களில் இணைத்து கடலில் கொண்டு விடுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 2013-ம் ஆண்டில் இப்பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதன்பின்னர் சென்னையில் மக்கள் சந்திக்கும் மழை நீர் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்.

÷மழை நீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் சில மணி நேரங்களிலேயே தண்ணீர் வடிந்துவிட வழிவகை ஏற்படும். இதற்காகப் புதிய வடிகால்களை அமைத்தும், ஏற்கெனவே உள்ள வடிகால்களை சீரமைத்தும் வருகிறோம் என்று தெரிவித்தனர்.

 

கட்டட அனுமதிக்கு சிறப்பு பிரிவு துவக்கம்

Print PDF

தினகரன் 26.07.2010

கட்டட அனுமதிக்கு சிறப்பு பிரிவு துவக்கம்

கோவை, ஜூலை 26: கட்டட வரைவு அனுமதி வழங்கு வதை எளிதாக்க, மக்களுக்கு உதவ சிறப்பு பிரிவு துவக்கப்படும்.

கோவை மாநகராட்சியில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பி லான வீட்டு கட்டடங்களுக் கும், ஆயிரம் சதுர அடி பரப்பு வரை வணிக கட்டடத்திற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

கட்டட வரைவு அனுமதி பெறுவதில் பல்வேறு நடை முறை சிக்கல் இருக்கிறது. பல மாதங்களாக கட்டட வரைவு அனுமதிக்காக ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் காத்திருக்கிறது. சிலர் மாநகராட்சி அனுமதியின்றி கட்ட டம் கட்டி வருகின்றனர். இதனால், அனுமதியற்ற கட்டடங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இது மாநகராட்சிக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்துகிறது.

ஆட்டோ டிசிஆர் என்ற கட்டட வரைவு அனுமதிக் கான ஆன்லைன் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மாநகராட்சியில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை.

மாநகராட்சியின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மண்டலங்களில் கட்டட வரைவு அனுமதிக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட் டது. ஏழை மக்கள், தடையி ன்றி கட்டட வரைவு அனுமதி பெற புதிய திட்டத்தை மாநக ராட்சி தயாரித்துள்ளது. ஒரே நாளில் அனுமதி வழங்கும் வகையில் நடவடிக்கை எடு க்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், " நகரமைப்பு பிரிவின் ஒரு பகுதியில் பொது மக்களுக்கு கட்டட வரைவு அனுமதி வழங்க தனி பிரிவு ஒதுக்கப்படும். விரைவில் இந்த பிரிவு செயல்பாட்டிற்கு வரும். மண்டல அலுவலகங்களில் கட்டட வரைவு அனு மதி பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருக்கிறது. மாநகராட்சி உரிமம் பெற்ற சர்வேயர்களின் ஒப்புதல் பெறவேண்டும்.

கட்டட வரைவு அனுமதி பெறவேண்டியவர்கள், தங் கள் கட்டடம் தொடர்பான ஆவணங்களை கொண்டு வந்தால் போதும். உரிய கட்டணத்தில் கட்டட வரைவு அனுமதி வழங்கப்படும். இதற்கு சர்வேயர்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. மாநகராட்சி நகரமைப்பு பிரி வின் அதிகார எல்லைக்குள் உள்ள அளவு படி கட்டடத்திற்கு அனுமதி தரப்படும்.

அதற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு உள்ளூர் திட்ட குழுமம் தான் அனுமதி வழங்கவேண்டும். மக்களை நேரிடையாக வரவழைத்து கட்டட வரைவு அனுமதி வழங்குவதன் மூலம் பிரச்னைகளை எளிதாக களைய முடியும். தாமதத்தை வெகு வாக தவிர்க்க முடியும், " என்றார்.

 


Page 61 of 96