Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

அனுமதி பெறாத கட்டடம் இடிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினகரன் 20.07.2010

அனுமதி பெறாத கட்டடம் இடிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

கோவை, ஜூலை 20:கோவை மாநகரில் அனுமதியற்ற முறையில் கட்டப்பட்ட 6 ஆயிரம் சதுர அடி கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக இடித்து அகற்றினர்.

கோவை ஒப்பணக்காரவீதியைச் சேர்ந்தவர் மஹிபால். இவர் ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் சாலையில் அபார்ட்மென்ட் கட்டி வருகிறார். இதற்குமுன் உள்ள காலியிடத்தில் மாநகராட்சியிடம் அனுமதி வாங்காமல் 3 மாடி கட்டடத்தை கட்டி வந்துள்ளார். அனுமதி பெறாமல் கட்டப்பட்டதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் இக்கட்டடத்தை 3 மாதங்களுக்கு முன் இடித்தனர்.

இந்நிலையில் அதே இடத்தில் அனுமதி வாங்காமல் மீண்டும் 3 மாடி கட்டடத்தை கட்டியுள்ளார். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா உத்தரவின்பேரில் மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் கட்டடத்தை இடித்தனர்.

மாநகராட்சி உதவி நகரமைப்பு பிரிவு அதிகாரி ரவிச்சந்திரன் கூறுகையில், ‘இங்குள் காலியிடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டம் கட்டியிருந்தனர். அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடத்தை இடித்தோம். அதே இடத்தில் மீண்டும் அனுமதி எதுவும் பெறாமல் கட்டடம் கட்டி வந்துள்ளனர். 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட கட்டடத்தை மீண்டும் இடிக்கிறோம். அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடம் இடிப்பு பணி தொடரும்என்றார்.

 

விரைவில் திட்ட மதிப்பீடு நகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு

Print PDF

தினகரன் 30.06.2010

விரைவில் திட்ட மதிப்பீடு நகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு

நகராட்சி பொறியாளர் ராஜா: கரூர் நகராட்சிக்கான ரூ.25 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் தொடர்பாக இன்று சென்னையில் துணைமுதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெறுவதால் நகராட்சி ஆணையர் சென்றுள்ளார். நகராட்சி மூலம் கர்டர் அகற்றப்பட்டதால், இப்பணி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.என்றார். உறுப்பினர் சூர்யா கதிரவன்: கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டுவதற்காக அங்கிருந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டது. தற்போது 5 வயதிற்கு உட்பட்ட 40 குழந்தைகள் அங்குள்ளனர். அவர்களுக்கு உரிய கட்டடம் கட்டித்தராமல் அவதிபடுகின்றனர் என்றார். நகராட்சி தலைவர்: விரைவில் இதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டிதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கரூர் நகராட்சி மூலம் வடக்கு பசுபதிபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணி கரூர் ஜேசிஐ போர்ட் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான சாவியை நகராட்சி தலைவர் ஜேசிஐ போர்ட் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

Last Updated on Wednesday, 30 June 2010 11:50
 

கா‌ன்கிரீ‌ட் வீடுக‌ள் க‌ட்டுவத‌ற்கு விதிமு‌றைக‌ளை தள‌ர்‌த்த ‌வே‌ண்டு‌ம்

Print PDF

தினமணி 30.06.2010

கா‌ன்கிரீ‌ட் வீடுக‌ள் க‌ட்டுவத‌ற்கு விதிமு‌றைக‌ளை தள‌ர்‌த்த ‌வே‌ண்டு‌ம்

மது‌ரை, பி‌ப்.15: மது‌ரை மாநகரா‌ட்சி‌ப் பகுதியி‌ல் ஏ‌ழை, எளியவ‌ர்க‌ள் வீடுக‌ள் க‌ட்டுவத‌ற்கு விதிமு‌றைக‌ளை தள‌ர்‌த்த ‌வே‌ண்டு‌ம் எ‌ன்று வட‌க்கு ம‌ண்டல‌க் கூ‌ட்ட‌த்தி‌ல் தீ‌ர்மான‌ம் நி‌றை‌வே‌ற்ற‌ப்பட்டது.

மாநகரா‌ட்சி கூ‌ட்ட அர‌ங்கி‌ல் தி‌ங்க‌ள்கிழ‌மை ந‌டை‌பெ‌ற்ற இ‌ந்த‌க் கூ‌ட்ட‌த்து‌க்கு வட‌க்கு ம‌ண்டல‌த் த‌லைவ‌ர் இச‌க்கிமு‌த்து த‌லை‌மை வகி‌த்தா‌ர். மாநகரா‌ட்சி உதவி ஆ‌ணையாள‌ர் ராஜகா‌ந்தி மு‌ன்னி‌லை வகி‌த்தா‌ர். கூ‌ட்ட‌த்தி‌ல் உறு‌ப்பின‌ர்களி‌ன் ஒ‌ப்புதலுட‌ன் நி‌றை‌வே‌ற்ற‌ப்ப‌ட்ட தீ‌ர்மான‌ங்க‌ள்:

ஜவக‌ர்லா‌ல் ‌நேரு நக‌ர் புனர‌மை‌ப்பு‌த் தி‌ட்ட‌த்தி‌ல் வட‌க்கு ம‌ண்டல‌த்தி‌ல் ஏராளமான ஏ‌ழை, எளியவ‌ர்க‌ள் ஆ‌ர்வ‌த்துட‌ன் கா‌ன்கிரீ‌ட் வீடுக‌ள் க‌ட்டி உ‌ள்ளன‌ர். ‌மேலு‌ம் பல‌ர் க‌ட்டுவத‌ற்கான ஏ‌ற்பாடுக‌ளையு‌ம் ‌செ‌ய்து வருகி‌ன்றன‌ர்.

இ‌ந் நி‌லையி‌ல் திடீ‌ரென ‌மேலு‌ம் புதிய உ‌த்தரவுக‌ள் பிற‌ப்பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. என‌வே, வீடுக‌ள் க‌ட்டுவதி‌ல் உ‌ள்ள விதிமு‌றைக‌ளை தள‌ர்‌த்த ‌வே‌ண்டு‌ம்.

வட‌க்கு ம‌ண்டல‌த்தி‌ல் உ‌ள்ள 1 முத‌ல் 21 வா‌ர்டுகளி‌ல் பய‌ன்பா‌ட்டு‌க்கு ‌செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட 2}ம் க‌ட்ட ‌வை‌கை கூ‌ட்டு‌க் குடிநீ‌ர் தி‌ட்ட‌ம், வட‌க்கு‌ப் பகுதியி‌ல் உ‌ள்ள சில வா‌ர்டுகளு‌க்கு இ‌ன்னு‌ம் வ‌ந்து‌சேரவி‌ல்‌லை.

வட‌க்கு ம‌ண்டல‌த்தி‌ல் உ‌ள்ள அ‌னை‌த்து ‌மே‌ல்நி‌லை‌த் ‌தொ‌ட்டிகளிலு‌ம் குடிநீ‌ரை ‌தே‌க்கி விநி‌யேôக‌ம் ‌செ‌ய்ய ‌வே‌ண்டு‌ம் எ‌ன்பன உ‌ள்ளி‌ட்ட தீ‌ர்மான‌ங்க‌ள் நி‌றை‌வே‌ற்ற‌ப்ப‌ட்டன. கூ‌ட்ட‌த்தி‌ல் கரு‌ப்‌பையா, மு.சேது, நீல‌மேக‌ம் உ‌ள்ளி‌ட்ட அ‌னை‌த்து கவு‌ன்சில‌ர்களு‌ம் ப‌ங்‌கே‌ற்றன‌ர்.

 


Page 63 of 96