Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

வரைபட புள்ளிவிபர அறிக்கை தயாரிப்பு

Print PDF

தினமலர் 30.06.2010

வரைபட புள்ளிவிபர அறிக்கை தயாரிப்பு

திருப்பூர்: வரும் 2011ல் மாநகராட்சி விரிவடைவதற்கேற்ப, வார்டு பிரிப்பது தொடர் பான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. அதற் காக, ஊராட்சிகளில் வரைபடத்துடன் கூடிய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.திருப்பூர் மாநகராட்சியுடன் எட்டு ஊராட்சிகளை இணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. அதற்காக, ஊராட்சிகளின் மொத்த வார்டுகள், சர்வே எண், ரோடு, குளம், குட் டைகள் போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

சேகரிக்கப்பட்ட விபரங்களை கொண்டு, ஊராட்சி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்புவதற்காக, வரைபடம் அடங்கிய "சிடி'க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சென்னையில், மாநகராட்சி அமைப்பு தனி அலுவலர் பிச்சை தலைமையில் அதற் கான ஆலோசனை கூட்டம் நடக்கிறது.மாநகராட்சியுடன் இணைய உள்ள நகராட்சி செயல் அலுவலர்கள் மற் றும் ஊராட்சி உதவியாளர் கள் பங்கேற்கின்றனர்.அக்கூட்டத்தில் பங்கேற்க கொண்டு செல்வதற்காக, வரைபடத்துடன் கூடிய புள்ளிவிபர பட்டியல் தயாரிப்பு பணி நேற்று துரிதகதியில் நடந்தது.

 

நெல்லையில் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்த அரசு உத்தரவு: ஆட்சியர் தகவல்

Print PDF

தினமணி 29.06.2010

நெல்லையில் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்த அரசு உத்தரவு: ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி, ஜூன் 28: சென்னை பெருநகர் வளர்ச்சி விதிகளுக்கு இணையாக திருநெல்வேலியிலும் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர் பகுதிக்கான 2 ஆம் முழுமைத் திட்டத்தின் வளர்ச்சி விதிகளுக்கு இணையாக கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சேலம் போன்ற நகர்ப் பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்து அரசு ஆய்வு செய்தது.

அதனடிப்படையில், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி, ஈரோடு, கோவை, திருப்பூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் சார்ந்த நகர்ப்புற பகுதிகளில் (செங்கல்பட்டு, மாமல்லபுரம், கும்மிடிப்பூண்டி) வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த விதியின் சிறப்பு அம்சமாக இரண்டு தளத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அல்லது வணிக கட்டடங்கள் அல்லது நான்கு குடியிருப்புகளுக்கும் கூடுதலாக எண்ணிக்கை கொண்ட குடியிருப்பு கட்டடங்கள் அல்லது 300 சதுர மீட்டருக்கு கூடுதலாக தளப்பரப்பு கொண்ட வணிக கட்டடங்களை குறிப்பதாகும்.

இவ்வாறாக கட்டடங்களுக்கு மனையை ஒட்டியுள்ள பொதுச்சாலை அல்லது மனைக்கு வழிதரும் பாதையின் குறைந்தபட்ச அகலம் 9 மீட்டராக இருக்க வேண்டும்.

பலமாடிக் கட்டடங்கள்:

பலமாடிக் கட்டடங்கள் என்பது 4 தளங்களுக்கு மேல் அல்லது 15 மீட்டர் உயரத்துக்கு அல்லது அதற்கு மேலாக உள்ள கட்டடத்தை குறிப்பதாகும்.

இக்கட்டடங்கள் கட்டுவதற்கு 1200 சதுர மீட்டருக்கு குறையாத மனைப்பரப்பு இருக்க வேண்டும்.

மனையை ஒட்டியுள்ள சாலையின் அகலம் குறைந்தபட்சம் 18 மீட்டராக இருக்க வேண்டும். மென்பொருள் அல்லது தகவல் தொழில்நுட்பம் போன்ற உபயோகத்துக்காக கட்டப்படும் கட்டடங்கள் 1500 சதுர மீட்டருக்கு குறையாத மனைப்பரபப்பு உடையதாக இருக்க வேண்டும்.

மனையை ஒட்டியுள்ள பொதுச் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 18 மீட்டர் ஆக இருக்குமானால் 60 மீட்டர் உயரம் வரை பன்மாடி கட்டடம் அனுமதிக்கப்படும். அச்சாலை அகலம் குறைந்தது 30.5 மீ இருக்குமானால் 60 மீட்டருக்கும் கூடுதலான உயரம் உடைய கட்டடங்கள் சிறப்பு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும்.

இந்த வளர்ச்சி கட்டுப்பாடு விதிமுறைகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக நிலுவையில் உள்ள பன்மாடி கட்டடங்கள் உள்பட அனைத்து திட்ட அனுமதி விண்ணப்பங்களும் இவ்வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியிடுவதற்கு முன்னர் இருந்து வந்த விதிகள் மற்றும் திட்ட வரைமுறைகளுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

யாதொரு நிகழ்வுகளிலும் தீர்க்க முடியாத குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் எழும்பட்சத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குநரை அமைப்பாளராக கொண்ட குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர்.

 

தமிழகத்தில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்குவளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளின் சிறப்பம்சங்கள்:அரசு உத்தரவு

Print PDF

தினமலர் 29.06.2010

தமிழகத்தில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்குவளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளின் சிறப்பம்சங்கள்:அரசு உத்தரவு

திருநெல்வேலி:தமிழகத்தில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கு வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளின் சிறப்பம்சங்கம் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், தூத்துகுடி, ஈரோடு, கோவை, திருப்பூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் சார்ந்த சிறு நகர் பகுதிகளில (செங்கல்பட்டு, மாமல்லபுரம், கும்மிடிப்பூண்டி) வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளின் சிறப்பு அம்சங்களின் விபரமாவது:சிறப்பு கட்டடங்கள் எனப்படுவது இரண்டு தளத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அல்லது வணிக கட்டடஙகள் அல்லது நான்கு குடியிருப்புகளுக்கும் கூடுதலாக எண்ணிக்கை கொண்ட வணிக கட்டடங்களை குறிப்பதாகும். இக்கட்டடங்களுக்கு மனையை ஒட்டியுள்ள பொது சாலை அல்லது மனைக்கு வழி தரும் பாதையின் குறைந்தபட்ச அகலம் 9 மீட்டராக இருக்க வேண்டும்.தொகுப்பு வளர்ச்சி என்பது கட்டடங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற வேறுபாடின்றி ஒரு குறிப்பிட்ட மனையில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான கட்டடங்களில் அமைக்கப்படும் குடியிருப்பு அல்லது வணிகம் அல்லது அவை இரண்டும் கலந்து கட்டப்படும் வளர்ச்சியை குறிப்பதாகும். இவ்வாறான கட்டடங்களுக்கு மனையை ஒட்டி அல்லது மனைக்கு வழி தரும் பொது சாலையின் குறைந்தபட்ச அகலம் 9 மீட்டராக இருக்க வேண்டும்.

பல மாடி கட்டடங்கள் என்பது 4 தளங்களுக்கு மேல் அல்லது 15 மீட்டர் உயரத்திற்கு அல்லது அதற்கு மேலாக உள்ள கட்டடத்தை குறிப்பதாகும். இக்கட்டடங்கள் கட்டுவதற்கு 1,200 சதுர மீட்டருக்கு குறையாத மனை பரப்பு வேண்டும். மனையை ஒட்டியுள்ள சாலையின் அகலம் குறைந்தபட்சம் 18 மீட்டராக இருக்க வேண்டும். சில வரைமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பாக தரைப்பரப்பு குறியீடு மற்றும் கட்டடத்தின் உயரம் ஆகியவை குறித்த வரையறைக்க உட்பட்ட 12மீ/15மீ அகலம் உள்ள பொது சாலையை ஒட்டியுள்ள மனையிடத்தில் பல மாடி கட்டடங்கள் அனுமதிக்கப்படலாம்.

மென் பொருள் அல்லது தகவல் தொழில் நுட்பம் போன்ற உபயோகத்திற்காக கட்டப்படும் கட்டடங்கள் 1,500 சதுர மீட்டருக்கு குறையாத மனை பரப்பு உடையதாக இருக்க வேண்டும். மனையை ஒட்டியுள்ள பொது சாலையின் அகலம் குறைந்தபட்சம் 18 மீட்டராக இருக்குமானால் 60 மீட்டர் உயரம் வரை பன்மாடி கட்டடம் அனுமதிக்கப்படும். அச்சாலை அகலம் குறைந்தது 30.5 மீட்டராக இருக்குமானால் 60 மீட்டருக்கும் கூடுதலான உயரம் உடைய கட்டடங்கள் சிறப்பு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்படும் தரைப்பரப்பு குறியீடு சாதாரணமாக வழங்கப்படும் தரைப்பரப்பு குறியீட்டின் 1.5 மடங்காக இருக்க வேண்டும்.ஊக்க தரைப்பரப்பு குறியீடு அறிவிக்கப்பட்ட சில குறிப்பிட்ட பகுதிகளில் சாதாரணமாக அனுமதிக்கப்படும் தரைப்பரப்பு குறியீட்டிற்கு மேலாக சிறப்பு மற்றும் தொகுப்பு கட்டடங்களுக்கு 0.5 மிகாமலும், பல மாடி கட்டடங்களுக்கு 1.0க்கு மிகாமலும் அரசால் ஒப்புதல் பெற்ற குறிப்பிடப்பட்ட கட்டணங்களை பெற்று கொண்டு ஊக்க தரைப்பரப்பு குறியீடு வழங்கப்படலாம்.

பல மாடி கட்டட வளர்ச்சிக்காக குடியிருப்புகள் மற்றும் பிராதன குடியிருப்புகளுக்கான வளர்ச்சி உத்தேசிக்கப்படும் மனையின் பரபரப்பு 10 ஆயிரம் சதுர மீட்டருக்கு (1 எக்டேர்) அதிகமாக அமைந்தால் சொந்த மனை பரப்பில் குறைந்தபட்சம் 10 சதவீதம் மனை பரப்பை அபிவிருத்தியாக குறைந்த வருவாய் பிரிவினருக்காக 45 சதுர மீட்டர் தளப் பரப்பளவிற்கு மிகாத குடியிருப்புகள் கட்ட வேண்டும்.சிறப்பு கட்டங்கள் தொகுப்பு வளர்ச்சிகள், பல அடுக்கு மாடி கட்டடங்களுக்கான மனையின் முதல் 2,500 சதுர மீட்டர் பரப்பிற்கு பொழுதுபோக்கு பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு தேவையில்லை.

2,500 சதுர மீட்டருக்கு மேல் குறைந்தது 10 மீட்டர் நீளம் அளவுடன் கூடிய 10 சதவீத நிலப்பகுதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவ்வகையான ஒதுக்கீடு செய்யப்படும் திறந்த வெளி பகுதி பொது சாலையை சார்ந்து அமைந்திருக்க வேண்டும்.தீர்க்க முடியாத குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் எழுந்தால் வீட்டு வசதி வாரிய அரசு செயலாளர், நகர்ப்புற வளர்ச்சி அரசு செயலாளர், நகர ஊரமைப்பு இயக்குனர் கொண்ட குழுவால் தகுதிக்கேற்ப வரன்முறை விதிகளை தளர்த்தி முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

 


Page 65 of 96