Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

கார்னர் வீடு, வீட்டு மனை பத்திரம் பதிவு செய்வது எப்படி?

Print PDF

தினகரன் 22.06.2010

கார்னர் வீடு, வீட்டு மனை பத்திரம் பதிவு செய்வது எப்படி?

கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை வைத்து விரும்பிய இடத்தில் வீடு, நிலம், காலி மனை போன்ற சொத்தை கிரையமாக வாங்குவோம். அதை நாம் முழுமையாக அனுபவிக்க பதிவு செய்ய வேண்டும்.

வீடு மற்றும் வீட்டு மனை வாங்கும் போது மூலப்பத்திரத்தை வைத்து கண்டிப்பாக வில்லங்கம் பார்க்க வேண்டும். ஏன் என்றால் வீடு, வீட்டு மனையை வங்கி கடன் அல்லது வேறு ஏதாவதுக்கு அடமானம் வைத்திருக்கலாம். சொத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என பிரித்து சதுர அடிக்கு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரையம் என்றால் சொத்தின் மதிப்பில் இருந்து 8 சதவீதத்திற்கு பத்திரம் வாங்கி அதனை அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தரிடம் கொடுத்து சரியான முகவரியுடன் சர்வே எண், நான்குமால் பட்டா எண், வீட்டு வரி ரசீது, குழாய் வரி, மின் இணைப்பு எண் ஆகியவற்றை எழுதவும். இத்துடன் வீட்டு வரி ரசீது, மூலப்பத்திரம், சர்வே எண், பட்டா எண் ஆகியவற்றின் நகல் மற்றும் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப சேர்க்கை படிவத்தில் எழுதி பத்திரத்துடன் இணைத்து பதிவு செய்ய வேண்டும்.

வாங்குபவர், விற்பவர் ஆகியோரின் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகிய நகல் ஆகியவற்றை இணைத்து சார் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும்.

சொத்து மதிப்புக்கு ஏற்ப பத்திரம் வாங்கப்பட்டுள்ளதா, சரியான சொத்துதானா என ஆய்வு செய்து பதிவு செய்ய கட்டணத்தை சார் பதிவாளர் நிர்ணயிப்பார். சொத்தின் மதிப்பில் ஒரு சதவீதத்தை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இக்கட்டணம் ரூ.ஆயிரத்துக்குள் இருந்தால் ரொக்கமாக அலுவலகத்தில் செலுத்தி பதிவு செய்யலாம். ஆயிரத்திற்கு மேல் சென்றால் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சார் பதிவாளர், பத்திர பதிவு அலுவலகம் என்ற பெயரில் வங்கியில் டி.டி எடுத்து பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும். இதில் 2 பேர் சாட்சி கையெழுத்து போட வேண்டும். சொத்தின் மதிப்பு குறைவாக இருந்து சார் பதிவாளர் சந்தேகம் அடைந்தால் சொத்தை மதிப்பீடு செய்ய பதிவாளருக்கு அனுமதி உள்ளது. பதிவு செய்த பின்பு மூன்று நாட்களில் பதிவு பத்திரம் பெறலாம்

 

வீடுகளில் மழை நீர் சேமிப்பு கட்டாயம்

Print PDF

தினகரன் 21.06.2010

வீடுகளில் மழை நீர் சேமிப்பு கட்டாயம்

பெங்களூர், ஜூன் 21: பெருநகர் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் மழை நீர் சேமிப்பு தொட்டி கட்டாயமாக அமைக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று நகரவளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

பெங்களூர் ராஜாஜிநகர் சட்டப்பேரவை தொகுதியில் மழை நீர் சேமிப்பு குறித்து 60 நாட்கள் விழிப்புணர்வு முகாம் நேற்று முடிந்தது.

இதன் நிறைவு விழாவில் பங்கேற்று அமைச்சர் பேசியதாவது: மழைநீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் திட்டம் பள்ளி மாணவர்களை கொண்டு தொடங்கப் பட்டது. ராஜாஜிநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட முயற்சி முழு வெற்றி கொடுத்துள்ளது.

புதிய வீடு கட்டுபவர்கள் மட்டுமல்லால், பழைய வீடுகளில் இட வசதி உள்ளவர்கள் தானாக முன்வந்து மழை நீர் சேமிப்பு தொட்டி அமைத்துள்ளனர்.

இயற்கை கொடுக்கும் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தினால், எதிர்க்கால சந்ததி சிறப்பாக இருப்பதுடன், நிலத்தடி நீரின் அளவு உயரும். இதன் மூலம் பூமீ வெப்பமயமாவதை தடுக்க முடியும்.

இதுபோன்ற நல்ல பணிகளை சட்டம் போட்டு செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை. சமூக பற்றுள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து செயல்படுத்த வேண்டும்.

மழை நீர் சேமிப்பு திட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் வீடுகளில் கட்டாயம் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விரைவில் மாநகராட்சி மூலம் சட்டம் கொண்டுவரப்படும்.

இதை தொடர்ந்து அரசு துறை யில் பணியாற்றுவோர் உள்பட அனைவருக்கும் பொருந்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 

கட்டிடங்களுக்கு திட்ட அனுமதிவழங்கஉள்ளாட்சிகளுக்கு அதிகாரம்: கலெக்டர்

Print PDF

தினமலர் 21.06.2010

கட்டிடங்களுக்கு திட்ட அனுமதிவழங்கஉள்ளாட்சிகளுக்கு அதிகாரம்: கலெக்டர்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி உள்ளாட்சிகள் வழங்கிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை:வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் நடப்பாண்டுக்கு மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளில், "சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடிக்கள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகார ஒப்படைப்பு வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நகர் ஊரமைப்பு இயக்குனர் செயலாணைப்படி உள்ளூர் திட்ட குழுமம், புதுநகர் வளர்ச்சி குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 49ன் கீழ் திட்ட அனுமதியும், பிற முழுமைத் திட்ட அறிவிக்கப்படாத பகுதிகளில் அமையும் உள்ளாட்சிகளின் தொழில் நுட்ப அனுமதியும், அனைத்து விதிகளுக்கு உட்பட்டு (தமிழ்நாடு மாவட்ட நகராட்சி சட்டம் 1971, ஊராட்சி சட்டம் 1997, முழுமை திட்ட விதி, விரிவு அபிவிருத்தி திட்ட விதி மனைப்பிரிவு நிபந்தனைகள்) உள்ளாட்சிகளுக்கு ஜூலை முதல் தேதி முதல் மனை ஒப்புதலுடன் கூடிய கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.நான்கு குடியிருப்புகள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடங்கள், 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் வாகன நிறுத்துமிடத்துக்கான தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக வளாகம் மற்றும் மனை ஒப்புதல் வழங்கலாம்.

 


Page 66 of 96