Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

தென்மும்பையில் 876 கட்டிடங்கள் ஆபத்தானவை

Print PDF

தினகரன் 18.06.2010

தென்மும்பையில் 876 கட்டிடங்கள் ஆபத்தானவை

மும்பை,ஜூன் 18: மும்பை யில் மழைக்காலத்தை யொட்டி மாநகராட்சி நிர்வாகம் மிகவும் பழைய கட்டிடங்களை ஆய்வு செய்து வருகிறது. தென் மும்பையில் மேற் கொள்ளப் பட்ட ஆய்வில் 876 கட்டி டங்கள் மிகவும் ஆபத்தான வையாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கட்டிடங்கள் அனைத்தும் 100 முதல் 125 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தொழிற் நுட்பத்தில் கட்டப்பட்ட வை ஆகும். இவை நான்கு முதல் ஆறு மாடிகள் கொண்டதாக உள்ளன. இக்கட்டிடங் கள் இருக்கும் பகுதியில் சாலைகள் மிகவும் குறுகியதாக இருக்கிறது.இதனால் மிகவும் அசுத்தமான நிலை காணப்படுகிறது. இக்கட்டி டங்களில் வசிக்கும் மக்க ளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டாலும் அவர்கள் வீடுகளை காலி செய்வ தாக இல்லை. என வே அவர்கள் தொடர்ந்து மிகவும் ஆபத் தான நிலையில் வசித்து வருகின்றனர்.

 

குடியிருப்பு, வணிக வளாக கட்டிடங்களுக்கான சிஎம்டிஏ விதிமுறைகள் மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பு

Print PDF

தினகரன் 17.06.2010

குடியிருப்பு, வணிக வளாக கட்டிடங்களுக்கான சிஎம்டிஏ விதிமுறைகள் மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பு

சென்னை, ஜூன் 17: குடியிருப்பு மற்றும் வணிக வளாக கட்டிடங்களுக்கான ஒரே மாதிரியான வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிமுறைகளை, சிறப்பு அம்சங்களை அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை பெருநகர் பகுதிக்கான 2வது முழுமை திட்டம் 2026ல் தொகுக்கப்பட்டுள்ள வளர்ச்சி விதிமுறைகளுக்கு இணையாக கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சேலம் போன்ற நகர் பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் மற்றும் வளர்ச்சி கட்டுபாட்டு விதிமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது அரசின் பரிசீலனையில் இருந்து வந்தது.

இதுபற்றி விரிவாக ஆராய்ந்த பின்னர் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி, ஈரோடு, கோவை, திருப்பூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளுர் சார்ந்த சிறு நகர் பகுதிகளில் (செங்கல்பட்டு, மாமல்லபுரம், கும்மிடிப்பூண்டி) செயல்படுத்த வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளுக்கு, கடந்த 14ம் தேதி அரசு ஒப்புதல் வழங்கி, நகர் ஊரமைப்பு சட்டத்தின் கீழ் தேவையான அறிக்கை வெளியிட அரசு ஆணையிட்டுள்ளது.

வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளின் சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

சிறப்பு கட்டிடங்கள் எனப்படுவது 2 தளத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அல்லது வணிக கட்டிடங்கள் அல்லது 4 குடியிருப்புகளுக்கும் கூடுதலான எண்ணிக்கை கொண்ட குடியிருப்பு கட்டிடம் அல்லது 300 சதுர மீட்டருக்கு கூடுதலான தளப்பரப்பு கொண்ட வணிக கட்டிடங்களை குறிப்பதாகும். மனையை ஒட்டியுள்ள பொதுச் சாலை அல்லது மனைக்கு வழி தரும் பாதை குறைந்தது 9 மீட்டராக இருக்க வேண்டும்.

தொகுப்பு வளர்ச்சி என்பது கட்டிடங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளனவா, இல்லையா என்று வேறுபாடின்றி ஒரு குறிப்பிட்ட மனையில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான கட்டிடங்களில் அமைக்கப்படும் குடியிருப்பு அல்லது வணிகம் அல்லது அவை இரண்டும் கலந்து கட்டப்படும் வளர்ச்சியை குறிப்பதாகும். இதற்கான பொது சாலையின் அகலம் குறைந்தது 9 மீட்டராக இருக்க வேண்டும். பல மாடி கட்டிடங்கள் என்பது 4 தளங்களுக்கு மேல் அல்லது 15 மீட்டர் உயரத்துக்கு அல்லது அதற்கு மேலாக உள்ள கட்டிடத்தை குறிப்பதாகும். இந்த கட்டிடங்கள் கட்ட 1200 சதுர மீட்டருக்கு குறையாத மனைப்பரப்பு இருக்க வேண்டும். இதற்கு பொது சாலையின் அகலம் குறைந்தது 18 மீட்டர் இருக்க வேண்டும். சில வரைமுறைக்குட்பட்டு தரைப்பரப்பு குறியீடு மற்றும் கட்டிடத்தின் உயரம் ஆகியவை குறித்த வரையறைக்குட்பட்டு 12 மீ அல்லது 15 மீட்டர் அகலம் உள்ள பொது சாலையை ஒட்டியுள்ள மனைகளில் பல மாடி கட்டிடங்கள் அனுமதிக்கப்படலாம். மென்பொருள், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றுக்காக கட்டப்படும் கட்டிடங்கள், 1500 சதுர மீட்டருக்கு குறையாத மனைப்பரப்பு கொண்டதாக இருக்க வேண்டும். மனையை ஒட்டியுள்ள சாலை 18 மீட்டர் ஆக இருந்தால் 60 மீட்டர் வரை உள்ள பலமாடி கட்டிடம் அனுமதிக்கப்படும். அந்த சாலை குறைந்தது 30.5 மீட்டர் அகலம் இருக்குமானால் 60 மீட்டருக்கும் கூடுதலான உயரம் உடைய கட்டிடங்கள் சிறப்பு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்படும் தரைபரப்பு குறியீடு சாதாரணமாக வாங்கப்படும் குறியீட்டின் 1.5 மடங்காக இருக்க வேண்டும். ஊக்க தரைப்பரப்பு குறியீடு அறிவிக்கப்பட்ட சில குறிப்பிட்ட பகுதிகளில் சாதாரணமாக அனுமதிக்கப்படும் தரைப்பரப்பு குறியீட்டுக்கு மேலாக சிறப்பு மற்றும் தொகுப்பு கட்டிடங்களுக்கு 0.5 மிகாமலும், பலமாடி கட்டிடங்களுக்கு 1.0க்கு மிகாமலும், அரசாங்கத்தால் ஒப்புதல் பெற்ற

அரசு அறிவிப்பு சிக்கல் ஏற்பட்டால்...

யாதொரு நிகழ்வுகளிலும் தீர்க்க முடியாத குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் எழும் பட்சத்தில் கீழ்கண்ட குழுவின் முடிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். தலைவர் (செயலாளர்& வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை), உறுப்பினர் (செயலாளர்&நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை), உறுப்பினர் (சிஎம்டிஏ உறுப்பினர்&செயலர்), அமைப்பாளர்( நகர் ஊரமைப்பு இயக்குனர்).

இந்த குழு அந்தந்த நிகழ்வுகளின் தகுதிக்கு ஏற்ப வரைமுறை விதிகளை தளர்த்தி முடிவு எடுக்கலாம்.

போன்றவற்றுக்காக கட்டப்படும் கட்டிடங்கள், 1500 சதுர மீட்டருக்கு குறையாத மனைப்பரப்பு கொண்டதாக இருக்க வேண்டும். மனையை ஒட்டியுள்ள சாலை 18 மீட்டர் ஆக இருந்தால் 60 மீட்டர் வரை உள்ள பலமாடி கட்டிடம் அனுமதிக்கப்படும். அந்த சாலை குறைந்தது 30.5 மீட்டர் அகலம் இருக்குமானால் 60 மீட்டருக்கும் கூடுதலான உயரம் உடைய கட்டிடங்கள் சிறப்பு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்படும் தரைபரப்பு குறியீடு சாதாரணமாக வாங்கப்படும் குறியீட்டின் 1.5 மடங்காக இருக்க வேண்டும். ஊக்க தரைப்பரப்பு குறியீடு அறிவிக்கப்பட்ட சில குறிப்பிட்ட பகுதிகளில் சாதாரணமாக அனுமதிக்கப்படும் தரைப்பரப்பு குறியீட்டுக்கு மேலாக சிறப்பு மற்றும் தொகுப்பு கட்டிடங்களுக்கு 0.5 மிகாமலும், பலமாடி கட்டிடங்களுக்கு 1.0க்கு மிகாமலும், அரசாங்கத்தால் ஒப்புதல் பெற்ற குறிப்பிட்ட கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு ஊக்க தரைபரப்பு குறியீடு வழங்கப்படலாம்.

ஒரு மனை, நிலம் வழியாக குறிப்பிட்டுள்ள உத்தேச சாலை வழியமைவு, சாலை அகலப்படுத்துதல், புதிய சாலைகள் செல்லும்போது இந்த முடிவால் பாதிக்கப்பட்ட மனை, நிலத்தின் பகுதிகளை நிலப்பகுதியில் இருந்து தனியாக பிரித்து மேலும் நில உரிமையாளருக்கு மாற்றத்தக்க வளர்ச்சி உரிமை கொடுக்கலாம்.

இந்த வளர்ச்சி கட்டுப்பாடு விதிகள் வெளியிடுவதற்கு முன்பாக நிலுவையில் உள்ள பலமாடி கட்டிடங்கள் உட்பட அனைத்து திட்ட அனுமதி விண்ணப்பங்களும் இந்த வளர்ச்சி கட்டுப்பாடு விதிமுறைகள் வெளியிடுவதற்கு முன்னர் இருந்து வந்த விதிகள் மற்றும் திட்ட வரை முறைகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

பலமாடி கட்டிட வளர்ச்சிக்காக குடியிருப்புகள் மற்றும் பிரதான குடியிருப்புகளுக்கான வளர்ச்சி உத்தேசிக்கப்படும் மனையின் பரப்பு 10,000 சதுர மீட்டருக்கு மேல் அதிகமாக அமைந்தால், மொத்த மனைப்பரப்பில் குறைந்த பட்சம் 10 சதவீத மனைப்பரப்பை (உள்ளாட்சி நிறுவனத்துக்கு ஒப்படைப்பு செய்யும் சாலைப்பரப்பு ஏதேனும் நீங்கலாக) அபிவிருத்தியாக குறைந்த வருவாய் பிரிவினருக்காக 45 சதுர மீட்டர் தளப்பரப்பளவுக்கு மிகாத குடியிருப்புகள் கட்ட வேண்டும்.

சிறப்பு கட்டிடங்கள், தொகுப்பு வளர்ச்சிகள், பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கான பொழுதுபோக்கு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படும் நிலங்கள் 2500 சதுர மீட்டருக்கு மேல் இருந்தால், குறைந்தது 10 மீட்டர் நீளம் அளவுடன் கூடிய 10 சதவீத நிலப்பகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இப்படி ஒதுக்கப்படும் திறந்த வெளிப்பகுதி பொது சாலையை சார்ந்து இருக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

ரூ.29.99 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் பணி துவக்கம்

Print PDF

தினமலர் 17.06.2010

ரூ.29.99 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் பணி துவக்கம்

ராயபுரம் : மழை வெள்ள பாதிப்பை தவிர்க்கும் வகையில் ராயபுரம் பகுதியில், வடிகால்வாய் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

பருவ மழைக்காலங்களில் வடசென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்படும். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சியால் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், ராயபுரம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 29.99 கோடி ரூபாய் மதிப்பில் 21.40 கி.மீ., நீளத்திற்கு மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளது.

இதில் பிரதான கால்வாய்கள் 5 (4.19 கி.மீ.,நீளம்), உள்ளூட்டு கால்வாய்கள் 38 (15.11 கி.மீ., நீளம்), சேமிப்பு கால்வாய்கள் 12 (2.10 கி.மீ., நீளம்) என அமைய உள்ளன. இத்திட்டத்தின் மூலம் புதுமனைக்குப்பம், திடீர் நகர், சிங்கார வேலர் நகர், பழைய, புதிய அமராஞ்சிபுரம், கரிமேடு காலனி, ஏழுகிணறு, பிராட்வே, முத்தியால் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகள் பயன்பெறும். கால்வாய்கள் திட்டப்பணியை சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் நேற்று ராயபுரம் செயின்ட் சேவியர் தெருவில் துவக்கி வைத்தார். அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 67 of 96