Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

கட்டட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அனுமதி

Print PDF

தினமலர் 11.06.2010

கட்டட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அனுமதி

போடி: தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் நான்கு குடியிருப்புகள் அல்லது நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளாட்சிகளே அப்ரூவல் வழங்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி தவிர நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வீடுகட்ட, தரை தளம் அமைக்க, வணிக வளாக கட்டடம் கட்ட என ஆயிரம் சதுர அடி வரை உள்ளாட்சி நிர்வாகமே அப்ரூவல் வழங்கி வந்தது. இதற்கு மேல் அளவு உள்ள இடங்களில் கட்டடம் கட்டுவதற்கு நகர ஊரமைப்பு இயக்குனரின் அனுமதி பெற வேண்டியதிருந்தது. இதனால் உரிய அனுமதி வழங்க உள்ளாட்சி நிர்வாகத்திற்கு கால தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் நிர்வாக அனுமதி கிடைக்கும் வரை பொதுமக்கள் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வந்தனர். தற்போதைய அரசு உத்தரவுப்படி 2010 ஜூன் 1 முதல், நான்கு குடியிருப்புகள் அல்லது நான்காயிரம் சதுரடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கும், வணிக வளாக தரை தளம் மற்றும் முதல் தளமும், இரண்டாயிரம் சதுர அடிக்குள் கட்டடம் கட்டடம் கட்ட உள்ளாட்சி நிர்வாகமே அனுமதி வழங்கலாம்.மேலும், அப்ரூவல் பெற்ற மனையிடங்களில் சப்-டிவிசன் பெற உள்ளாட்சி நிர்வாகமே அனுமதி வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அனுமதி பெறாத மனைகளை வாங்காதீர்நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 07.06.2010

அனுமதி பெறாத மனைகளை வாங்காதீர்நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என கமிஷனர் உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:நெல்லிக்குப்பம் நகரப் பகுதியில் விற்பனை செய் யப்படும் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைகளை வாங்க வேண் டாம். இம்மனை பிரிவுகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப் படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர முடியாது. அனுமதி பெறாத மனைகளை வாங்கினால் அதில் வீடு கட்ட அனுமதி வழங்கப்பட மாட்டாது. மீறி வீடு கட்டினால் தடை செய்வதோடு, கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். பொதுமக்கள் மனைகள் வாங்கும்போது அவை அனுமதி பெற்றவையா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கமிஷனர் கூறியுள்ளார்.

 

சித்தோடு புதுநகர் வளர்ச்சி குழும பகுதியில் கட்டிட வரைபட அனுமதி உள்ளாட்சிகளுக்கு அதிகாரம்

Print PDF

தினகரன் 04.06.2010

சித்தோடு புதுநகர் வளர்ச்சி குழும பகுதியில் கட்டிட வரைபட அனுமதி உள்ளாட்சிகளுக்கு அதிகாரம்

ஈரோடு, ஜூன் 4: சித்தோடு புதுநகர் வளர்ச்சிக்குழும பகுதிக்குட்பட்ட சித்தோடு, சூரியம்பாளையம் பேரூராட்சிகளில் 200 சதுரமீட்டர் பரப்பளவு வரை யுள்ள கட்டிடங்களுக்கு அந்தந்த உள்ளாட்சிகளில் கட்டிட வரைபட அனுமதி பெற்றுக் கொள்ள அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.சித்தோடு புதுநகர் வளர்ச்சிக்குழும தலைவரும், ஈரோடு கலெக்டருமான சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளதாவது:

சித்தோடு புதுநகர் வளர்ச்சிக்குழு பகுதியில் 200 சதுர மீட்டர் பரப்பளவு வரையுள்ள கட்டிடங்களுக்கு உள்ளாட்சிகளில் வரைபட அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ள விபரம் பொதுமக்களுக்கு சரிவர தெரிவதில்லை என்றும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வளர்ச்சியடைவதாகவும் சித்தோடு புதுநகர் வளர்ச்சி குழும கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 200 சதுரமீட்டர் பரப்பளவு வரையுள்ள கட்டிடங்களுக்கு சித்தோடு, சூரியம்பாளையம் பேரூராட்சி அலுவலகங்களில் வரைபட அனுமதி வழங்க அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளதால் கட்டிட வரைபடங்களுக்கு அந்தந்த உள்ளாட்சிகளில் அனுமதி பெற்றுக் கொள்ள லாம். பொதுமக்கள் இடம், மனை வாங்கும்போது அங்கீகாரமற்ற மனைப்பிரிவில் மனைகள் வாங்கி கட்டிட வரைபட அனுமதி பெற சிரமப்படுவதை தவிர்க்க சித்தோடு, நடுப்பாளையம் நால்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் சித்தோடு புதுநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலரை தொடர்பு கொள்ளலாம்.

 


Page 69 of 96