Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

அங்கீகாரம் பெறாத மனைகளை வாங்காதீர்: நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினகரன் 02.06.2010

அங்கீகாரம் பெறாத மனைகளை வாங்காதீர்: நகராட்சி எச்சரிக்கை

ஈரோடு, ஜூன் 2: காசிபாளையம் நகராட்சி பகுதியில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை பொதுமக்கள் வாங்கி ஏமாற வேண்டாம் என்று நகராட்சி எச்சரித்துள்ளது.காசிபாளையம் நகராட்சி செயல் அலுவலர் பழனிச்சாமி இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: காசிபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அங்கீகாரம் பெறாமல் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மனைப்பிரிவுகளில் மனைகள் வாங்கினாலோ, விற்கப்பட்டாலோ நகராட்சி சட்டவிதிகளின்படி செல்லத்தக்கதல்ல. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் வாங்கும் மனைகளுக்கு நகராட்சியின் மூலம் எந்த விதமான வரைபட அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது. மேலும் அந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் எவ்வித வளர்ச்சி பணிகளும் செய்து கொடுக்கப்பட மாட்டாது, என்று தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 02 June 2010 10:48
 

மெட்ரோ ரயில்நிலையத்தில் ஆண்டுக்கு 5 கோடி லிட்டர் மழைநீர் சேமிப்பு திட்டம்

Print PDF

தினகரன் 02.06.2010

மெட்ரோ ரயில்நிலையத்தில் ஆண்டுக்கு 5 கோடி லிட்டர் மழைநீர் சேமிப்பு திட்டம்

பெங்களூர், ஜூன் 2: மெட்ரோ ரயில்நிலையங்களில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தவும் தீர்மானித்துள்ளோம். 25 கிமீ நீள ரயில்மேம்பாலத்தில் திரட்டப்படும் மழைநீர் சேமிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கார்பன் நூலிழைகளை பெங்களூர் மெட்ரோ ரயில்பெட்டிகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என பெங்களூர் மெட்ரோ ரயில் கழக இயக்குநர் பி.எஸ்.சுதீர்சந்திரா கூறினார்.

பெங்களூரில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு பெங்களூர் மெட்ரோ ரயில் கழக இயக்குநர் பி.எஸ்.சுதீர்சந்திரா பேசியதாவது:

மெட்ரோ திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் ரயில்பெட்டிகள் கார்பன் நூலிழைகளால் செய்யப்படும். கார்பன் நூலிழைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புஏற்படுத்தாதோடு, எடைகுறைவானதாகவும், அதிக கொள்திறன் கொண்டதாகவும் இருக்கும். இது திட்டத்தின் இரண்டாவது பிரிவில் செயல்படுத்தப்படும். மெட்ரோ ரயில்நிலையங்களில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தவும் தீர்மானித்துள்ளோம். 25 கிமீ நீள ரயில்மேம்பாலத்தில் திரட்டப்படும் மழைநீர் சேமிக்கப்படும். ரயில் தண்டவாளம் 10 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கிறோம். எனவே, மழைநீர் சேமிப்பு மூலம் ஆண்டுக்கு 5 கோடிலிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். மெட்ரோ, பஸ் ஆகியவற்றுக்கு பொதுவான டிக்கெட்முறை அறிமுகம் செய்யப்படும்.

இவற்றை பகிர்ந்து கொள்வதற்கான திட்டமும் வகுக்கப்படும். மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு பயணிகளை அழைத்து செல்ல பேட்டரியில் இயங்கும் பஸ்கள் இயக்கப்படும். எல்லா ரயில்நிலையங்களிலும் வட்டபஸ்சேவைகள் அறிமுகம் செய்யப்படும்.

இந்த பஸ்கள் 3&4 கிமீ சுற்றுவட்டத்தில் செயல்படும். இதனால் வீட்டில் இருந்து ரயில்நிலையத்திற்கு செல்ல ஆகும் நேரம் குறையும்.’பெங்களூரின் பொதுபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புவசதிகள் 25 ஆண்டுகள் பின்தங்கியுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்

 

மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்க விருதுகள்: ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Print PDF

தினமலர்    25.05.2010

மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்க விருதுகள்: ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருநெல்வேலி:மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் விருதுகளை பெற வரும் ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.நில நீர் சேமிப்பை ஊக்குவிப்பதற்கு மத்திய நீர் வளத் துறை நில நீர் செறிவூட்டும் விருது மற்றும் தேசிய நீர் வள விருது ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளதுநெல்லை மாவட்டத்தில் மழை நீர் சேகரிபபு மற்றும் செயற்கை முறையில் நில நீரை சிறப்பாக சேகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும் உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு சாரா நிறுவனங்கள், கிராம பஞ்.,கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், விவசாய மேம்பாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.இதுதொடர்பாக தகுதியான தனி நபர்கள்/நிறுவனங்கள்/கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி நிறுவனங்கள் தகுந்த ஆதாரத்துடன் வீடியோ படங்கள், போட்டோக்கள் மற்றும் பவர் பாயின்ட் கம்ப்யூட்டர் பதிவு படங்களுடன் "மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), நெல்லை - 9' என்ற முகவரிக்கு வரும் ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 


Page 70 of 96