Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு 'சீல்'

Print PDF

தினமலர்         14.05.2010

அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு 'சீல்'

சென்னை : தி.நகர், உஸ்மான் சாலையில், வீடு கட்ட அனுமதி பெற்று முறைகேடாக கட்டப்பட்டிருந்த வணிக வளாகத்திற்கு சி.எம்.டி.., அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், வாகனம் நிறுத்தும் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டு வதற்காக கலந்தர் என் பவர், 2008ம் ஆண்டு திட்ட அனுமதி கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் திடம் (சி.எம்.டி..,) விண்ணப்பித்தார்.சி.எம்.டி..,வும் அனுமதி அளித்தது. ஆனால், தரைதளம், மேல் இருதளங்கள், மூன்றாம் தளம் கொண்ட வணிக உபயோகத்திற்கான கட்டடத்தை கட்டி, கலந்தர் மதீனா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடையை நடத்தி வந்தார்.அத்துடன், தற்போதுள்ள கட்டடத்தை முறைப் படுத்தக் கோரி, திட்ட அனுமதிக்கும் சி.எம்.டி.., விடம் விண்ணப்பித்தார். ஆனால், சி.எம்.டி.., அனுமதி மறுத்தது.

இந்த கட்டடமானது வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுவதால், கட்டட உபயோகத்தை நிறுத்தி, அதில் உள்ள பொருட்களை காலி செய்யும்படி சி.எம்.டி.., கட்டட உரிமையாளருக்கு கடிதம் மூலம் அறிவித்தது.இதற்கு பதிலளித்த அவர், 30 நாட்களில் வணிகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதாகவும், தரைதளத்தில் பக்கச்சுவர் களை இடித்து கட்டடத்தை மீண்டும் வாகனம் நிறுத்தும் தளம் மற்றும் இரண்டு தளங்களாக மாற்றுவதாகவும் உறுதியளித்திருந்தார்.ஆனால், அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து வணிக உபயோகம் நடந்து கொண்டிருந்தது.இந்நிலையில், நேற்று காலை சி.எம்.டி.., சீனி யர் பிளானர் பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் குழு வணிக வளாகத்தை பூட்டி சீல் வைத்தது.இக்கட்டட உரிமையாளர் குடியிருப்பு கட்டடத் திற்கு அனுமதி பெற்று அதை வணிக உபயோகத் திற்கு மாற்றியதுடன், கூடுதல் தளம், பக்க இடைவெளியின்மை, கட்டட உபயோகம் மாற்றம், அதிகமான தரைதள பரப்பு மற்றும் வாகனம் நிறுத்துமிடத்தில் விதிமீறல்கள் செய்யப்பட்டுள்ளதாக சி.எம்.டி.., உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.

 

அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம்

Print PDF

தினமலர்     12.05.2010

அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம்

நகராட்சி ஆணையர் மக்களுக்கு எச்சரிக்கைபட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியற்றமனைகளை வாங்க வேண்டாம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மனைப்பிரிவு அமைத்துள்ளனர். நகராட்சி அனுமதி பெற்றே மனைகள் அமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அனுமதி பெறாத மனைகளை பொதுமக்கள் வாங்கும் பட்சத்தில் உரிமையாளருக்கு கட்டிட வரைபட அனுமதி, சாலைவசதி, குடிநீர் வசதி மற்றும் மின்வசதி வழங்க இயலாது. எனவே அனுமதியின்றி மனைப்பிரிவு அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போறலீஸ் உதவியோடு மனைப்பிரிவுகள் அகற்றப்படும். எனவே அனுமதி பெறாத மனைகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம். வாங்கும் பட்சத்தில் ஏற்படும் நஷ்டங்களுக்கு பொதுமக்களே முழு பொறுப்பு.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

புதையும் கட்டடத்தை காப்பாற்ற புதிய 'ஆபரேஷன்' : நவீன தொழில்நுட்பப் பணி விரைவில் துவக்கம்

Print PDF

தினமலர் 03.05.2010

புதையும் கட்டடத்தை காப்பாற்ற புதிய 'ஆபரேஷன்' : நவீன தொழில்நுட்பப் பணி விரைவில் துவக்கம்

கோவை : கோவை அம்மன்குளம் பகுதியில் மேலும் நான்கு கட்டடங்கள் புதைய வாய்ப்புள்ளதாக நிபுணர் குழு அறிக்கை அளித்ததின் அடிப்படையில், அந்த கட்டடங்களின் அடிப்புறத்தை தற்காலிகமாக பலப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இந்த வாரத்தில் 'ஜெட் கிரவுட்டிங்' தொழில்நுட்பம் மூலம் மண்ணின் அடிப்பகுதியை நிரந்தரமாக பலப்படுத்தும் பணி துவங்கவுள்ளது.கோவை அம்மன் குளம் பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் 936 அடுக்குமாடி குடியிருப்புகள் 16 பிளாக்குகளாக கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 3ம் தேதி, இதில் ஒரு கட்டடத்தின் பின்புறம் மண்ணில் புதைந்தது.

கட்டட அஸ்திவாரத்தின் அடியில் உள்ள மண் இளகிய தன்மையுடன் இருப்பதே, புதைய காரணம் என நிபுணர் குழுவினர் கண்டறிந்தனர். இதையடுத்து, இக்கட்டடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இதே கட்டடத்தின் எதிர்புறம் உள்ள மற்றொரு கட்டடமும் 25 செ.மீ., மண்ணில் புதைந்தது. இதனால் இக்கட்டடத்தின் இரு பிளாக்குகளை இணைக்கும், 'எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்' இரண்டாக பிரிந்துள்ளது.

இரண்டாவது கட்டடமும் புதைவதைக் கண்ட தமிழக அரசு, உடனடியாக சென்னை ஐ..டி., பேராசிரியர் காந்தி, சென்னை அண்ணா பல்கலை கட்டடவியல் துறை பேராசிரியர் சாந்தகுமார், கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை இணை பேராசிரியர் அருமை ராஜ் ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. கடந்த வாரம் இக்குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 'கட்டடங்கள் புதைய இளகிய மண்தான் காரணம்; இதே பகுதியில் மேலும் நான்கு கட்டடங்களின் அடியில் இளகிய மண் இருப்பதால் அக்கட்டடங்களும் மண்ணில் புதைய வாய்ப்புள்ளது' என, நிபுணர் குழுவினர் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இக்கட்டடங்களை இடிக்காமல், 'ஜெட் கிரவுட்டிங்' எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தி மண்ணின் அடிப்பகுதியை உறுதிப்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்தனர். கட்டடங்களின் அடியில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கோவையில் கடந்த சில நாட்களாக இடையிடையே மழை பெய்து வருகிறது. இதனால் புதைய வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்ட கட்டடங்களின் அடிப்பகுதி, 'ஹாலோ பிளாக்' கற்களால் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

பொறியாளர்கள் சிலர் கூறுகையில், 'இனி எந்த கட்டடமும் இடிக்கப்பட மாட்டாது. நிபுணர் குழுவினர் அளித்த பரிந்துரையின்படி கட்டடங்கள் பலப்படுத்தப்பட உள்ளன. ஜெட் கிரவுட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்தெந்த மண்ணின் தன்மைக்கு, எந்தெந்த கலவை பயன்படுத்தி பலப்படுத்துவது, இதற்காகும் செலவு ஆகியவற்றை மதிப்பிடும் பணி தற்போது நடந்து வருகிறது. மதிப்பீட்டு அறிக்கை தயாரானவுடன், இந்த வாரத்தில் 'ஜெட் கிரவுட்டிங்' தொழில்நுட்பம் மூலம் மண்ணின் அடிப்பகுதியை பலப்படுத்தும் பணி துவங்கி விடும்' என்றனர்.

'ஜெட் கிரவுட்டிங்' என்றால் என்ன? : 'ஜெட் கிரவுட்டிங்' என்பது கட்டடங்களின் அடிப்பகுதியை உறுதி செய்ய பயன்படுத்தப்படும் ஒரு நவீன தொழில்நுட்பம். இதன்படி, இளகிய மண் (லூஸ் பாக்கெட்) இருப்பதாக சந்தேகிக்கும் கட்டடங்களின் அடிப்பகுதியை பலப்படுத்தலாம். கட்டடத்தின் மேற்பகுதியில் இருந்து 'போர்வெல்' மூலம் துளையிட்டு சிமென்ட் மற்றும் தண்ணீர் அடங்கிய கலவை, அதிவேக அழுத்தத் தில் கட்டடத்தின் அடியில் பீய்ச்சி அடிக்கப்படும்.

கட்டடத்தின் அடியில் உள்ள 'லூஸ் பாக்கெட்டுகளில்' உள்ள இடைவெளிகளில் இந்த சிமென்ட் கலவை சென்று 'செட்டில்' ஆகி, நாளடைவில் பாறை போல் இறுகி விடும். இந்த பாறை அமைப்பு, எவ்வளவு எடையுள்ள கட்டடங்களையும் தாங்கி நிற்கும். இளகிய மண்ணின் தன்மைக்கு ஏற்க, சிமென்ட், தண்ணீருடன் ஒருவித ரசாயனமும் கலக்கப்படும். கட்டடங்களை வீணாக இடிக்கத் தேவையில்லை.

Last Updated on Monday, 03 May 2010 06:03
 


Page 73 of 96