Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

ரூ. 18 கோடி மதிப்பிலான 68 கட்டடங்கள்: 18-ம் தேதி திறப்பு

Print PDF

தினமணி 14.02.2010

ரூ. 18 கோடி மதிப்பிலான 68 கட்டடங்கள்: 18-ம் தேதி திறப்பு

சென்னை,பிப்.13: சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணித் திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 68 கட்டடங்கள் பிப்ரவரி 18}ம் தேதி திறக்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் 27 சத்துணவுக் கூடங்கள், 8 உடற்பயிற்சிக் கூடங்கள், 4 புதிய பூங்காக்கள், 9 மருந்தகங்கள், 5 பள்ளி கட்டடங்கள், 6 பல்நோக்கு கட்டடங்கள், 4 சமையல் கூடங்கள், ஒரு குப்பை மாற்று நிலையம், விளையாட்டுத் திடல், சுகாதார மையம், 2 திறந்தவெளி அரங்கங்கள் மற்றும் தியாகராய நகரில் பனகல் பூங்கா மேம்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் ரூ. 18 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் பிப்ரவரி 18}ம் தேதி திறக்கப்பட உள்ளன. சென்னையில் 4 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைக்கிறார்.

 

கான்கிரீட் வீட்டு வசதி திட்டம் கணக்கெடுப்பு பணி துவக்கம்

Print PDF

தினமலர் 12.02.2010

கான்கிரீட் வீட்டு வசதி திட்டம் கணக்கெடுப்பு பணி துவக்கம்

திருப்பூர் : தமிழக அரசின் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்திற்காக, திருப்பூர் மாவட்ட அளவில் 13 ஊராட்சிகளில், முன்னோட்ட கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது. இலவச கலர் "டிவி', காஸ் இணைப்பு, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டம் என, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வரிசையில், கான்கிரீட் வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், சொந்த பட்டா அல்லது பத்திரம் உள்ள இடத்தில், குடிசையில் வசிப்போருக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக, ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகள் வாரியாக, சொந்த இடத்தில், குடிசையில் வசிப்போர் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்ட அளவில், ஒன்றியத்துக்கு ஒரு ஊராட்சி என்ற அடிப்படையில், 13 ஊராட்சிகளில் வீட்டு வசதி திட்டத்திற்கான முன்னோட்ட பணிகள் துவங்கியுள்ளன. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் வாய்மொழி உத்தரவாக, அனைத்து ஊராட்சிகளிலும் குடிசைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதுதொடர்பாக கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில் நடந்த பயிற்சி வகுப்பில், கணக்கெடுப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, திட்ட அலுவலர் ரேணுகாதேவி விளக்கினார்.

பின்பற்ற வேண்டிய வழிமுறை:

* முற்றிலும் ஓலை மூலமாக வேயப்பட்ட குடிசையாக இருக்க வேண்டும்.

* சொந்தமாக பட்டா பெற்ற இடமாக இருக்க வேண்டும்.

* குடிசையை வாடகைக்கு விட்டிருக்கக்கூடாது.

* பயனாளிகளுக்கு வேறு இடத்தில் சொந்த வீடு இருக்கக்கூடாது.

* ஆட்சேபணை இல்லாத பட்டா நிலமாக இருக்க வேண்டும்.

முன்னோட்ட கணக்கெடுப்பின் போது, பயனாளிகளை கண்டறிவதற்காக, 28 வகையான கேள்விகள் அடங்கிய விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி உதவியாளர் மற்றும் மக்கள் நலப்பணியாளர் அடங்கிய குழுவினர், கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வர். வரும் 16ம் தேதி வரை கணக்கெடுப்பு பணியை முடித்து, ஒன்றிய நிர்வாகத்துக்கு அறிக்கை அளிப்பர். 17ம் தேதி முதல் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் () சரிபார்ப்பு பணியை மேற்கொள்கின்றனர். சரிபார்ப்பு பணியை 20ம் தேதிக்குள் முடித்து, 21ம் தேதி, மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.

முன்னோட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்ட 13 ஊராட்சிகளில் மட்டும் நடந்தாலும், அனைத்து ஊராட்சிகளிலும் குடிசை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வார்டு உறுப்பினர்களின் உதவியுடன், பிற ஊராட்சிகளில் குடிசை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதிகாரிகள் கூறுகையில், "ஒன்றியம் வாரியாக பெறப்படும் கணக்கெடுப்பு அறிக்கையை தொடர்ந்து, அரசு சார்பில், 2010ம் ஆண்டு இறுதியில் துவங்கி, 2016ம் ஆண்டு வரை குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும்,' என்றனர்.

Last Updated on Friday, 12 February 2010 07:47
 

விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் அனுமதியில்லாத காட்டேஜ்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினமலர் 25.01.2010

விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் அனுமதியில்லாத காட்டேஜ்களுக்கு நோட்டீஸ்

கொடைக்கானல் : விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் குறித்து நகரமைப்பு ஆய்வாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அங்கீகாரமில்லாத காட்டேஜ்களுக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

கொடைக்கானலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பெருகும் கட்டடங்களை கட்டுப்படுத்தவும்,1993ம் ஆண்டு மாநில அரசால் "மாஸ்டர்பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது.சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு உத்தரவின் அடிப்படையில்,கடந்த 2004ம் ஆண்டு நகராட்சி கணக்கெடுப்பில் விதிமுறைகளை மீறி 1553 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.மாநில அரசின் உத்தரவுப்படி மீண்டும் கணக்கெடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.விதிமுறை மீறல் குறித்து கமிஷனர் தலைமையில் பிற மாவட்ட நகரமைப்பு ஆய்வாளர்கள் குழு சில வாரங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறுகையில்," அரசு உத்தரவுப்படி,விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ள 1553 கட்டடங்களில் விடுபட்டது குறித்து மீண்டும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் காட்டேஜ்களால் நகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க,காட்டேஜ்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. வணிக ரீதியான வரிக்கு மாறாமல் இருக்கும் 40 காட்டேஜ்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.

Last Updated on Monday, 25 January 2010 06:28
 


Page 78 of 96