Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

காவேரிப்பாக்கம் பள்ளியில் நகராட்சி ஆணையர் ஆய்வு

Print PDF

தினமலர் 07.01.2010

காவேரிப்பாக்கம் பள்ளியில் நகராட்சி ஆணையர் ஆய்வு

திண்டிவனம் : திண்டிவனம் காவேரிப் பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.திண்டிவனம் காவேரிப்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் வீசப்பட்டு கிடந்தார். இந்த பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க வேண்டுமென அப்பகுதி கவுன்சிலர்கள் ஜெயராஜ், அன்பழகன் உட்பட பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நகராட்சி ஆணையர் முருகேசன், இப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். நகராட்சி பொறியாளர் பரமசிவம், இளநிலை பொறியாளர் பவுல் செல் வம் உடன் சென்றனர்.

Last Updated on Thursday, 07 January 2010 06:35
 

கட்டுமான நிறுவனங்களுக்கு அனுமதி தரக் கூடாது

Print PDF

தினகரன் 05.01.2010

கட்டுமான நிறுவனங்களுக்கு அனுமதி தரக் கூடாது

சென்னை : ‘‘விதிமீறும் கட்டுமான நிறுவனங்களுக்கு, கட்டிடம் கட்ட அனுமதி தரக் கூடாது’’ என்று சிஎம்டிஏவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேரை சேர்ந்த வனஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மேற்கு முகப்பேர் கோல்டன் காலனியில் சிஎம்டிஏவிடம் வரைபட அனுமதி பெறாமல் 2 மாடிகளை சேகர் என்பவர் கட்டினார்.
இதற்கு மின் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்பும் பெற்றுள்ளார். இந்த கட்டிடத்தை சுமதி என்பவருக்கு விற்றுள்ளார். இதற்கு வழங்கிய மின் இணைப்பையும் கழிவுநீர் இணைப்பையும் துண்டிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்தனர். சிஎம்டிஏ சார்பில் அரசு வக்கீல் ஐ.பரந்தாமன் ஆஜராகி, ‘‘இதுகுறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அளித்த உத்தரவு:
சிஎம்டிஏவிடம் வரைபட அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியதை நீதிமன்றத்தில் சேகர் ஒப்புக் கொண்டார். அவர் கட்டிட வரைபடத்துக்கு அனுமதி கோரி சிஎம்டிஏவிடம் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இதன் மீது சிஎம்டிஏ உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இத்தகைய செயல்களை கட்டுப்படுத்த அரசு கடும் விதிகளை வகுக்க வேண்டும். சிஎம்டிஏவிடம் அனுமதி பெறாமல் கட்டுமான பணி செய்யும் கட்டுமான நிறுவனங்களை பிளாக் லிஸ்ட்Õ செய்ய வேண்டும். இத்தகைய நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் எந்த அனுமதியும் தரக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Last Updated on Tuesday, 05 January 2010 11:43
 

செம்மொழி மாநாட்டிற்காக கோவையில் குடியிருப்புகள் : சாலைகளை பளிச்சிடச் செய்யவும் ரூ. 118 கோடிகள் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 05.01.2010

செம்மொழி மாநாட்டிற்காக கோவையில் குடியிருப்புகள் : சாலைகளை பளிச்சிடச் செய்யவும் ரூ. 118 கோடிகள் ஒதுக்கீடு

Front page news and headlines today

சென்னை : உலகத் தமிழ் செம்மொழி மாநாடு காரணமாக, கோவை மாநகரில் தொடர்ச்சியாக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்போது, "பம்பர்' பரிசாக, 118 கோடி ரூபாயில் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்புகள், 60 கோடி ரூபாயில் சாலைகள் மேம்பாடு என இரு திட்டங்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, கோவை நகரில் வரும் ஜூன் மாதம் நடக்கிறது. இதையொட்டி, தமிழக அரசு பல்வேறு குழுக்களை அமைத்து, கோவை நகரில் வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்து வருகிறது.மாநாடு காரணமாக, நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்து வருவதை நினைத்து, மாநகர மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இப்போது, "பம்பர்' பரிசாக, 4,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழக அரசு கூறியிருப்பதாவது: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, நகர ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் எனும் திட்டத்தின் கீழ், உக்கடத்தில் 68 கோடி ரூபாய் செலவில், 2,232 அடுக்குமாடி குடியிருப்புகளும், அம்மன்குளம் என்ற இடத்தில் 50 கோடி ரூபாய் செலவில் 1,608 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்படும். மொத்தம் 118 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

மாநாடு நடக்கும் கொடிசியா வளாகம் அமைந்துள்ள, சேலம் - கொச்சி சாலையை இணைக்கும் கோவை ரயில் நிலையம், பஸ் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றுக்கான சாலைகள், மாநாட்டு திடலின் அருகே தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும், சித்ரா - குரும்பாளையம் சாலை, சிங்காநல்லூர் பஸ் நிலையம், கோவை மத்திய பஸ் நிலையம், ராமநாதபுரம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையம் ஆகியவற்றுக்குச் செல்லும் சாலைகள், மேம்படுத்தப்படும். மாநகரின் உட்பகுதி மற்றும் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள 96 கி.மீ., நீளம் உள்ள 72 சாலைகள், 59 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Last Updated on Tuesday, 05 January 2010 07:57
 


Page 80 of 96