Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

உயரமான கட்டடங்களுக்கு அனுமதி: சி.எம்.டி.ஏ. ஆர்வம்

Print PDF

தினமணி 07.11.2009

உயரமான கட்டடங்களுக்கு அனுமதி: சி.எம்.டி.. ஆர்வம்

சென்னை, நவ. 6: உயரமான பல மாடி கட்டடங்களுக்கு அனுமதி அளிப்பதில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி..) ஆர்வமாக உள்ளது என அதன் உறுப்பினர் செயலர் விக்ரம் கபூர் தெரிவித்தார்.

மத்திய திட்டக் குழுவின் ஒரு அங்கமான கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில், உயரமான பலமாடிக் கட்டடங்கள் குறித்த கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது:

இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து விக்ரம் கபூர் பேசியது:

சென்னையில் அதிகரித்துவரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களின் குடியிருப்புத் தேவையும் உயர்ந்து வருகிறது. இதனால், இருக்கும் நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையிலான மக்களை குடியமர்த்த வேண்டும். இதற்கு கட்டடங்களுக்கான உயரக் கட்டுப்பாடு தடையாக இருந்தது.

எனவே, சி.எம்.டி..வின் 2-வது மாஸ்டர் பிளானில் பலமாடி கட்டடங்களுக்கான உயரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும், சாலை பரப்பு விதிமுறைகளுக்கும் வானிலை ஆராய்ச்சி மையத்தின் விதிமுறைகளுக்கும் உட்பட்டு எவ்வளவு அடுக்கு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புறநகரில் இந்த வகை கட்டடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் அனுமதி அளிப்பதில் சி.எம்.டி.. ஆர்வமாக உள்ளது.

இது தொடர்பாக எழும் நடைமுறை சார்ந்த பிரச்னைகள் குறித்த தங்களது பரிந்துரைகளை கட்டுமானத் துறையினர் தெரிவிக்க வேண்டும் என்றார் விக்ரம் கபூர்.

பிரதமரின் முன்னாள் நிதித்துறை ஆலோசகர் ஜி.வி. ராமகிருஷ்ணா, கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தமிழக பிரிவு தலைவர் வி. கணேசன், செயலாளர் எம்.கே. சுந்தரம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

தாம்பரத்தில் விதிமீறிய கட்டடம் சீல் வைப்பு

Print PDF

தினமணி 4.11.2009

தாம்பரத்தில் விதிமீறிய கட்டடம் சீல் வைப்பு

சென்னை, அக். 3: சென்னை தாம்பரத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிகவளாகத்துக்கு சி.எம்.டி.. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும எல்லைக்குள் 2007 ஜூலைக்கு பிறகு கட்டப்பட்ட கட்டடங்களில் விதிமீறல் தொடர்பாக வந்த புகார்களின் மீது சி.எம்.டி.. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட விதிமீறல் கட்டடங்களை நேரில் ஆய்வு செய்து முதல்கட்ட நடவடிக்கையாக அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. அடுத்தக்கட்டமாக இந்த கட்டடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன.

செüகார்பேட்டை, பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பல கட்டடங்களுக்கும், தியாகராய நகரில் பிரபல வணிக வளாகத்திற்கு சி.எம்.டி.. அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தாம்பரம் கடப்பேரி பகுதியில் பவுண்ட் தெருவில் உள்ள தரைதளத்துடன் 3 மாடிகள் வரை கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு சி.எம்.டி.. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

Last Updated on Wednesday, 04 November 2009 06:05
 

பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

Print PDF

தினமணி 3.11.2009

பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

கோவை, நவ. 2: கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை செயல்விளக்கப் பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம், கோவை மாநகராட்சி ஆகியன இணைந்து மாநகராட்சியில் உள்ள 85 பள்ளிகளிலும் இப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. "நகர்புற நிலநடுக்க பாதிப்பு குறைப்பு' என்னும் தலைப்பின் கீழ் இப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்பை மேயர் ஆர்.வெங்கடாசலம் துவக்கிவைத்தார்.

மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார்.துணை மேயர் நா.கார்த்திக், கல்விக்குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம்,கல்விக்குழு உறுப்பினர்கள் மீனா லோகநாதன், சோபனா செல்வன், வி.கே.எஸ்.கே.செந்தில்குமார், கார்த்திக் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரா.ஷாரன் சங்கீதா, பயிற்சி நிலையத் தலைவர் எம்.பிராங்கிளின் ஆகியோர் பயிற்சி அளித்தனர்

Last Updated on Tuesday, 03 November 2009 07:13
 


Page 88 of 96