Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

கோவையில் 100 கட்டடங்களில் விதிமீறல்; விரைவில் அதிரடி

Print PDF

தினமலர்       16.12.2010

கோவையில் 100 கட்டடங்களில் விதிமீறல்; விரைவில் அதிரடி

கோவை :  கோவையில் பொதுமக்கள் பயன் பாட்டுக்குரிய கட்டடங்களில், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் உத்தரவிட்டுள்ளார்.

கோவை உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில், பொது மக்கள் மற்றும் விண்ணப்பதாரர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கோவை நகருக்கான புதிய "மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணி முடிந்து, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவில் வெளியிடும். முதலில் வரைவு வெளியிடப்பட்டு, 60 நாட்களில் அது குறித்த கருத்துக்களைத் தெரிவிக்க மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். பின், தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, இறுதியான "மாஸ்டர் பிளான்' வெளியிடப்படும்.

கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், மாஸ்டர் பிளானில் மாற்றம் செய்ய இயலாது. ஆனால், உள்ளூர் திட்டக்குழுமப் பகுதி விரிவாக்கம் செய்யப்படும். தற்போது, ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 601 ஹெக்டேர் பரப்புள்ள உள்ளூர் திட்டக் குழுமப் பகுதி, ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 386 ஹெக்டேர் பரப்புக்கு விரிவாக்கப்படும். புதிய திட்டச்சாலைகளுக்கான இடங்களை வாங்க, நகர ஊரமைப்புத்துறை நிதி வழங்கத் தயாராயுள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சியிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. திட்டச்சாலைகளின்  அகலத்தைக் குறைப்பதில், நகர ஊரமைப்புத்துறைக்கு உடன்பாடு இல்லை. பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும்பட்சத்தில், எந்தத் திட்டச்சாலையின் அகலமும் குறைக்கப்படாது.  கோவை நகரில், மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்களில் விதிமீறல்கள் இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின்படி, 100க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்களில் இத்தகைய விதிமீறல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. "பார்க்கிங்' இடங்களை வணிக பயன்பாட்டுக்குப் பயன் படுத்துவதாகவும் தகவல் வருகிறது.

விதிமீறல் கட்டடங்களில், குறிப்பிட்ட காலத்துக்குள் ஆய்வு செய்தால் மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில்லை; எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம். கோவை நகரில் இதுபோன்ற விதிமீறல் கட்டடங்களை அறிய, மண்டல துணை இயக்குனர் தலைமையில் ஓர் ஆய்வுக்குழு அமைக்கப்படும். இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி தரப்பட்டபோது இருந்த வரைபடத்தை ஒப்பிட்டு, விதி மீறி கட்டப்பட்ட அல்லது பயன்பாட்டிலுள்ள கட்டடங்களை அறிய உத்தரவிடப்படும். மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்களில் தீத்தடுப்பு வசதி, "பார்க்கிங்' வசதி இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

கல்வி நிறுவன கட்டடங்கள், அறக்கட்டளையால் கட்டும் கட்டடமாக இருந்தாலும் முறையான அனுமதி பெற வேண்டும்; கட்டடத்தின் அளவுக்கேற்ப கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டணமும் செலுத்த வேண்டும். இதில் எந்த விதி விலக்கும் கிடையாது. அனுமதியில்லாமல் கட்டப்படும் கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, கல்வித்துறை சார்பில் அனுமதியும் வழங்கப்படுவதில்லை. திட்டக்குழுமத்துக்கு வரும் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் அனுமதி அல்லது உரிய பதில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பை விட, இப்போது தாமதம் குறைக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் அருகே, 5 ஸ்டார் ஓட்டலுக்கு விதிகளை மீறி எந்த அனுமதியும் தரப்படவில்லை; விமான நிலைய ஆணையத்தின் ஒப்புதலின்றி, அந்த சுற்று வட்டாரத்தில் பல அடுக்கு மாடி கட்ட எங்களது துறை அனுமதிப்பதில்லை.

இவ்வாறு நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் பங்கஜ்குமார்பன்சால் தெரிவித்தார். பேட்டியின்போது, கோவை உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் மூக்கையா, நகர ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் சங்கரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

நோட்டீஸ் அனுப்புவோம் :  கோவை உக்கடம் மற்றும் அம்மன் குளம் பகுதிகளில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்ட நிதியில், நகர்ப்புற மக்களுக்கான அடிப்படை வசதி வழங்கும் (பி.எஸ்.யு.பி.,) திட்டத்தில் 3,840 வீடுகளை குடிசை மாற்று வாரியம் கட்டியுள்ளது. இந்த வீடுகளுக்கு நகர ஊரமைப்புத்துறை அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்று பன்சாலைக் கேட்டபோது, அருகிலிருந்த உறுப்பினர் செயலர் இயக்குனர் மூக்கையா, "இல்லை' என்றார்.

பன்சால் கூறுகையில், ""தாமதமானாலும், அரசு கட்டடங்களுக்கு அனுமதி பெறப்பட்டு விடும். பெரும்பாலான அரசு கட்டடங்கள், விதிகளை மீறி கட்டப்படுவதில்லை. ஆனாலும், அனுமதியில்லாமல் அரசு கட்டடம் கட்டப்பட்டால், அவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்புவோம்,'' என்றார்.

 

விதிமுறை மீறி கட்டப்பட்ட அடுக்கு மாடி கட்டிடங்கள் மீது அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன்        16.12.2010

விதிமுறை மீறி கட்டப்பட்ட அடுக்கு மாடி கட்டிடங்கள் மீது அதிரடி நடவடிக்கை

கோவை, டிச.16: கோவையில் விதிமுறை கட்டப்பட்ட அடுக்குமாடி வணிக வளாகங்களில் அதிரடி ஆய்வு நடத்த நகர ஊரமைப்புத் துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் நேற்று உத்தரவிட்டார்.


நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் நேற்று, கோவையிலுள்ள உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறை கேட்டார். பின்னர், அவர் நிருபர்களி டம் கூறியதாவது:

கோவையின் வரைவு மாஸ்டர் பிளான் ஏற்கனவே அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது எந்தநேரத்திலும் வெளியா கும். வெளியான 60 நாளில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, திருத்தம் செய்து, இறுதி மாஸ்டர் பிளான் வெளியிடப்படும்.

தற்போது கோவையில் உள்ளூர் திட்டக்குழும பரப்பளவு 1 லட்சத்து 27 ஆயிர த்து 601 ஹெக்டேராக உள்ளது. கோவை மாநகராட்சியில் அருகிலுள்ள ஊராட்சிகள் மற்றும் குனியமுத்தூர், குறிச்சி நகராட்சிகள் இணைக் கப்பட்டுள்ளன.

இதனால் உள்ளூர் திட்டக்குழும பரப்பளவு 1 லட் சத்து 90 ஆயிரத்து 386 ஹெக் டேராக அதிகரிக்கும். அவை புதிய பிளான் வெளியிடும் போது சேர்க்கப்படவுள்ளது.

மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகள் செய்ய வேண்டிய திட்டங் கள் குறித்து ஆய்வு செய்ய மண்டல நகரமைப்புத்துறை துணை இயக்குனர் தலை மையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்.

கோவை மாநகரில் பல அடுக்குமாடி வணிக வளாகங்கள் விதிகளை மீறி கட்டியுள்ளனர். பல கட்டடங்க ளில் பார்க்கிங் வசதி இல்லை.

அவற்றை மண்டல இயக்குனர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட வரை படம் மூலம் ஆய்வு செய்து அதன் பட்டியல் தயாரிக்கப்படும். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி நிறுவனங்கள் அறக்கட்டளை பெயரில் கல்வி நிறுவனங்களைத் துவக்கி சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுகின்றனர்.

அத்தகைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெற வேண் டும்.
தமிழகத்தில் 9 உள்ளூர் திட்டக்குழும அலுவலகங்களுக்கு பிரத்யேக இணைய தள வசதி செய்து தரப்படவுள்ளது.

ஆய்வு நடத்த அதிகாரி உத்தரவு

கோவை உள்ளுர் திட்டகுழுமம் அலுவலகத்தில் நகர் ஊரமைப்பு இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் நேற்று உள்ளுர் திட்ட குழுமம் தொடர்பாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.

 

விதி மீறல்: 435 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினமணி               15.12.2010

விதி மீறல்: 435 கட்டடங்களுக்கு நோட்டீஸ்

திருப்பூர், டிச.14: உள்ளூர் திட்டக் குழுமம் வகுத்துள்ள விதிமுறைகளை மீறி திருப்பூரில் கட்டப்பட்டுள்ள 435 கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட உள்ளது. 30 நாட்களுக்குள் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடங்களை அடைத்து சீல் வைக்கவும் உள்ளூர் திட்டக் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருப்பூர் உள்ளூர் திட்டக் குழுமத்தில் திருப்பூர் மாநகராட்சி, 15வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள், செட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, தொட்டிப்பாளையம், மங்கலம், ஆண்டிபாளையம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, இடுவாய், அவிநாசி ஒன்றியத்தில் புதுப்பாளையம், கணியாம்பூண்டி, ஊத்துக்குளி ஒன்றியத்தில் சர்க்கார் பெரியபாளையம், அக்ரஹார பெரியபாளையம் ஆகிய ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்நிர்வாகத்தின் மொத்த பரப்பளவு 219.99 சதுர கி.மீ.

தற்போது, திருப்பூர் உள்ளூர் திட்டக் குழும எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்படும் பெரும்பாலான கட்டடங்கள் முறையான அனுமதி பெறாமலும், பெறப்பட்ட அனுமதிக்கு உட்பட்டும் கட்டப்படுவதில்லை என்ற புகார்கள் அதிகரித்து வருகின்றன.

அதனடிப்படையில், உள்ளூர் திட்டக் குழுமம் வகுத்துள்ள விதிகளை மீறியும், முறையான அனுமதியில்லாமலும் கடந்த 5 ஆண்டுகளில் 435 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. அக்கட்டடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் புதன்கிழமை முதல் வழங்கப்பட உள்ளதாக நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் திருப்பூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விதிமுறை மீறியும், முறையான அனுமதி பெறமாலும் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள் உள்ளூர் திட்டக் குழுமத்தின் எச்சரிக்கை நோட்டீஸ் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் முறையான அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். இல்லையேல், அக்கட்டடங்களை அடைத்து சீல் வைக்கப்படும்.

தவிர, உள்ளூர் திட்டக் குழும அனுமதி கோரி விண்ணப்பம் அளித்துள்ள கட்டடங்களை ஆய்வு செய்து அதில் முறையான விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். விதிமுறை மீறப்பட்ட கட்டடங்களுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும்.

புதியதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழுமத்திலிருந்து பெறப்படும் அனுமதியைக் கொண்டு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் பெறப்படுகிறது. பிறகு, உள்ளூர் திட்டக் குழும அனுமதியை மீறி கூடுதலான உயரம் கட்டடங்கள் கட்டுவதால் அவ்வசதிகள் துவக்கத்திலேயே வழங்கப்படுவதை தடுக்க முடிவதில்லை.

அங்கீகாரிக்கப்படாத வீட்டுமனைகள் விற்பனை திருப்பூர் சுற்று வட்டாரத்தில் அதிகரித்து வருகின்றன.

வீட்டுமனைகள் வாங்குவோர் அந்நிலம் உரிய அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்த பிறகே வாங்க வேண்டும்.

அதற்கான விதிமுறைகள் குறித்து நகர் ஊரமைப்புத் துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தவிர, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் முறையான அங்கீகாரம் பெறாமல் வீட்டுமனைகளை விற்கக் கூடாது என்றார்.

 


Page 28 of 96