Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

விதிமுறைகளை மீறிய கட்டடங்களுக்கு நோட்டீஸ் ஊரமைப்பு இயக்குநர் உத்தரவு

Print PDF

தினகரன்            24.11.2010

விதிமுறைகளை மீறிய கட்டடங்களுக்கு நோட்டீஸ் ஊரமைப்பு இயக்குநர் உத்தரவு

திருச்சி, நவ. 24: விதிமுறைகளை மீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸை ஒரு வாரத்துக்குள் அனுப்ப நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் உத்தரவிட்டுள்ளார். விதிமுறை மீறலை ஒரு மாதத்துக்குள் சரிசெய்யாவிட்டால் சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நகர் ஊரமைப்புத்துறை தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. ஊரமைப்புத்துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு மற்றும் உள்ளூர் திட்டக்குழுமம் தொடர்பாக தங்களின் குறைகளை பலர் நேற்று தெரிவித்தனர்.

திருச்சி எழில்நகர் குடியிருப்போர் வளர்ச்சி மன்றத்தினர் இயக்குனர¤டம் கூறுகையில், திருவெறும்பூர் தாலுக்கா கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் எழில்நகர் உள்ளது. மக்கள் பயன்பாட்டுக்காக அரசால் ஒதுக் கப்பட்ட பொது இடங்களை சிலர் விற்கின்றனர். மனை போட்டு விற்க கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சித் தலைவர் அனுமதி தந்துள்ளதாக தெரிகிறது. அதை ரத்து செய்ய வேண்டும். பொது இடம் மக்கள் பயன்பாட்டுக்கு பயன்பட வேண்டும் என்று தெரிவ¤த்தனர். இதுதொடர்பாக ஏராளமானோர் மனு தந்தனர். இதுதொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு இணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

அதேபோல் பூனாம்பாளையத்தில் மனை வரைப்பட அனுமதி பெறாமல் மனை விற்பனை செய்யப்படுவதாக புகார் தரப்பட்டதையும் விசாரிக¢குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத் தினார். அதன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: லே&அவுட்டில் குறிப்பிடப்பட்ட பொது இடத்தை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், பொது இடத்தை அப்பகுதி உள்ளாட்சி அமைப்பின் பெயரில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் லே&அவுட்டுக்கு அனுமதி தருகிறோம். பொது இடத்தை விற்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம். நகர் ஊரமைப்புத்துறை சட்டப்பிரிவு 56, 57ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

திருச்சியில் வணிகக் கட்டடங்கள் கட்ட வரைபட அனுமதி வழங்கும்போது வாகனங்கள் நிறுத்தும் இடம் குறிப்பிட்ட இடத்தில் கடைகள் தற்போது நடப்பதாக தெரிகிறது. அதேபோல் அனுமதி பெற்றதை விட கூடுதலாக தளங்கள் கட்டப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறியுள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப் பப்படும். ஒருவாரத்துக்குள் இந்த நோட்டீஸை திருச்சி நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அனுப்புவார். நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஒரு மாதத்துக்குள் விதிமீறலை சரிசெய்யவேண்டும். இல்லாவிட்டால் அந்நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

கூடுதல் அதிகாரம்:

உள்ளாட்சி அமைப்புகள் 4 ஆயிரம் சதுர அடி வரை வீடுகளுக்கும், 2000 .அடி வரை வணிக நிறுவனங்கள் கட்டடம் கட்ட அனுமதி தரலாம். நகர¢ ஊரமைப்புதுறையானது 15 ஆயிரம் ச.அடி வரை வீடுகளுக்கும், 12 ஆயிரம் சதுர அடி வரை வணிக நிறுவனங்கள் கட்டவும், 5 ஏக்கர் வரை லே&அவுட்டுக்கும் அனுமதி தர முடியும். இவற்றுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமிட்டு ஆராய்ந்து வருகிறோம்.

விரைவாக தருவோம்:

நகர் ஊரமைப்பு துறையில் அப்ரூவலை தாமதம் இல்லாமல் விரைந்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது விதிமுறை மீறலையும் கண்காணித்து நடவடிக்கை எடுக¢க உள்ளோம் என்று தெரிவித்தார்.

 

கட்டிட அனுமதி பெற எளிய வழிமுறை இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினகரன்           24.11.2010

கட்டிட அனுமதி பெற எளிய வழிமுறை இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் மாநகராட்சி கமிஷனர் தகவல்

கோவை, நவ.24: மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா நேற்று வெளியிட்ட அறிக்கை:

கோவை மாநகராட்சியில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி பெறும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது. கோப்புகளின் நிலையை அறியவும், மாநகராட்சிக்கு கட்டணமாக செலுத்த வேண்டிய தொகை பற்றி தெரிந்து கொள்ளவும், கட்டிட அனுமதி பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள் பொதுமக்களை அணுகி மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுப்பதை தவிர்க்கவும் பின்பற்றப்படும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.

வரைபடத்துடன் ப்ளு பிரிண்ட் ஐந்து நகல்கள், பத்திர நகல், 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் உறுதிமொழிப் படிவம், அந்த இடத்தின் உடைய நான்கு மூளைகளும் தெரியுமாறு மனை உரிமையாளர், உடன் நின்று எடுத்த படம், மனை உரிமையாளரின் பாஸ் போர்ட் படம் இரண்டு, விண்ணப்பக் கட்டணம், கட்டிட உரிமக் கட்டணம், கட்டிட இடிபாடு அகற்றும் கட்டணம், தொழிலாளர் நலநிதி கட்டணம், உள்ளூர் திட்டக் குழும அபிவிருத்திக் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம் மற்றும் தபால் செலவுக் கட்டணம் ரூ.100 ஆகிய கட்டணங்களை மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு எதிர்புறம் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்திய ரசீது, விண்ணப்பதாரால் நேரில் வர இயலாத பட்சத்தில் அவரால் சான்றளிக்கப்பட்ட கடிதம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை விபரங்கள் தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வரைபடம் சரிபார்த்த உடன் அனுப்பி வைக்கப்படும். நகரமைப்பு பிரிவில் விண்ணப்பம் பெறப்பட்டவுடன் உதவி நகரமைப்பு அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக கட்டிட அனுமதி உத்தரவு வழங்கப்படும். கட்டிட உத்தரவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் உரிமைதாரரின் முகவரிக்கு பதிவுத் தபாலில் நேரடியாக அனுப்பப்படுகிறது.

2011 ஜனவரி 1 முதல் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவைப்படுகின்ற வரைபடத்தை தயார் செய்து கொடுக்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் தனியாக பிளான் பிரிபரேசன் செல் தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் நேரடியாக மாநகராட்சி பிரதான அலுவலகத்திலேயே கட்டிட வரைபடம் தங்களின் தேவைக்கேற்ப தயார் செய்யவும், விண்ணப்பங்கள் பூர்த்த¤ செய்து அனுமதி பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற¢பாடுகளும் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அன்சுல் மிஸ்ரா கூறி உள்ளார்.

 

5 மாடி கட்டிடம் இடிந்த விவகாரம் மத்திய கட்டிட ஆய்வு அமைப்பு மாநகராட்சியிடம் விரைவில் அறிக்கை

Print PDF

தினகரன்                  23.11.2010

5 மாடி கட்டிடம் இடிந்த விவகாரம் மத்திய கட்டிட ஆய்வு அமைப்பு மாநகராட்சியிடம் விரைவில் அறிக்கை

புதுடெல்லி, நவ. 23: கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்த விவகாரத்தில், அந்த இடத்தை ஆய்வு செய்த மத்திய கட்டிட ஆய்வு அமைப்பு அதிகாரிகள் விரைவில் தங்களது அறிக்கையை மாநகராட்சியிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.

கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் பலியாயினர். மேலும் 85க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உரி மையாளர் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் மாநகராட்சியின் கோரிக்கைப்படி மத்திய கட்டிட ஆய்வு அமைப்பின் அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். இதுதவிர கிழக்கு டெல்லி பகுதியில் பலவீனமாக உள்ள கட்டிடங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர்.

ரூர்கியில் இருக்கும் இந்த அமைப்பின் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை டெல்லி வந்தனர். அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கட்டிடம் இடிந்த இடம் மற்றும் பிற பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இடிந்த கட்டிடத்துக்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களையும் அவர்கள் ஆய்வுக்காக எடுத்து கொண்டனர்.

கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் பாதுகாப்பு இல்லாதவை என்று மாநகராட்சியில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்களையும் இக்குழுவினர் ஆராய்ந்தனர்.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பல்வேறு தொழில்நுட்ப காரணிகளின் அடிப்படையில் மத்திய கட்டிட ஆய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.

தங்களுடைய முடிவை தெரிவிக்க மேலும் சில நாட்கள் தங்களுக்கு அவகாசம் தேவை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஓரிரு நாட்கள் தங்கள் ஆய்வு முடிவு குறித்து அவர்கள் விவாதித்து அறிக்கை தயாரிக்க உள்ளனர். அதை தொடர்ந்து அவர்கள் மாநகராட்சியிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி கூறினார்.

 


Page 33 of 96