Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சியிடம் ஒப்படைக்க கோரி அருமனையில் கடையடைப்பு

Print PDF

தினமணி      18.05.2010

பேரூராட்சியிடம் ஒப்படைக்க கோரி அருமனையில் கடையடைப்பு

குலசேகரம், மே 18: திற்பரப்பு அருவி அருகே பேரூராட்சி எல்கைக்குள்பட்ட பகுதியை அருமனை பேரூராட்சியிடமே ஒப்படைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது.

திற்பரப்பு அருவி அருகே அருமனை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கடையல் பேரூராட்சி சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இப் பகுதியை பேரூராட்சியிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அருமனை பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில் இக் கோரிக்கையை வலியுறுத்தி அருமனை பேரூராட்சித் தலைவர் சி.பி. சுஜி தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதம் அருமனையில் திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இதற்கு ஆதரவாக அருமனை பகுதி வணிகர்கள் கடையடைப்பு நடத்தினர்.

பத்மநாபபுரம் ஆர்டிஓ முருகவேல், விளவங்கோடு வட்டாட்சியர் பொன்னுசாமி ஆகியோர் பேரூராட்சித் தலைவர் சுஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் மூடப்பட்டிருந்த கடைகள் பிற்பகலில் திறக்கப்பட்டன.