Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் கடைகள் கோரிய 250 போலி விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Print PDF

தினகரன்    21.05.2010

மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் கடைகள் கோரிய 250 போலி விண்ணப்பங்கள் நிராகரிப்பு

மதுரை, மே 21: மதுரை மாட்டுத்தாவணியில் புதிய சென்ட்ரல் மார்க்கெட் கடை ஒதுக்கீட்டில் முறைகேடு தடுக்க குலுக்கல் மற்றும் ஏல முறை பின்பற்றப்படுகிறது. தற்போது சென்ட்ரலில் கடை வைத்திருப்பதாக கூறி புதிய மார்க்கெட்டில் கடை கோரிய 250 போலி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகிலுள்ள சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணிக்கு இடம் மாறுகிறது. இங்கு 12 ஏக்கர் பரப்பளவில் ரூ.12கோடி மதிப்பில் புதிய மார்க்கெட் வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதான வாயில் மாட்டுத்தாவணி மெயின் ரோட்டில் இருந்து வண்டியூர் கண்மாய் பூங்கா சாலையில் இரு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. லாரி, வேன், டிரை சைக்கிள் போன்ற வாகனங்கள் இங்குள்ள ஒரு வாயிலில் நுழைந்து மற்றொரு வாயிலில் வெளியேற வேண்டும். விறகு மண்டி லாரிகளுக்கும் இது தான் வழியாகும். டூவீலர் மாட்டுத்தாவணி ரோட்டில் கே.கே.நகர் வழியாக செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 12ஏக்கரில் 4ஏக்கரில் 524 நிரந்தர கடைகளும், 2 ஏக்கரில் 1000 தரைக்கடைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால், 2 இடங்களில் நவீன கழிப்பிடம், 4 இடங்களில் குடிநீர் வசதி, 3 உயர் கோபுர மின்விளக்கு என வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது உள்ள மார்க்கெட்டில் மாநகராட்சி லைசென்சுடன் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு புதிய மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கப்படுகின்றன. தரையில் கடை வைத்திருப்பதாக கூறி 1,246 பேர் புதிய மார்க்கெட்டில் தரைக்கடை ஒதுக்கும்படி கோரினர். இதனை அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்ததில் 250 பேர் போலியாக விண்ணப்பித்தது தெரியவந்தது. அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மற்றவர்களுக்கு சில நாட்களில் நோட்டீஸ் அளித்து டெபாசிட் வசூலிக்கப்படுகிறது.

முறைகேடு தவிர்க்க குலுக்கல் முறை கடைபிடிக்கப்படுகிறது. வாகன நிறுத்துமிடம், கேண்டீன் ஆகியவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 5ம் தேதி காலை புதிய மார்க்கெட்டை மத்திய அமைச்சர் மு..அழகிரி திறந்து வைக்கிறார்.