Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குன்னூர் நகரில் நகராட்சி கடைக்காரர்கள் புதுப்பிக்க வாய்ப்பு

Print PDF

தினகரன்   27.05.2010

குன்னூர் நகரில் நகராட்சி கடைக்காரர்கள் புதுப்பிக்க வாய்ப்பு

குன்னூர், மே 27: குன்னூர் மார்க்கெட் பகுதியில் 900க் கும் மேல் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. பல ஆண்டுகளாக இங்குள்ள கடை உரிமைதாரர்கள் லைசன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை. தற்போது நிரந்தரமாக 250 கடைகள் மட்டுமே உரிமைதாரர்கள் வசம் உள்ளது. மீதமுள்ள வை அவர்களின் வாரிசுதாரர்கள், பினாமிகள் பெய ரில் மட்டுமே செயல்படுகிறது.

கடை உரிமைதாரர்கள் மட்டுமின்றி அவர்களது வாரிசுகள் மற்றும் குத்தகைக்கு எடுத்து கடை நடத்துபவர்களுக்கு உரிமத்தை புதுப்பித்து கொடுக்க வேண்டும் என்று குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ரகீம் உள்ளிட்டோர் தமிழக அரசை வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள் ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பேரில் தற்போது இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன்படி நகராட்சியில் கடைகள் நடத்தி வரும் அசல், வாரிசு மற்றும் அனு போக தாரர்களுக்கு உரிமத் தை புதுப்பித்து பெயர் மாற்றம் செய்து கொள்ள அறிவிக்கப்பட்டது. கடந்த 1.7.2007 வரை யிலான முதல் மூன்றாண்டு காலத்திற்கு தினசரி வாட கையில் கடைக்கு 15 சதவீத உயர்வுடன் உரிமம் புதுப்பிக்கப்பட்டு அசல் உரிமதாரர்களாக பெயர் மாற்றம் செய்யப்படும்.

இந்த கால கட்டத்தில் 3 ஆண்டு கால நிறைவு பெறு வதை தொடர்ந்து ஏற்கன வே பெயர் மாற்றம் செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு வரும் 9 ஆண்டுகள் வரை நகராட்சியால் குத்தகைக்கு விட அனுமதிக்கப்பட்டுள் ளது. ஆனால் மூன்று ஆண் டுக்கு ஒரு முறை குத்தகை தொகையில் 15 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின்படி உயர்த்தப்பட உள்ளது.

இதில் நூறு சதுர அடிக் குள் உள்ள கடை வியாபாரிகள் ரூ.500ம், 100 முதல் 500 சதுர அடி உள்ளவர் கள் ஆயிரம், 500 முதல் 1000 சதுர அடி உள்ளவர்கள் ரூ. 1500, ஆயிரம் சதுர அடிக்கு மேல் ரூ.2000 வரை கட்டணம் செலுத்த வேண் டும்.

இது வரும் 1.7.2010 முதல் அமல்படுத்தப்படும். எனவே இதற்கான புதுப்பிப்பு கட்டணங்களை வியாபாரிகள் உடனடியாக செலுத்த வேண்டும். நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 135 ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதில் அரசு சார்பில் 12 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வீடு மட்டும் தீ விபத்து ஏற்பட்டு எரிந்தது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலை, வருவாய் துறை, நகராட்சியால் அகற்றப்பட்டு இருப்பதால் நகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏதும் இல்லை. எனவே, ஆக்கிரமிப்பு கட்டண வசூலிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.