Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சீல் வைத்த உணவு விடுதியை மீண்டும் நடத்த நகராட்சி, சுகாதாரத்துறை உரிமம் சான்று அவசியம் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

Print PDF

தினகரன் 01.06.2010

சீல் வைத்த உணவு விடுதியை மீண்டும் நடத்த நகராட்சி, சுகாதாரத்துறை உரிமம் சான்று அவசியம் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

அரியலூர், ஜூன் 1: அரியலூர் நகரில் சீல் வைக்கப்பட்ட 11 உணவு விடுதியை திறக்க நகராட்சி, சுகாதாரத்துறை அலுவலக உரிமம் சான்று அவசியம் என்று உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச் சரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் நகரில் உள்ள சில உணவு விடுதிகளில் தர மற்ற வகையில் உணவு தயாரிப்பதாக கலெக்டர் ஆபிரகாமுக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து கடந்த 25ம் தேதி கலெக்டர் ஆபி ரகாம் உத்தரவின் பேரில் அதிகாரிகள், அரியலூர் நகரில் 25 உணவு விடுதிகளை சோதனையிட்டனர்.

சுகாதாரமற்ற முறையில், பாதுகாப்பு இல்லாமல் உணவு வகைகளை தயாரித்தது, சமையலறை, உணவு உண்ணும் இடங்களை அசுத்தமாக வைத்திருந்தது, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட 11 உணவு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு 22 விதிமுறை அடங்கிய எச்சரிக்கை கடித் வழங்கப்பட்டு கையொப்பம் பெறப்பட்டது. இதன் பின் னர் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறந்து விடப்பட்டன. அரசு விதிகளின் படி உணவு விடுதிகளை அமைத்த பின்னர் நகராட்சி, சுகாதாரத்துறைக்கு மனு செய்ய வேண்டும்.

அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று உரிமம் வழங்கிய பின்னரே உணவு விடுதிகளை நடத்தவேண்டுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அரியலூரில் உள்ள உணவு விடுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் நகரில் பெரும்பாலான உணவுவிடுதிகளில் சுண்ணாம்பு அடிப்பது, தனி சமையலறை அமைப் பது, நல்ல குடிநீர் வழங்குவதற்கான புனரமைப்பு பணி களை உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்.