Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

3ம் நிலை நகராட்சிகளில் இருந்து பேரூராட்சி பணிக்கு செல்ல 206 ஊழியர்களுக்கு அனுமதி

Print PDF

தினகரன் 01.06.2010

3ம் நிலை நகராட்சிகளில் இருந்து பேரூராட்சி பணிக்கு செல்ல 206 ஊழியர்களுக்கு அனுமதி

சிவகங்கை, ஜூன் 1: மூன்றாம் நிலை நகராட்சி அலுவலகங்களில் இருந்து பேரூராட்சி அலுவலகங்களுக்கு பணிக்கு செல்ல 206 பணியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படக்கூடிய 49 மூன்றாம் நிலை நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் (மூன்றாம்நிலை நகராட்சிகள் அலகு) 217 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் செயல் அலுவலர்கள்&30, தலைமை எழுத்தர் அல்லது உதவியாளர்&19, இளநிலை உதவியாளர்&84, வரித்தண்டலர்&54, சுகாதார ஆய்வா ளர்&13, சுருக்கெழுத்து தட்டச்சர்&1, தட்டச்சர்&2, பதிவறை எழுத்தர்&1, அலுவலக உதவியாளர்&1, இளநிலை பொறியாளர்&1 என 206 பணியாளர்கள் பேரூராட்சி அலுவலக பணிகளுக்கு செல்ல அரசிடம் விருப்பம் தெரிவித்திருந்தனர். இவர்களில் 11 பணியாளர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

விருப்பம் தெரிவித்த 206 பணியாளர்களையும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அனைத்து பணியாளர்களையும் ஒரே நேரத்தில் பேரூராட்சி அலுவலகங்களுக்கு செல்ல அனுமதித்தால் மூன்றாம் நிலை நகராட்சி அலுவலகங்களில் பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்படும். நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் பேரூராட்சி நிர்வாக இயக்குநர் கலந்து ஆலோசித்து கீழ்க்கண்ட காலத்திற்குள் பணியாளர்களை இடமாற்றம் செய்யலாம்.

செயல் அலுவலர்களை ஒரு வருடத்திற்குள்ளும், தலைமை எழுத்தர் அல்லது உதவியாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை பொறியாளர்களை 4 மாதத்திற்குள் பேரூராட்சி அலுவலங்களுக்கு மாற்றலாம். இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் மற்றும் தட்டச்சர்களை 8 மாதத்திற்குள்ளும், சுகாதார ஆய்வாளரை 2 மாதத்திற்குள்ளும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு மாற்றலாம். சுருக்கெழுத்து தட்டசருக்கு காலக்கெடு இல்லை. பணியாளர்களை மாற்றுவதால் மூன்றாம்நிலை நகராட்சிகளில் ஏற்படும் பணியிடங்களை படிப்படியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால்த்துறை செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டுள்ளார்.