Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 03.06.2010

மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

வத்திராயிருப்பு, ஜூன் 3: மின் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடினால் நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என வ.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சாம்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: புதுப்பட்டி பேரூராட்சியில் 3 ஆயிரத்து 68 வீடுகள் உள்ளன. இதில் 725 வீடுகளுக்கு பேரூராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது போதிய மழை இல்லாததால் புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இப்பகுதியில் சிலர் மின் மோட்டார் மூலம் குடிநீரை திருடுவதாக புகார்கள் வந்துள்ளன. மோட்டார் பொருத்தி குழாயில் இருந்து குடிநீரை உறிஞ்சினால் அருகில் உள்ள குழாய்களில் தண்ணீர் சரியாக வராது. குடிநீர் குழாய் இணைப்பில் மின் மோட்டார் பொருத்துவது சட்டப்படி குற்றம். எனவே இந்த அறிவிப்பு கிடைத்த 24 மணி நேரத்தில் குழாய்களில் மின் மோட்டார் பொருத்தியுள்ளவர்கள் தாங்களாகவே அவற்றை அகற்றி விட வேண்டும். தவறினால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் நிரந்தரமாக குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.