Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வெளியில் இருக்கும் தடுப்பு குறித்து தாஜ், ஒபராய் ஓட்டலுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினகரன் 09.06.2010

வெளியில் இருக்கும் தடுப்பு குறித்து தாஜ், ஒபராய் ஓட்டலுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்

மும்பை, ஜூன் 9: தீவிர வாதிகளின் தாக்கு தலுக்கு இலக்கான தாஜ் மற்றும் ஒபேராய் ஓட்டலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு தொடர்பாக இரு ஓட்டல்களுக்கும் மாந கராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

மும்பையில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி யதில் தாஜ்மகால் மற்றும் ஒபேராய் ஓட்டல்கள் மிகவும் கடுமையாக சேதம் அடைந்தன. இந்த தாக்குதலை தொடர்ந்து ஓட்டலுக்கு அருகில் வாகன நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு காரணங்களையொட்டியும் ஓட்டல் நிர்வாகம் தடுப் புகளை அமைத்து இருக் கிறது.

இந்த தடுப்புகள் ஒரு ஆண்டுக்கும் மேலாக இருப்பதால் போக்கு வரத் துக்கு இடையூராக இருந்து வருகிறது. இதையடுத்து இது தொடர் பாக பொதுமக்கள் அளித்த புகாரினை தொடர்ந்து அவற்றை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக இரு ஓட்டல்களுக்கும் மாநகராட்சிநிர்வாகம் நோட் டீஸ் அனுப்பி இருக்கிறது.

இது தொடர்பாக மாநகராட்சி கூடுதல் கமிஷனர் ஏ.கே.சிங் அளித்த பேட்டியில்,‘ ஓட்டலுக்கு வெளியே ஏன் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கேட்டு இரண்டு ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்களிட மிருந்து இன்னும் பதில் வரவில்லை. பாதுகாப்பு காரணங்களுக் காக வைத்திருப்பதாக கூறப்பட்டாலும் அதற்கு போக்குவரத்து பிரிவு போலீசாரிடம் முறைப்படி அனுமதி பெறவேண்டும்என்று தெரிவித்தார்.

தற்போது இரு ஓட்டல்களிலும் பழுது பார்க்கும் பணி முடிவடைந்து விட்டது. நோட்டீசுக்கு இரண்டு நாளில் பதில ளிக்காவிட்டால் தாங் களாகவே அவற்றை அகற்ற வேண்டி வரும் என்று மாநகராட்சிநிர்வாகம் தனது நோட்டீசில் தெரிவித்து இருந்தது.