Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ.100 அபராதம் வசூல் குரோம்பேட்டையில் அதிரடி

Print PDF

தினகரன் 09.06.2010

பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ.100 அபராதம் வசூல் குரோம்பேட்டையில் அதிரடி

தாம்பரம், ஜூன் 9: குரோம்பேட்டை, பல்லாவரத்தில் பொது இடத்தில் புகை பிடித்தவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சுகாதார ஆயவாளர்கள் மூர்த்தி, பாலாஜி சிங் மற்றும் பல்லாவரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சிவக்குமார், மாரிமுத்து ஆகியோர் நேற்று குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் உள்ள கடைகள், பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பிடிக்க திடீர் சோதனை நடத்தினர்.

குரோம்பேட்டை முதல் பல்லாவரம் வரை ஜிஎஸ்டி சாலையிலும், குரோம்பேட்டை சிஎல்சி லேன், பல்லாவரம் ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளிலும் பொது இடங்களில் புகை பிடித்த 6 பேரிடம் தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது. புகை பிடித்துக் கொண்டிருந்த சிலர், அதிகாரிகளை பார்த்ததும் சிகரெட்டை கீழே போட்டுவிட்டு ஓடினர்.

மேலும், ‘புகை பிடிக்க தடைஎன்ற வாசகம் எழுதிய அட்டைகளை வைக்காத கடைகள், பள்ளிகளுக்கு அருகே சிகரெட் விற்ற கடைகள் என 33 கடைகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. எச்சரிக்கை படங்கள் அச்சிடப்படாத சிகரெட் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பள்ளி அருகே சிகரெட் விற்றால், கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.