Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சியில் சென்னை கவுன்சிலர்கள் ஆய்வு

Print PDF

தினகரன் 10.06.2010

பெங்களூர் மாநகராட்சியில் சென்னை கவுன்சிலர்கள் ஆய்வு

பெங்களூர், ஜூன் 10:சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் குழு பெங்களூர் மாநகராட்சி பள்ளி உள்பட பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பெங்களூர் பெருநகர் மாநகராட்சியின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சென்னை மாநகராட்சி தி.மு.கழக கொற டா ஏகப்பன் தலைமையில் தி.மு.., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இடது சாரிகட்சி, விடுதலை சிறுத்தை, பகுஜன்சமாஜ் கட்சியை சேர்ந்த 36 கவுன்சிலர்கள் இரண்டு நாள் பயணமாக பெங்களூர் வந்தனர்.

நேற்று முன்தினம் மேயர் எஸ்.கே.நடராஜ் உள்பட அதிகாரிகளை சந்தித்து மாநகராட்சியின் நிர்வாக செயல்பாடு குறித்து விவரம் பெற்றனர். கவுன்சிலர் குழு நேற்று மாநகராட்சி சார்பில் பராமரித்து வரும் லால்பாக் உள்பட முக்கிய பூங்காளை பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து கஸ்துரிநகரில் இயங்கி வரும் மாநகராட்சி பி.யு. கல்லூரி, மாநகராட்சி பெண்கள் உயர்நிலை பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டனர். பின் மாநகராட்சி மருத்துவமனையின் சேவையை ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து இஸ்கான் கோயில், விவேக்நகரில் உள்ள குழந்தை ஏசு கோயில்க ளை பார்வையிட்டனர். பெங்களூர் வந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு முன்னாள் மேயர் பி.ஆர்.ரமேஷ், கர்நாடக மாநில தி.மு.கழக அமைப்பாளர் ந.இராமசாமி மற்றும் வன்னிய குல ஷத்திரி சங்க தலைவர் நா.மகாலிங்கம் ஆகியோர் உடன் இருந்து ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு நேற்று மாலை விமானம் மூலம் கொல்கத்தா மாநகராட்சியை ஆய்வு செய்ய புறபட்டு சென்றனர்.