Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிக்கு ஆணையம் எச்சரிக்கை அற்ப காரணத்துக்காக ஆர்.டி.ஐ. மனுவை நிராகரிக்கக்கூடாது

Print PDF

தினகரன் 10.06.2010

மாநகராட்சிக்கு ஆணையம் எச்சரிக்கை அற்ப காரணத்துக்காக ஆர்.டி.. மனுவை நிராகரிக்கக்கூடாது

புதுடெல்லி, ஜூன் 10: பெயரை சரியாக குறிப்பிடவில்லை என்ற அற்ப காரணத்துக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வரும் மனுக்களை நிராகரித்தல் கூடாது என்று மாநகராட்சிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி அனுப்பப்பட்ட மனு ஒன்று மத்திய தகவல் தொடர்பு அதிகாரிஎன்று பெயரிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. எஸ்.சி.அகர்வால் என்பவர் இந்த மனுவை அனுப்பி இருந்தார். ஆனால், இதுபோன்ற பதவி எதுவும் மாநகராட்சியில் இல்லை என்று கூறி அந்த மனுவை மாநகராட்சி அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து மத்திய தகவல் ஆணையத்திடம் அகர்வால் முறையிட்டார். இதை விசாரித்த மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சியில் இருக்கும் மக்கள் தொடர்பு அதிகாரிதான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு பதில் பெற்று தருபவர் என்று பொதுமக்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் ஒவ்வொரு துறையிலும் தகவல் பெற்று தருபவரை பற்றி முழுமையாக மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வரும் மனுக்களை படித்தவுடனேயே தெரிந்து கொள்ள முடியும் என்பதால், முகவரியில் அதிகாரி பதவியின் பெயர் தவறாக எழுதப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்பு அதிகாரிக்கு அனுப்பி வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற அற்ப காரணத்துக்காக மனுவை திருப்பி அனுப்புவது கூடாது.தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வரும் மனுக்களை பிரித்து பார்த்து உரிய அதிகாரியிடம் சேர்க்க ஒரு அலுவலரை மாநகராட்சி நியமிக்க வேண்டும். இவ்வாறு ஆணையர் உத்தரவிட்டார்.