Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாரியம் அதிரடி நடவடிக்கை குடிநீர் திருடினால் 3 ஆண்டு சிறை சட்டத்தை அமல்படுத்த பறக்கும் படை

Print PDF

தினகரன் 17.06.2010

வாரியம் அதிரடி நடவடிக்கை குடிநீர் திருடினால் 3 ஆண்டு சிறை சட்டத்தை அமல்படுத்த பறக்கும் படை

பெங்களூர், ஜூன் 17: மாநகரில் குடிநீர் திருடினால் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்ற அரசாணையை தீவிரமாக செயல்படுத்த வாரியம் முடிவுசெய் துள்ளது.

குடிநீர் திருட்டு மற்றும் சட்ட விரோத இணைப்புகளால், மாநகரில் சுமார் 34 சதவீத குடிநீர் கணக்கில் வரமால் குடிநீர் வாரியத்துக்கு பெரும் வரி இழப்பு ஏற்படுகிறது.

இதற்கு தீர்வாக கடும் நடவடிக்கை எடுக்கும் வகை யில் ,பெங்களூர் குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிக்கல் வாரிய சட்டம் 1965, 180வது பிரிவில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை தீவிரமாக அமல்படுத்த வாரியம் முடிவு செய்துள் ளது.

இது குறித்து பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் பி.பி.இராமமூர்த்தி கூறுகை யில்:மாநகரில் நாள் ஒன் றுக்கு ஆயிரத்து 129 எம்.எல்.டி. குடிநீர் தேவைப்படுகிறது. இதில் தினமும் 410 எம்.எல்.டி. குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்காக வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், வாரியத்தின் அனுமதி பெறாமல், பல இடங்களில் பைப்புகளில் திருட்டுத்தனமாக குடிநீர் எடுத்து வருவதால் வரி இழப்பு ஏற்படுகிறது.

எனவே, இதை தடுக்கும் முயற்சியாக, பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட, பெங்களூர் குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய சட்ட திருத்த மசோத 2009க்கு, ஏப்ரல் 14ம்தேதி ஆளுநர் பரத்வாஜ் ஒப்புதல் வழங்கினார்.

அதன் பிறகு இதற்கான அரசாணை எப்ரல் 16ம்தேதியன்றே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தீவிரமாக அமல் படுத்தும் முயற்சியில் வாரியம் இறங்கி யுள்ளது.

வாரிய சட்டம் 1964, 180வது பிரிவு, குடிநீர் திருட்டுக்கு உடைந்தையாக செயல்படும் வாரிய ஊழியர் மற்றும் லைசென்ஸ் பெற்ற பிளம்பருக்கு மட்டுமே தண் டனை வழங்க முடியும்.

ஆனால், தற்போதுள்ள சட்ட திருத்தத்தின் கீழ், 180&ணீ பிரிவின்படி, குடிநீர் திருடுவது பெரும் குற்றமாக கருதப்படுவதுடன், இதில் ஈடுபடும் நுகர்வோருக்கு அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் வழங்க முடியும்.

குடிநீர் திருட்டை ஆய்வு செய்து, போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தயாரித்து வழங்கும் வகையில், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் வாட்டர் இண்ஸ்பெக்டர் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படை வருவாய் துறையில் உள்ள அமலாக்க பிரிவுக்கு முற்றிலும் மாறுபட்டது. குடிநீர் திருட்டை கண்டுபிடித்து, அதற்கு அபராதத்துடன் கட்டண வசூல் செய்வதில் மட்டுமே அமலாக்க பிரிவு ஈடுபட்டு வருகிறது.

அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே குடி நீர் திருட்டை கண்டுபிடிக்கும் பணியை துவக்கி விட்டனர். இவர்கள் அளிக்கும் தகவ லின் அடிப்படையில், வாரி யத்தின் பறக்கும் படையினர் ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கை, ஆதாரங்களுடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.