Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாளை., கே.டி.சி.நகரில் குடிநீர் இணைப்பு முறைப்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Print PDF

தினமலர் 18.06.2010

பாளை., கே.டி.சி.நகரில் குடிநீர் இணைப்பு முறைப்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

திருநெல்வேலி : பாளை., கே.டி.சி.நகரில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புக்களை அபராதம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புக்களில் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தவர்களுக்கு அபராதத் தொகை விதித்து அந்த குடிநீர் இணைப்புக்களை முறைப்படுத்த அரசு உத்தரவிட்டது. வீடுகளுக்கான குடிநீர் இணைப்புக்களை முறைப்படுத்த ரூ.10 ஆயிரம் அபராத தொகையும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரமும் அபராதமாக வசூலிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பாளை., கே.டி.சி.நகரில் 100க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புக்கள் முறைகேடாக எடுக்கப்பட்டு, துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு அபராத தொகையை வசூலித்து மீண்டும் இணைப்பு வழங்க நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன்படி கே.டி.சி.நகர், அப்துல்ரகுமான் நகர், ஹவுசிங்போர்டு காலனி, ரகுமத்நகர், வி.எம்.சத்திரம் பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்கியவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, சாமுவேல் செல்வராஜ், கருப்பசாமி, .ஆர்.., வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 10 குழுக்களாக ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குடிநீர் இணைப்புக்களை முறைப்படுத்த வீடுகளில் நோட்டீஸ் விநியோகித்தனர். அதில் குடிநீர் டொசிட், பாதாள சாக்கடை கட்டணம், அபராத தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.

கே.டி.சி.நகர் குடிநீர் திட்டத்தில் மட்டும் 126 வீடுகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குடிநீர் இணைப்புக்களை முறைப்படுத்திக் கொள்ளவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் இணைப்புக்களை முறைப்படுத்தாதவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.