Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் ஸ்வீட் குடோனுக்கு சீல்

Print PDF

தினகரன் 18.06.2010

நெல்லையில் ஸ்வீட் குடோனுக்கு சீல்

நெல்லை, ஜூன் 18: நெல்லை கைலாசபுரம் நடுத்தெருவில் ஒரு ஸ்வீட் ஸ்டாலுக்கான கேக் மற்றும் ரொட்டி, தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வரு கிறது. இங்கிருந்து வெளியாகும் அதிகளவிலான புகையினால் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சுகாதார கேடு, சுவாச கோளாறு ஏற்பட்டு வருவ தாக மாநகராட்சிக்கு புகார் கள் வந்தன. கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அப்பகுதியில் நேரடி ஆய்வு நடத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு சுகா தார சீர்கேட்டை விளைவிக் கும் வகையில் அக் குடோன் இருப்பதாக குழு அறிக்கையில் தெரிவித்தது. மாநகராட்சி அதிகாரிகள், அதன் உரிமையாளரை 3 முறை விசாரணைக்கு வரு மாறு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் நேரில் வரவில்லை.

எனவே மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அக்குடோனை இழுத்து மூட முடிவு செய்தனர். நேற்று தச்சை மண்டல உதவி கமிஷனர் சுல்தானா தலைமையில், உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், உணவு ஆய் வாளர் சங்கரலிங்கம், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் ரத்னகுமார், பாலமுருகன், பாலபபிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் கைலாசபுரத்திற்கு சென்றனர். மாநகராட்சி நோட்டீசை அளித்து அக்குடோனுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

சுகாதார அதிகாரிகள் அதிரடி

நெல்லை கைலாசபுரத்தில் சுகாதார சீர்கேடுடன் செயல்பட்ட ஸ்வீட் குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.