Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் பாரபட்சமின்றி ரத்து

Print PDF

தினகரன் 22.06.2010

அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் பாரபட்சமின்றி ரத்து

நெல்லை, ஜூன் 22: அனுமதி பெறாத குடிநீர் இணைப்பு களை பாரபட்சமின்றி ரத்து செய்ய வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் சுப்பிரமணி யன் தலைமையில் நடந்தது. துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பை யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் விஸ்வநாத பாண்டி யன், சுப.சீதாராமன், மைதீன், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

தியாகராஜன்: செம் மொழி மாநாடு சிறக்க மார்க்சிஸ்ட் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள் கிறோம். பொறியியல், மருத்துவம் ஆகியவற்றை தமிழில் படிக்க இம்மாநாடு வழி கோல வேண்டும்.

சைபுன்னிசா: எங்களது 37வது வார்டில் வருடத்திற்கு 180 நாட்கள் மட்டுமே தண்ணீர் வருகிறது. மைலக்காதர் தெருவில் தண்ணீர் பிரச்னை காரணமாக பெண்கள் மறியல் நடத்தியுள்ளனர். எனவே அதிகாரி கள் தலையிட்டு குடிநீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும்.

அப்துல்வகாப்: மினி குடிநீர்த் தொட்டிகள், அடிபம்புகள் கோடை காலத்தில் அமைக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு குடி நீர் தொட்டிக்கு ரூ.25 ஆயிரத்திற்கும் குறைவாக மதிப் பீடு தயாரிக்கப்பட்டதால் கான்ட்ராக்டர் யாரும் இப் பணியை எடுக்க முன்வரவில்லை. திட்டமதிப்பீடு தொகை குறைவாக உள்ளது. பேட்டை ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவர் பணியில் தொடர மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டல தலைவர் மைதீன்: மொத்த வருமானத் தில் 49 சதவீதம் மட்டுமே ஊழியர்கள் சம்பளத்திற்கு செலவிட வேண்டும் என்ற விதியால் மாநகராட்சியில் புதிய ஊழியர்கள் நியமனம் இல்லை. இதை தளர்த்தக்கோரி ஏற்கனவே மண் டல தலைவர்கள் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தை அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாநகராட்சியில் மாதம்தோறும் 10 பேர் ஓய்வு பெற்று வருகின்றனர். ஆனால் புதிய ஆட்கள் நிய மனம் இல்லை. புதிய பணியாளர்களை நியமிக்காமல் பணிகள் நடக்க வாய்ப்பில் லை.

துரை: பாளையில் கடந்த 2 தினங்களாக பல பகுதிகளுக்கு தண்ணீர் இல்லை. இது தொடர்பாக மாணவர் கள் கூட போராட்டம் நடத்தியுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரவில் லை என்று கூறி நாம் ஒதுங்கி விட முடியாது. நெல்லை மாநகராட்சியில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க தெளி வான திட்டங்கள் இல்லை. அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை பாரபட்சமின்றி ரத்து செய்ய வேண் டும். அதற்கு வார்டு வாரி யாக நாம் குழு அமைக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க அதிகாரிகள் முன் வர வேண் டும்.

பேபிகோபால்; வஉசி மைதானத்தில் அமைச்சர் துவங்கி வைத்த நடைப் பாதை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பிரான்சிஸ்: கேடிசி நகரில் 9 சாலைகள் சந்திக் கும் இடத்தில் தினமும் விபத்துகள் நடந்து வருகின் றன. இதை சரி செய்ய மாநகராட்சி சார்பில் அங்கு மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.