Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன் 22.07.2010

அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

மஞ்சூர், ஜூலை 22: அனுமதி பெறாமல் உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க கீழ் குந்தா பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீழ்குந்தா பேரூராட்சியிலுள்ள 15 வார்டுகளில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார்அலுவலகங்கள் அமைந்துள்ளது.

இவற்றுக்கு பொது குழாய் மூலம் மட்டுமின்றி தனி இணைப்புகளாகவும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தனியார் குடிநீர் இணைப்பு மூலம் பேரூராட்சிக்கு கணிசமான அளவு வருவாய் கிடைத்து வருகிறது. கீழ்குந்தா பேரூரா ட்சி நிர்வாகத்தின் முறை யான அனுமதியை பெறா மல் சிலர் முறைகேடாக குடிநீர் இணைப்புகளை பெற்றுள்ளனர்.

இதனால், பேரூராட்சிக்கு கணிசமான அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. வறட்சி காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு முறை யான குடிநீர் இணைப்புகளுக்கு கூட குடிநீரை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. முறையற்ற குடிநீர் இணைப்புகளால் வறட்சி காலத்தில் குடிநீர் பற்றாக்குறை மேலும் பன்மடங்காக அதிகரிக்கிறது. அனுமதி பெறாமல் முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள், மன்ற உறுப்பினர்கள் அடிக்கடி பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீழ்குந்தா பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் ஆஷா தலைமையில் நடந்தது. துணை தலைவர் பாபு, செயல் அலுவலர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர்.அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டித்து குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பெரும்பாலான கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

பேரூராட்சி பகுதியில் அனுமதியின்றி முறைகேடாக உள்ள அனைத்து குடிநீர் இணைப்புகளையும் கண்டறிந்து உடனடியாக துண்டிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க பேரூரா ட்சி பணியாளர்களு க்கு உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் கெட்சிகட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பல்வேறு நோக்கு கட்டிடம், வார்டுகளில் தடுப்பு சுவர், நடைபாதை அமைத்தல், 5வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் பொது கழிப்பிடம் அமைத்தல், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.