Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சீரான குடிநீர் விநியோகத்திற்கு தென்காசியில் ரூ.19 லட்சத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள்

Print PDF

தினகரன் 23.07.2010

சீரான குடிநீர் விநியோகத்திற்கு தென்காசியில் ரூ.19 லட்சத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள்

தென்காசி, ஜூலை 23: தென்காசியில் தாமிரபரணி குடிநீர் சீராக விநியோகம் செய்வதற்காக ரூ.19 லட்சம் செலவில் இரண்டு புதிய ஜெனரேட்டர்களை நேற்று சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் இயக்கி வைத்தார்.

தென்காசி நகராட்சிக்கு கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ, தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ஆண்டு தோறும் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். இதன் மூலம் வார்டு வாரியாக பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மின்தடை ஏற்பட்டாலும் தாமிரபரணி குடிநீர் சீராக விநியோகம் செய்வதற்காக தென்காசி மற்றும் மாதா புரம் ஆகிய இடங்களில் தலா ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இரண்டு ஜெனரேட்டர்கள் வாங்கப் பட்டுள்ளன.

இவற்றை நேற்று கருப்ப சாமி பாண்டியன் எம்எல்ஏ இயக்கி வைத்தார். நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம் தலைமை வகித்தார். ஆணை யாளர் செழியன், நகர்மன்ற துணை தலைவர் இப்ராகிம் முன்னிலை வகித்தனர். பின்னர் கருப்பசாமி பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், "தென்காசி நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற் காக தாமிரபரணி மற்றும் குற்றாலம் குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது.

இதில் தாமிரபரணி குடிநீர் தென்காசி, ஊர்க்காடு, மாதாபுரம் உள்ளிட்ட நான்கு இடங் களில் பம்பிங் செய்யப்படு கிறது. இதில் ஏதாவது ஒரு உபமின் நிலையத்தில் மின் தடை ஏற்பட்டாலும் குடிநீர் விநியோகம் பாதிக்கும். இதனை தவிர்ப்பதற்காக ஏற்கனவே இரண்டு ஜென ரேட்டர்கள் வாங்கப்பட் டுள்ள நிலையில் தற்போது ரூ.19 லட்சத்தில் மேலும் இரண்டு ஜெனரேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அடுத்த கோடை காலம் வரை தென்காசி நகர மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் சீரான இடை வெளியில் தாமிரபரணி தண்ணீர் கிடைக்கும். குற் றாலம் தண்ணீர் தற்போது அதிகமாக உள்ளதால் தினமும் விநியோகம் செய்யப்படுகிறதுஎன்றார்.

கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சிவபத்மநாதன், நகர செயலாளர் ஆயான் நடராஜன், இஸ்மாயில் பாலாமணி, சாதிர், நட ராஜன், கவுன்சிலர்கள் ராமராஜ், முகமது உசேன், நாகூர்மீரான் மற்றும் மோகன்ராஜ், சுப்பிரமணி யன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.