Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடியிருப்பு திட்ட வீடுகள் பேரூராட்சிக்கும் நீட்டிக்க தீர்மானம்

Print PDF

தினமணி 26.07.2010

குடியிருப்பு திட்ட வீடுகள் பேரூராட்சிக்கும் நீட்டிக்க தீர்மானம்

களியக்காவிளை,​​ ​ ஜூலை 25:​ இந்திரா மற்றும் கலைஞர் குடியிருப்புத் திட்ட வீடுகள்,​​ ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகியவற்றை பேரூராட்சிக்கும் நீட்டிப்புச் செய்ய வேண்டும் என களியக்காவிளை பேரூராட்சிக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

​ ​ ​ ​ கூட்டத்துக்கு,​​ பேரூராட்சித் தலைவி எஸ்.​ இந்திரா தலைமை வகித்தார்.​ துணைத் தலைவர் சலாவுதீன் முன்னிலை வகித்தார்.

​ ​ ​ ​ இக் கூட்டத்தில்,​​ 8-ம் வார்டு உறுப்பினர் என்.​ விஜயேந்திரன்,​​ இந்திரா மற்றும் கலைஞர் குடியிருப்புத் திட்ட இலவச வீடுகளும்,​​ ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணிகளும் அனைத்துப் பகுதி ஏழைகளுக்கும் பயன்பெறும் வகையில்,​​ பேரூராட்சிகளுக்கும் நீட்டிப்பு செய்ய வேண்டும்.​ ​ ​ ​ இல்லையேல்,​​ பேரூராட்சிகளை கிராம ஊராட்சியாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.​ இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

​ ​ ​ தொடர்ந்து,​​ பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிநீர்க் குழாய்களை நீட்டிப்பு செய்தல்,​​ சாலை மேம்பாடு செய்தல் மற்றும் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் உள்ள முக்கியமான சாலை சந்திப்புகளில் 2 சோடியம் விளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

​ ​ ​ கூட்டத்தில்,​​ உறுப்பினர்கள் விஜயானந்தராம்,​​ என்.​ குமார்,​​ ரமா,​​ என்.​ விஜயேந்திரன்,​​ ராயப்பன்,​​ வின்சென்ட்,​​ எம்.எஸ்.ஏ.​ கமால்,​​ தேவராஜ்,​​ ஜெலின் பியூலா,​​ அ.​ ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.