Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விளம்பர பேனர் வைக்க கட்டுப்பாடு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 30.07.2010

விளம்பர பேனர் வைக்க கட்டுப்பாடு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி, ஜூலை 30: பொள்ளாச்சி நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பல விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விளம்பர பேனர்கள் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகரில் பஸ் ஸ்டாண்ட் சுற்றுவட்டாரம், கோவை ரோடு, காந்திசிலை, நியூ ஸ்கீம் ரோடு, தாலுகா அலுவலக ரோடு, மெட்ராஸ் ஓட்டல் ஜங்ஷன், தேர்நிலை உள்ளிட்ட பகுதிகளில் அள வுக்கு அதிகமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள் ளன. பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் மிகுந்த இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர். இதில் பல இடங்களில் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இப்பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் களம் இறங்கியது. அதில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பேனர்களை மட்டும் அகற்றிய நகராட்சி நிர்வாகத்தினர், அரசியல் கட்சியினரின் விளம்பர பேனர்களை போலீசார்தான் அகற்ற வேண்டும் என்று கூறினர்.

போலீஸ் தரப்பில் எந்த ஒரு விளம்பர பேனராக இருந்தாலும் அதை நகராட்சி நிர்வாகம்தான் அகற்ற வேண்டும். அதற்கு பாதுகா ப்பு கொடுப்பது மட்டுமே எங்கள் பணி என்று போலீ சார் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண ஆர்.டி. . அழகிரிசாமி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோ சனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

இதில் ஆர்.டி.. அழகிரிசாமி கூறியதாவது:

நகரின் பல இடங்களில் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்களை வைத்துள்ளீர்கள். இவ்வாறானா விளம்பர பேனர்கள் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் சில அரசியல் கட்சியினர் மாதக்கணக்கில் பெரிய அளவிலான பேனர் களை வைத்துள்ளீர்கள். ஆகவே இன்று முதல் விளம்பர பேனர்கள் வைக்க அரசின் உத்தரவுகள் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பர பேனர்களை வைக்கும் அரசியல் கட்சியினர் போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண் டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடை யூறு இல்லாத இடங்களில் மட்டும் விளம்பர பேனர்கள் வைக்க போலீசாரும், நகரா ட்சி நிர்வாகமும் அனுமதி அளிக்க வேண்டும். விளம்பர பேனர்களின் நீளம், அகலம் மற்றும் உயரம் குறிப்பிட்ட அளவில்தான் இருக்க வேண்டும்.

நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும், நிகழ்ச்சி முடிந்த பிறகு மூன்று நாட்களுக்கும் என மொத்தம் 7 நாட்கள் மட்டுமே விளம்பர பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட நாட்கள் முடிந்ததும் அந்தந்த அரசியல் கட்சினரே முன்வந்து விளம் பர பேனர்களை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகி யோர் இணைந்து உடனுக்குடன் பேனர்களை அகற்ற வேண்டும். இவ்வாறு அழகிரிசாமி தெரிவித்தார்.