Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விளம்பரங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் பிரபல நிறுவனங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினகரன் 03.08.2010

விளம்பரங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் பிரபல நிறுவனங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

புதுடெல்லி,ஆக.3: மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பரங்களை வைத்துள்ள பிரபல நிறுவனங்கள் உடனடியாக பணம் செலுத்த வேண்டும் என்று இ&மெயிலில் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி மாநகராட்சி கடும் நிதிநெருக்கடியில் உள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட முடியாத அளவுக்கு நெருக்கடியில் தத்தளிக்கிறது. இதனால் நிதிநெருக்கடியை சரிக்கட்டஎன்று மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகராட்சி எல் லையில் உள்ள டிடீசி பஸ் நிறுத்தங்கள், டெல்லி மெட்ரோ ரயில் கழக (டி.எம்.ஆர்.சி.) கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களை மாநகராட்சி அதிகாரிகள் பார்த்தனர்.

அதைத் தொடர்ந்து, விளம்பரங்களை வைத்துள்ள சம்பந்தப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இ&மெயிலில் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதில், "தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதற்காக வைக்க ப்பட்டுள்ள விளம்பரத்து க்கான கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் விள ம்பரங்கள் அகற்றப்படும்" என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது.

டிஸ்கவரி சேனல், சாம்சங் நிறுவனம், டைட்டன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், .சி..சி.. வங்கி, சோனி டி.வி. உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த செயலுக்கு நிலைக்குழு உறுப்பினர் ரஜ்னி அப்பி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே விளம்பரத்துக்கான தொகையை டிடீசி, டிஎம்ஆர்சிக்கு செலுத்திவிட்டன. டிடீசியும், டிஎம்ஆர்சி அந்தப் பணத்தை மாநகராட்சியுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. நிலைமை இப்படியிருக்கும்போது, சம்பந்த ப்பட்ட கம்பெனிகளை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? இது முழுக்க முழுக்க சட்டவிரோதம் என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கும்போது, பணம் செலுத்தும்படி இ&மெயில் அனுப்பியதில் எந்தத் தவறும் இல்லை. சம்பந்தப்பட்ட கம்பெனிகளிலிருந்து விளம்பரத்துக்கான கட்டணத்தை பெற்றவுடன், அதில் மாநகராட்சியின் பங்கை அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை" என்றனர்.

இதுபற்றி டிடீசி உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "விளம்பரங்கள் செய்ய கான்ட்ராக்ட் எடுத்துள்ள தனியார் நிறுவனத்திடம்தான் விளம்பரத்துக்கான தொகையை சம்ப ந்தப்பட்ட கம்பெனிகள் அளித்துள்ளன. அந்த நிறுவனம் முழுத்தொகையையும் எங்களுக்கு வழங்கவில்லை. அவ்வாறு முழு தொகையும் வந்தபிறகு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை நிச்சயம் செலுத்துவோம்" என்றார்.