Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

4,257 செக்குகள் பணம் இல்லாமல் திரும்பின சொத்து வரி கட்டாதவர்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை

Print PDF

தினகரன் 04.08.2010

4,257 செக்குகள் பணம் இல்லாமல் திரும்பின சொத்து வரி கட்டாதவர்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை

புதுடெல்லி, ஆக. 4: சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது மாநகராட்சி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நிலைக்குழு தலைவர் எச்சரித்துள்ளார்.

மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா நிருபர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2003&04ம் ஆண்டில் இருந்ததைவிட, 2009&10ம் ஆண்டில் 17,470 பேர் அதிகரித்துள்ளனர். ஆனால், வரி வசூலோ கு¬ றந்து விட்டது. 2003&04ல்

ரூ776.73 கோடி சொத்து வரி வசூல் ஆனது. 2000&10ம் ஆண்டில் ரூ697.75 கோடிதான் வசூலானது.

அதனால், முந்தைய காலத்தில் சொத்து வரி செலுத்தி, தற்போது யாரெல்லாம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்கள், அதை செலுத்தாமல் இருப்பவர்கள் ஆகியோர் மீது மாநகராட்சி சட்டம் 1957ன் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தேவையில்லாமல் சொத்து வரிதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வருவது பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் சொத்து வரிக்காக பெறப்பட்ட 4,257 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டன. கணக்கில் பணம் இல்லாமல் காசோலைகளை கொடு த்தவர்கள் மீதும் மாநகராட்சி சட்டம் மற்றும் செலாவணி விதிகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சட்டப்படி, சொத்துக் களுக்கு அடையாளக் குறிகள் இடப்பட வேண்டும். குறிப்பாக சொத்து வரி செலுத்தியவர்களின் சொத் துகளுக்கு அடையாளக்குறி இட வேண்டும். இந்த நடைமுறை, சொத்து வரியை செலுத்த மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

சொத்து வரியை உயர்த்துவது, புதிய வரிகளை விதிப்பது ஆகியவற்றுக்கு எதிரான கொள்கையைக் கொண்டுள்ளோம். அதனால், சொத்து வரி உயராது. புதிய வரிகளும் வராது. ஆனால், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால், தற்போது நடைமுறையில் இருக்கும் வரிகளை தவிர்த்து மற்ற வழிகளில் மாநகராட்சி நிர்வாகத்தால் போதுமான வருவாயை ஈட்ட முடியும். இவ்வாறு யோகேந்தர் சந்தோலியா கூறினார்.