Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிக்கன நடவடிக்கை தொடர்கிறது மாநகராட்சி ஊழியரிடம் சிம்கார்டு வாபஸ்

Print PDF

தினகரன் 05.08.2010

சிக்கன நடவடிக்கை தொடர்கிறது மாநகராட்சி ஊழியரிடம் சிம்கார்டு வாபஸ்

பெங்களூர், ஆக.5: பெங்களூர் மாநகராட்சி கமிஷனரின் சிக்கன நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள் ளது. அதிகாரிகள் மற்றும் இதர ஊழியர்கள் பயன்படுத்தி வந்த 1,293 பி.எஸ்.என்.எல். குரூப் சிம் கார்டுகளை வாபஸ் பெற்றுள்ளார்.

இது குறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியதாவது: சித்தய்யா மாநகராட்சி கமிஷனராக பதவியேற்ற பிறகு சிக்கன நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். பாட்டில் தண்ணீர், அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களை வாபஸ் பெற்ற அவர் தற்போது அதிகாரிகள் மற்றும் இதர ஊழியர்கள் பயன் படுத்தும் பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகளை திரும்ப பெற்றுள்ளார். இந்த போன் பில்களுக்காக மாநகராட்சி மாதந்தோறும் ரூ.10.5 லட்சம் கட்டணம் செலுத்திவந்தது. இதனால் மாதந்தோறும் ரூ.6.5 லட்சம் மாநகராட்சிக்கு மிச்சமாகிறது.

உதவி பொறியாளர்களிடமிருந்து 184 சிம்கார்டுகளும், வருவாய் ஆய்வாளர்களிடமிருந்து 183 சிம்கார்டுகளும், டிரைவர்களிடமிருந்து 175 சிம்மும், வரி ஆய்வாளர்களிடமிருந்து 163, ஜூனியர் இன்ஜினியர்களிடமிருந்து 101, மேலாளர்களிடமிருந்து 44 உள்பட இன்னும் சில அதிகாரிகளிடமிருந்தும் சிம் கார்டு திரும்ப பெறப்பட்டுள்ளது.

சிம்கார்டுகளை சரண்டர் செய்யாதவர்கள் விரைவில் ஒப்படைக்கவும் கேட் டுக்கொள்ளப்பட்டுள்ள னர். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.